தினகரனை கைவிட்ட குக்கர்!தினகரனுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியுள்ளது.  அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்த குக்கர் சின்னத்தை நிரந்தரமாக தங்களுக்கே ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என டிடிவி.தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குக்கர் சின்னம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது.அதில் தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று வாதிட்டது … Read more

தேர்தல் பறக்கும் படையினர் காஞ்சிபுரத்தில் ரூ.3 கோடி பறிமுதல்.

காஞ்சிப்புரம் அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3 கோடியை  பறக்கும் படையினர் பறிமுதல். வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான சிறப்பு ஏற்பாடுகள் தமிழகமெங்கும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும், தங்களது தேர்தல் பணிகளில் முழுவீச்சுடன் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை விதித்துள்ளது. உரிய ஆதாரம் இன்றி கொண்டு செல்லப்படும் படம் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தனர். மேலும் சமூக வலைதள … Read more

தமிழகத்தில் மட்டும் 13.90 கோடி: தேர்தல் ஆணையம் அதிரடி!!

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.இதில் தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:- ‘நாடாளுமன்ற தேர்தலுக்காக இதுவரை 30 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இடைத்தேர்தலுக்கு 3 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். … Read more

அரசியல் கட்சிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி வேண்டுகோள்….

பகல் நேரத்தில் கொளுத்தும் வெயிலில் தேர்தல் பிரசார கூட்டம் நடத்தக் கூடாது. அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்களில் குடிநீர், முதலுதவிவசதிகள் இருக்க வேண்டும். தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, அனைத்து கட்சிகளிலும் தேர்தல் முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழுவீச்சுடன் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் ஆணையம் பல விதிமுறைகளை விதித்துள்ளது. காவல்துறையினருக்கு இது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் … Read more

கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் புதிய கிடுபிடி!!

கூட்டணிக் கட்சிகள் மற்றும் தொகுதி பங்கீடுகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. 48 மணி நேரம் இருக்கையில் எவ்வித மாற்றமும் செய்ய இயலாது என தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக ஏப்ரல் 11ஆம் தேதி ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் உட்பட 91 மக்களவை தொகுதியில் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கூட்டணிக் கட்சிகள் மற்றும் தொகுதி பங்கீடுகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. திமுகமற்றும் … Read more

3 ஆண்டுகள் பணியாற்றிய அதிகாரிகள் மாற்றம்….!!

வருகின்ற மார்ச் மாதம் பாரளுமன்ற தேர்தல் நடைபெற்ற இருக்கின்றது.இந்நிலையில் தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகின்றது.  இதையடுத்து ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் பணியை முடித்த அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் ஆணையம்  உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில் , தமிழகத்தில் ஒரே இடத்தில் 3ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யவேண்டுமென்றும் மாநில தேர்தல் அதிகாரி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்றும் இதன் அறிக்கையை வருகின்ற  ஏப்ரல் … Read more

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு…தேர்தல் ஆணையம் போலீஸில் புகார்…!!

வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யலாம் என கூறிய சையத் சுஜா மீது டெல்லி காவல்துறையில்  தேர்தல் ஆணையம் புகார் அளித்துள்ளது. சைபர் பிரிவு நிபுணரான சையத் சுஜா, 2014-ம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யமுடியும்.கடந்த தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டது என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரம் வடிவமைக்கும் குழுவில் தாம் இடம்பெற்றதாகவும் எனக்கு ஹேக் பண்ணுவது பற்றி எனக்கு தெரியும் என்று லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார். இந்நிலையில் வாக்குப்பதிவு … Read more

வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியாது…தேர்தல் ஆணையம் திட்டவட்டம்….!!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எவராலும் ஹேக் செய்ய முடியாது என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சைபர் பிரிவு நிபுணரான சையத் சுஜா, 2014-ம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.இது பெரும் சர்சையை ஏற்படுத்தியது.அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையம் இது குறித்து விளக்கமளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டத்தை முற்றிலும் மறுத்துள்ளது.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முழு நம்பிக்கையடையதாகவும் தெரிவித்துள்ளது.    

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து தொடர்பாக விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம்…!!

திருவாரூர் தொகுதியில் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த சூழலில் கஜா புயல் நிவாராணப் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்ததையடுத்து, திருவாரூர் ஆட்சியர் நிர்மல்ராஜ் நடத்திய கூட்டத்திலும் இதே கருத்து வலியுறுத்தின. இதனால் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்த  தலைமை தேர்தல் ஆணையம்  கஜா புயல் நிவாரணப் பணிகளை சுட்டிக்காட்டி இடைத்தேர்தலை ரத்து செய்யப்பட்டுள்ளதாக  தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது . கஜா புயல் பாதிப்புகள் இருப்பதால் … Read more

ஷீரடி சாய்பாபாவும் இந்திய வாக்காளர்…!! அஹ்மத்நகரில் வழக்கு…!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஹ்மத்நகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஷீர்டி சாய்பாபாவின் பெயர் மற்றும் கோவில் முகவரி இடம் பெற்றிருந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஹமத்நகர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்காளர் ஆன்லைன் படிவங்களைப் பரிசீலித்தபோது ஷீர்டி சாய்பாபாவைவும் வாக்காளரக பெயர் பட்டியலில் இருப்பதாய் அதிகாரிகள் கண்டுபிடித்து காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சச்சின் மஸ்கா, நயப் தஹ்சில்திலார் (தேர்தல் கிளை) ரஹ்தா புதன்கிழமையன்று காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். மேலும் … Read more