புதிய கல்வி கொள்கை குறித்து நாளை பிரதமர் மோடி உரை…!

தேசிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி நாளை  உரையாற்றுகிறார். தேசிய கல்வி கொள்கை கடந்த 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெறும் நிலையில், மாணவர்களுடன் இந்த புதிய கல்வி கொள்கை குறித்து பிரதமர் மோடி காணொலி வாயிலாக நாளை மாலை 4.30 மணியளவில் உரையாட உள்ளார்.இந்த உரையாடலில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் … Read more

கல்வி கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள் வரலாற்றில் இன்று…!

கல்வி கண் திறந்த இந்தியாவின் கருப்பு வைரம் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் வரலாற்றில் இன்று. ஜூலை 15-ஆம் தேதி 1903 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் சிவகாமி மற்றும் குமாரசாமி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர் தான் இந்தியாவின் கருப்பு வைரம் காமராஜர். ஆறு வயதிலேயே தனது தந்தையை இழந்த இவர், அதன் பின்பதாக தனது தாயுடன் வளர்ந்து வந்துள்ளார். படிக்காத மேதை, தென்னாட்டு காந்தி, பெருந்தலைவர், கருப்பு காந்தி, கருப்பு வைரம் என்றெல்லாம் இவர் அன்புடன் … Read more

“கல்விக்கென தனி வானொலி தொடங்க வேண்டும்” – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

கல்விக்கென தனி வானொலி தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒளி உமிழும் திரையைத் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டும். ஹெட்செட்டுகளை நெடுநேரம் காதில் மாட்டிக்கொண்டும் இருப்பதால் மாணவர்களின் கண்பார்வை, செவி கேட்கும் திறனில் பிரச்னை ஏற்படுகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். தலைவலி, கண் எரிச்சல், கண்களைச் சுற்றி கருவட்டம், சரியான தூக்கமின்மை போன்ற ஆன்லைன் வகுப்புகளின் விளைவுகளை எல்லா குடும்பங்களும் … Read more

9 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து -துணை முதல்வர் மணீஷ் சிசோடியா..!

டெல்லியில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவிப்பு. கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன் கருதி டெல்லி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9 மற்றும் 11 வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக ஏப்ரல் 12 ம் தேதி டெல்லி அரசு 9 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகளை … Read more

தமிழகத்தில் பள்ளி வகுப்புகள் தொடக்கம் – பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!

+1 வகுப்புகளை ஜூன் 3-வது வாரத்தில் தொடங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வந்த நிலையில், இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது, இதையடுத்து தமிழக அரசு ஊரடங்கை பிரப்பித்து அதன் தொற்று பரவலை படிப்படியாக குறைத்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு … Read more

#Wow ! இன்ஜினியரிங் புதிய பிஜி படிப்புகள் தொடக்கம்

AICTE ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல புதிய பிஜி படிப்புகள் தொடக்கம்.இந்திய பொறியியல் பணியாளர்கள் கல்லூரி அறிவிப்பு. இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் இந்தியா இன் ஒரு அங்கமான இன்ஜினியரிங் ஸ்டாஃப் காலேஜ் ஆப் இந்தியா, ஏ.ஐ.சி.டி.இ அங்கீகரித்த பல புதிய பி.ஜி படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் சிவில், பவர், டெலிகாம், போக்குவரத்து, நிதி, எச்.ஆர்.எம், மார்க்கெட்டிங், பிசினஸ் அனலிட்டிக்ஸ் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஏ.ஐ.சி.டி.இ ஆல் அங்கீகரிக்கப்பட்ட 2 ஆண்டு முழுநேர பிஜிடிஎம் படிப்புகளை தொடங்கியுள்ளது. அதில்vபிஜிடிஎம் உள்கட்டமைப்பு, … Read more

பாடத்திட்டங்கள் குறைப்பு – நாளை மறுநாள் முதல்வரிடம் அறிக்கை, அமைச்சர் செங்கோட்டையன்!

பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்ததான அறிக்கை நாளை மறுநாள் முதல்வரிடம் தரப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களின் படிப்பு மற்றும் பாடத் திட்டங்கள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்ததான அறிக்கை நாளை மறுநாள் முதல்வரிடம் கொடுக்கப்படும் எனவும், மேலும் அறிக்கை கொடுக்கப்பட்ட 5 நாளிலேயே பாடத் … Read more

புதிய கல்வி கொள்கை தொடர்பாக இன்று கருத்து கேட்பு… இணையம் மூலம் தெரிவிக்கலாம்

நாடு முழுவதும் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய கல்வி கொள்கை தொடர்பாக, மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்களிடம், நிபுணர் குழு  இன்று(செப்.,24) கருத்து கேட்கிறது. மத்திய அரசு நாடு முழுவதும்  புதிய தேசிய கல்வி கொள்கை தயாரித்து அமல்படுத்த உள்ளது. தமிழகத்தில், இதை அமல்படுத்துவது குறித்து, அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்களிடம், பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்க, உயர் கல்வி மற்றும் பள்ளி கல்வி துறை சார்பில், தனித்தனியே நிபுணர் … Read more

திறப்பா???!நவம்பரில் கல்லூரிகள் -விளக்கும் ரமேஷ் பொக்ரியால்!

நவ.,1 முதல் கல்லுாரிகளை திறக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், வாரத்தில் ஆறு நாட்கள் கல்லுாரியை நடத்தவும்,குளிர் மற்றும் கோடை கால விடுமுறை நாட்களை ரத்து செய்யவும்  பரிந்துரைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மார்ச் 25 ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கு முன்பே நாடு முழுதும், மார்ச், 16ம் தேதி முதல், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டது. இதன்பின் பல தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகின்றது. கொரோனா பரவலால், நடப்பு கல்வியாண்டில் திட்டமிட்டபடி, … Read more

அரசு கலைக்கல்லூரிகளில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள்.!

அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரிகளிலும் ஆன்லைன் வழியாக வகுப்புகள் 3-ந்தேதி அதாவது நாளை தொடங்கப்பட வேண்டும். கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில், தற்போது ஆறாம் கட்ட ஊரடங்கு நேற்று தொடங்கி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மாணவர்களின் கல்வியாண்டு பாதிக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகளை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. … Read more