#Breaking: மதுரையில் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு.. மக்கள் அதிருப்தி!

மதுரை மேற்கு தொகுதி மருது பாண்டியர் நகரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்கு இயந்திரம் வேலை செய்யாததால் அங்கு  வாக்குப்பதிவு துவங்க தாமதமானது. தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு, மாலை 7 மணி வரை நடைபெறும். இந்த தேர்தலில் 3,08,38,473 ஆண் வாக்காளர்களும், 3,18,28,727 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6,26,67,200 பேர் வாக்களிக்கவுள்ளனர். இந்த தேர்தலில் வாக்களிக்க … Read more

#ElectionBreaking: திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது முசிறி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று மாலை 7 மணிக்கு தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்தது. இதனைதொடர்ந்து 7 மணிக்கு மேல் தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேறவும், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்டவையில் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது முசிறி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 … Read more

மோடி கூறுவது அபாண்டமான பொய் – மு.க. ஸ்டாலின் விமர்சனம்..!

சட்டப்பேரவையில் அதிமுகவினர் திட்டமிட்டு நாடகமாடினார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது என ஸ்டாலின் தெரிவித்தார். தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் திமுக வேட்பாளர்கள், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, 1989-ல் தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா தி.மு.கவினரால் அவமானப்படுத்தப்பட்டதாக மோடி கூறுவது அபாண்டமான பொய், உயரிய பதவியில் இருப்பதை மறந்து பிரதமர் மோடி பொய் பேசி இருப்பதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அதிமுகவினர் திட்டமிட்டு நாடகமாடினார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது. 1989 மார்ச் 25-ல் கலைஞர் … Read more

“அரசின் கஜானாவை காலி செய்த எடப்பாடி அரசு”- டிடிவி. தினகரன் குற்றச்சாட்டு!

நீர் நிலைகளை தூர்வாரினார்களோ இல்லையோ, அரசின் கஜானாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு நன்றாக தூர்வாரிவிட்டது என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் தொடங்கவுள்ளது. தேர்தல் தொடங்க இன்னும் 10 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியது. அந்தவகையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அமமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாமக்கல் … Read more

ஸ்டெர்லைட் படுகொலைக்கு காரணமான அதிமுக – பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்ட வேண்டும்- மு.க.ஸ்டாலின்!

ஸ்டெர்லைட் படுகொலைகளுக்கு காரணமான அதிமுக – பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பேசிய அவர், தான் 50 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு, மக்களுக்கு பல்வேறு பணிகளை ஆற்றிக்கொண்டிருப்பதாகவும், கொளத்தூர் தொகுதிக்கு மட்டுமின்றி, தமிழகத்திற்கே நான் வேட்பாளர் என கூறினார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மக்கள் மறக்க முடியுமா? … Read more

எல்.முருகனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

எல்.முருகனின் சொத்து மதிப்பு ரூ.2.64 கோடி என்றும், அசையா சொத்து மதிப்பு ரூ.1.14 கோடி என்றும், அசையும் சொத்து மதிப்பு ரூ.1.53 கோடி என்று வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக, அதற்கான தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல் முருகன் போட்டியிடுவதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது. இதனையடுத்து எல்.முருகன், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்பொழுது … Read more

#ElectionBreaking: புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனித்துப் போட்டி!

புதுச்சேரி மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தில் காங்கிரஸ் – திமுக கூட்டணியில் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதில் திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 14 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த மார்க்சிஸ்ட் … Read more

#ElectionBreaking: “வாக்காளர் பாதுகாப்பை உறுதிப்படுத்துக”- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து வேட்பாளர்கள், வேட்புமனுக்களை தாக்கல் செய்து, பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கருங்குளத்தில் பட்டியலின மக்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் … Read more

“பாவம் பாத்தாவது எங்களுக்கு ஓட்டு போடுங்கள்”- சீமான் பேச்சு!

பாவம் பாத்தாவது எங்களுக்கு ஓட்டு போடுங்கள். உலகின் தலைச்சிறந்ததாக தமிழகத்தை மாற்றுவேன் என சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன்காரணமாக வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பின்னர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கடல்தீபனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பேசிய அவர், கடந்த தேர்தலில் … Read more

5 மாநில தேர்தல்.. இதுவரை 331 கோடி ருபாய் பணம், நகைகள் பறிமுதல்- தேர்தல் ஆணையம்!

தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இருந்து ரூ.331 மதிப்பிலான பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தங்களின் வேட்புமனு தாக்கல் செய்தும், பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், கேரளா, புதுச்சேரி, … Read more