தமிழகத்தில் ஏப்ரல் 30ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு.! – அரசு அறிவிப்பு.!

தமிழகத்தில் நாளை நிறைவடைய இருந்த ஊரடங்கு  வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் ஏற்கனவே நாளை வரை நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாளை முடிவடைய இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தததால் ஊரடங்கை நீட்டிக்க கோரி பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு … Read more

அரசாங்கத்தை திமுக செயல்பட வைக்கும் – மு.க.ஸ்டாலின்

அரசாங்கத்தை திமுக செயல்பட வைக்கும் என்று திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில்,கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகத்தை மீட்க முதலமைச்சர் பழனிசாமி அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து செயல்பட வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் தட்டிக் கேட்கக் கூடாதா? இதில் என்ன சந்தர்ப்பவாதம் இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.அரசாங்கம் முறையாக மக்களுக்கு செயல்படாவிடில் அரசாங்கத்தை திமுக செயல்பட வைக்கும் என்று தெரிவித்துள்ளார்.  #CoronaVirus தடுப்புக்கான #Lockdown 18 நாட்களை … Read more

பத்திரிகையாளர்களுக்கு ரூ.3000 நிதியுதவி வழங்கப்படும் – முதல்வர் பழனிசாமி

பத்திரிகையாளர்களுக்கு ரூ.3000 நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேளச்சேரியில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், கொரனா தாக்கம் உள்ள சூழலிலும் தொடர்ந்து பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு ( அரசு அங்கீகார அட்டை வைத்திருப்போர் ) ரூ 3000 நிதியுதவி வழங்கப்படும். ஜி.எஸ்.டி. உள்ளிட்ட அரசின் வருவாய் குறைந்துள்ள போதிலும் அரசு ஊழியர்களுக்கு முழுமையாக சம்பளம் வழங்கப்படும்.வெளி மாநிலங்களில் தங்கி இருப்பவர்கள், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாயை இம்மாதம் இறுதி வரை … Read more

என்ன நிலை என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும் – முதலமைச்சர் பழனிசாமி

என்ன நிலை என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.    சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ,பல்வேறு மாநிலங்களில் பாராட்டப்பட்ட அம்மா உணவக திட்டம் இன்று மக்களுக்கு கைகொடுக்கிறது. அம்மா உணவகங்களில் மட்டும் தான் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி தரப்படுகிறது.   தமிழகத்தில் 17 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் … Read more

தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.1,00,00,000 கோடி ஒதுக்கிய தினகரன்

கொரோனா வைரஸ் அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிக்காக விருப்பம் உள்ளவர்களை நிதி அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.அதன்படி பல்வேறு தரப்பினரும் நிதி உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில்  கொரோனா பெருந்தொற்று நோய் தடுப்புப் பணிகளுக்காக தமிழக அரசுக்கு … Read more

வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ நடவடிக்கை-முதல்வர் பழனிசாமி

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்து. இதனால் அத்தியாவசியமான தேவைகள் தவிர மற்ற நேரங்களில் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்து கடை, உணவகங்கள் (பார்சல் மட்டும் ) ஆகியவை வழக்கம்போல இயங்கலாம் எனவும், மளிகை கடைகள், காய்கறிக்கடைகள், பெட்ரோல் பல்க் ஆகியவை குறிப்பிட்ட நேரத்தில் இயங்கவும் அனுமதிக்கப்பட்டது.  இந்நிலையில் பிறமாநில தொழிலாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களே உணவு, இருப்பிடம் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும் மாவட்ட … Read more

கொரோனா பரவலைத் தடுப்பது காலத்தின் கட்டாயம் -முதலமைச்சர் பழனிசாமி உரை

கொரோனா பரவலைத் தடுப்பது காலத்தின் கட்டாயம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் மட்டும் கொரோனவால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் மதுரையில் உயிரிழந்தார்.இதற்குஇடையில் கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் இன்று முதல் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  தொலைக்காட்சிவாயிலாக உரையாற்றுகிறார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி உரையாற்றி வருகிறார்.அவரது உரையில்,கொரோனா காட்டுத் தீ போல பரவுகிறது. 21 நாட்கள் ஊரடங்கை கடைபிடியுங்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள். … Read more

#BREAKING : இன்று இரவு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி உரை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி இன்று இரவு 7 மணிக்கு உரையாற்றுகிறார். தமிழகத்தில்  மட்டும் கொரோனவால்  23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் மதுரையில் உயிரிழந்தார்.இதற்குஇடையில்  கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் இன்று முதல் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில் இன்று இரவு 7 மணிக்கு தொலைக்காட்சிவாயிலாக உரையாற்றுகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி .கொரோனா தடுப்பு நடவடிக்கை … Read more

BREAKING: மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு .!

தமிழகத்தில் மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று முதலமைச்சர்  பழனிச்சாமி அறிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை அமைந்துள்ளது.நாகையில் இருந்து மயிலாடுதுறையை பிரிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது வந்தது .இதனையடுத்து நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க அரசு பரீசீலனை செய்து வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமியும் தெரிவித்தார்.     இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி நாகப்பட்டினம் மாவட்டம் இரண்டாக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று … Read more

#BREAKING: கொரோனா தடுப்பு நடவடிக்கைளை முடுக்கிவிட ரூ.60 கோடி ஒதுக்கீடு – முதல்வர் அறிவிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைளை முடுக்கிவிட ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வரும் வருகிறது. தற்போது இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது.கொரோனா வைரசால் இந்தியாவில்  இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை முடுக்கிவிட ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.