தமிழ் சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு தமிழக முதல்வர் வேண்டுகோள்!

நேற்று சென்னை YMCA மைதானத்தில் வேல்ஸ் பட நிறுவனத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. அந்நிறுவனம் தயாரித்திருந்த L.K.G , கோமாளி, பப்பி ஆகிய படங்கள் நல்ல வெற்றியை பதிவிட செய்ததால், அதன் வெற்றிவிழாவினை நேற்று பிரமாண்டமாக தயாரிப்பாளர் ஐசரி கணேசன் நடத்தினார். இவ்விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும், திரை பிரபலங்கள், படக்குழுவினர் என பலர் கலந்துகொண்டனர்/. இதில்,  படக்குழுவினருக்கு சிறப்பு நினைவு பரிசினை தமிழக முதல்வர் வழங்கினார். இவ்விழாவில் … Read more

தமிழக முதல்வர் தலைமையில் மெகா ஹிட் படத்தின் வெற்றி கொண்டாட்டம்! எங்கே? எப்போது?

தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேசன் அவர்கன் வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக இந்த வருடம் எல்.கே.ஜி, கோமாளி, பப்பி என மூன்று படங்கள் வெளியாகின. இதில் மூன்று படமும் ஹிட்டாகின. அதிலும் கோமாளி படம் மெகா ஹிட்டாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில், எல்.கே.ஜி படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்து அப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். பிரபு என்பவர் இயக்கி இருந்தார். அரசியல் படமாக உருவான இப்படம் பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து வெளியான … Read more

முதலமைச்சர் பழனிசாமியை திடீரென்று சந்தித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி

தமிழக முதலமைச்சர் பழனிசாமியை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி சந்தித்துள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில்  இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் மகளிர் பாதுகாப்பு திட்டங்களுக்கு ஒதுக்கிய மத்திய நிதி குறித்து ஆலோசனை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கீழடியில் ரூ.12.21 கோடி செலவில் அமைக்கப்படுகிறது – முதலமைச்சர் பழனிசாமி

ரூ12.21 கோடியில் கீழடி அகழாய்வு பொருட்களை கொண்டு உலக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கீழடி ஆராய்ச்சியின் மூலம் தமிழர்களின் பண்பாடு மற்றும் பெருமையும் உலகளவில் பிரபலமாகி வருகிறது.இதனை தொடந்து அங்கு சுற்றுலாவிற்காக பல தரப்பினரும் வந்து சென்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு நாள் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், சிவகங்கை திருப்புவனம் அருகே உள்ள கொந்தகையில் ரூ12.21 கோடியில் கீழடி அகழாய்வு பொருட்களை கொண்டு உலக அருங்காட்சியகம் அமைக்கப்படும்.கீழடி அகழாய்வு தமிழர் … Read more

சுஜித்தின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ 10 லட்சம், அதிமுக சார்பில் ரூ 10 லட்சம் நிதியுதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

சுஜித்தின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ 10 லட்சம், அதிமுக சார்பில் ரூ 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். சுஜித்தின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அதிமுக சார்பில் ரூ.10 லட்சம், முதல்வர் நிவாரண நிதியில் இருந்து … Read more

கனமழை எச்சரிக்கை! முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு

கனமழையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி  உத்தரவிட்டுள்ளார். தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அங்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள தென் மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மழை, அணைகளின் நிலவரங்கள் குறித்து சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும என்று தெரிவித்துள்ளார்.நிவாரண மையங்களில் மக்களை தங்க வைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் பருவ மழையின் தாக்கத்தை உன்னிப்பாக … Read more

5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருது ! ரூ.40,000 பரிசுத்தொகை ! தமிழக அரசு உத்தரவு

கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.2020 ஜனவரி 26-ஆம் தேதி குடியரசுத்தினத்தன்று காந்தியடிகள் காவலர் விருதுகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்குகிறார். விருதுடன் பரிசுத்தொகையாக தலா ரூ.40,000 வழங்கப்படும் என்று  தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு! முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் புதிய மின்சார வாகன கொள்கை அறிக்கையை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில்  ,31.12.2022 வரை தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வாகன தயாரிப்பாளர்களுக்கு 15 சதவீதம் முதலீட்டு மானியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் இந்த அறிவிப்பால் மின்சார வாகனங்களின்  விலை  கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.

13 நாட்கள் பயணம் !நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் பழனிசாமி

தனது 13 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு  முதலமைச்சர் பழனிசாமி நாளை  சென்னை திரும்புகிறார். அரசு முறை பயணமாக முதலமைச்சர் பழனிசாமி  இங்கிலாந்து,அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்படி முதலில் முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து சென்றார்.முதலமைச்சர் முன்னிலையில் சுகாதாரத்துறை சார்பில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.இதனையடுத்து முதலமைச்சர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார்.அமெரிக்காவில் உள்ள நியூ யார்க்கில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. பின்னர் துபாய்க்கு … Read more

எந்தெந்த தமிழக அமைச்சர்கள் எந்தெந்த நாட்டிற்கு செல்ல உள்ளனர்?! தகவல் இதோ!

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இப்போது லண்டனில் உள்ளார். அவரோடு சுகாதாரதுறை அமைச்சர் விஜய பாஸ்கரும் சென்றிருந்தார். இதனைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்களும் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளனர். சிலர் சென்றுவிட்டனர். தமிழக முதல்வர் செப்டம்பர் 1மற்றும் 2ஆம் தேதிகளில் அமெரிக்கா செல்கையில் அவருடன் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, உடுமலை ராதாகிருஷ்னன், போன்றோர் செல்ல உள்ளனர்.  அதேபோல வனத்துறை அமைச்சர் … Read more