தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்மாதிரியான மாநிலமாக உள்ளது – முதலமைச்சர் பழனிசாமி

தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்மாதிரியான மாநிலமாக உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.325 கோடி மதிப்பில் அடியனூத்து கிராமத்தில் 8.61 ஹெக்டர் பரபரப்பளவில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அப்பொழுது அவர் பேசுகையில்,தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்மாதிரியான மாநிலமாக உள்ளது. ரூ.2,850 கோடி மதிப்பில் சுகாதார திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம் .தமிழகத்தில் கொரோனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது  என்று பேசினார். 

LKG , UKG மாணவர்களுக்கு விடுமுறைதான்.! இன்று முறையான அறிவிப்பு வரும்-முதலமைச்சர்

எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு விடுமுறை தான் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.   கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் படிக்கும் LKG, UKG மாணவர்களுக்கு வருகின்ற 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.  பின் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் LKG, UKG மாணவர்களுக்கு விடப்பட்ட விடுமுறை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் இந்த குழப்பங்களுக்கு மத்தியில் முதலமைச்சர்  பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.அதாவது, கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவது … Read more

எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களை தூண்டி விடுகின்றன- முதலமைச்சர் பழனிசாமி

எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களை தூண்டி விடுகின்றன என்று  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.பேரவையில், என்.பி.ஆருக்கு எதிராக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்ற  எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,   என்.பி.ஆர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களை தூண்டி விடுகின்றன.சிறுபான்மையின மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறீர்கள்.உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். பதட்டமான சூழலை உருவாக்க வேண்டாம் என்று பேசினார். 

தமிழகத்தில் ரூ.5.72 கோடியில் 25 புதிய தொடக்க பள்ளிகள் தொடங்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் 25 புதிய தொடக்க பள்ளிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.அதன்படி இன்று நடைபெற்ற பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவிப்புகளை அறிவித்தார்.அவரது அறிவிப்பில், வரும் கல்வி ஆண்டில், ரூ.5.72 கோடியில் 25 புதிய அரசு தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும். மேலும், 10 அரசு தொடக்கப் பள்ளிகள் ரூ.3.90 கோடியில் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.   

கொரோனா முன்னெச்சரிக்கை – முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.  கொரோனா வைரஸ்  சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது இந்தியா வரை பரவியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து  முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் தலைமை செயலாளர் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர் , உதயகுமார் , … Read more

வேறு வழியில்லை ! 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்து முதலமைச்சர் விளக்கம்

இன்று தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்பொழுது, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு  பொதுத்தேர்வு தான் சரி என்றால் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இல்லாதது ஏன்? என்று திமுக உறுப்பினர் பொன்முடி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், உலக அளவிலான போட்டிகளில் தமிழக மாணவர்கள் சாதிக்க பொதுத்தேர்வு அவசியம். வேறு வழியே இல்லாமல் தான் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்தோம் என்று தெரிவித்தார், 

11 மருத்துவ கல்லூரிக்கு அனுமதி பெற்று அதிமுக அரசு சாதனை – முதலமைச்சர் பழனிசாமி

நாகையில் புதிய துறைமுகம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  நாகையில் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி.இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், 11 மருத்துவ கல்லூரிக்கு அனுமதி பெற்று அதிமுக அரசு சாதனை படைத்துள்ளது. நாகையில் புதிய துறைமுகம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது . டெல்டா மாவட்டங்களில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை. விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை நனவாக்க புதிய மருத்துவ … Read more

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும்  மார்ச் மாதம் 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் “சர்வதேச மகளிர் தின” வாழ்த்துச் செய்தி pic.twitter.com/0Q57woaztC — DIPR TN (@TNGOVDIPR) March 7, 2020 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,வாழ்வில் எதிர்வரும் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு தடை கற்களை படிக்கற்களாக மாற்றி சாதனை படைக்கும் பெண்களாக … Read more

அன்பழகனின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு – அதிமுக இரங்கல்

உடல்நலக்குறைவு காரணமாக திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன் மரணமடைந்துவிட்டார்.இந்நிலையில்  திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவிற்கு அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது. அதிமுக சார்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று தெரிவித்துள்ளனர். 

அன்பழகன் மறைவு – முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.இந்நிலையில் அன்பழகன் மறைவிற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.   இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அன்பழகன் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திமுகவினருக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார்.