ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்..!

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று காலை 8 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அங்குள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 என்ற அளவில் பதிவாகி உள்ளதாக ஆப்கானிஸ்தான் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தலைநகர் காபுலில் இருந்து 316 கி.மீ. தெற்கில் அமைத்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#BREAKING: மிசோரமில் நிலநடுக்கம்..!

மிசோரமில் சம்பாய் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது . மிசோரம் மாநிலம் உள்ள சம்பாய் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக எந்த வகையான உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படவில்லை. எனினும், நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடத் தொடங்கினர். சிறிது நேரம் கழித்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். … Read more

#EarthQuake : வங்கதேசம் மற்றும் மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

 வங்கதேசம் மற்றும் மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம். இன்று அதிகாலை 5:15 மணியளவில் வங்கதேச – மியான்மர் எல்லையான சிட்டகாங்கில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிஃடர் அளவுகோலில் 6.3-ஆக பதிவாகியுள்ளது. மேலும், மிசோரத்திலும், தென்சவாலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில், 6.1 ஆக பதிவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்;ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு..!

ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்திற்கு தென்கிழக்கே 110 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே உலகின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.அந்த வகையில்,ஜப்பானிலும்,கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.பாகிஸ்தானில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளிவிலான நிலநடுக்கத்தில் சுமார் 22 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து,நேற்று ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள வானுட்டு தீவுப்பகுதியில்  இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் … Read more

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்..!

இன்று ஆப்கானிஸ்தான் நாட்டில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இன்று அதிகாலை 5.31 மணியளவில் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காபூலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 22 கிலோமீட்டர் தொலைவில் உணரப்பட்டுள்ளது.  மேலும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

அதிர்ச்சி…பாகிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…20 பேர் பலி;200 பேர் படுகாயம்..!

பாகிஸ்தானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் உள்ளது ஹர்னாய் என்ற நகரத்திலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இதனையடுத்து,நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக, அந்தப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். மேலும், நிலநடுக்கம் ஏற்பட்டு வீடுகள் இடிந்து … Read more

ஆப்கானிஸ்தானில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் …!

ஆப்கானிஸ்தானில் பைசாபாத் பகுதியில் 5.0 அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள வடகிழக்கு நகரமாகிய பைசாபாத் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி காலை 5.50 மணிக்கு ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் பைசாபாத் பகுதியிலிருந்து சுமார் 106 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்நிலநடுக்கம் 1.37 நீளமும் 150 கிலோ மீட்டர் ஆழமும் கொண்டிருந்ததாகவும் தேசிய புவியியல் … Read more

அருணாச்சலப்பிரதேசத்தில் சற்று நேரத்திற்கு முன் நிலநடுக்கம்..!

அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் இன்று காலை 10.15 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் காலை 10.15 மணிக்கு உணரப்பட்டது. நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் படி, நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக அளவிடப்பட்டுள்ளது. எனினும், இதுவரை நிலநடுக்கத்தால் உயிர் சேதம் அல்லது பொருட்சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. முன்னதாக, செப்டம்பர் 25-ஆம் தேதி அன்று மாநிலத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் காலை 10.11 … Read more

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று ஜப்பானில் உள்ள இஷினோமாகி பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 54 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் சேதம்  ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றும் கடலோரப்பகுதியில் … Read more

ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று ஜப்பானில் கடலோரப்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 400 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் சேதம்  ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.