டி.ஆர்.டி.ஓ மற்றும் இந்திய ராணுவம் சார்பில் நடத்தப்பட்ட விரைவு எதிர்வினை ஏவுகணை சோதனை வெற்றி!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் இந்திய ராணுவம் சார்பில், ஒடிசா கடற்கரையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை வீச்சு (ஐடிஆர்) சந்திப்பூரில் இருந்து விரைவு எதிர்வினை மேற்பரப்பு ஏவுகணை (க்யூஆர்எஸ்ஏஎம்) அமைப்பின் ஆறு விமான சோதனைகளை இன்று வெற்றிகரமாக முடித்தன. இந்திய இராணுவத்தின் மதிப்பீட்டு சோதனைகளின் ஒரு பகுதியாக இந்த விமான சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனைகளின் போது, ​​அதிநவீன வழிகாட்டுதல் மற்றும் வார்ஹெட் செயின் உள்ளிட்ட கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் ஆயுத அமைப்பின் பின்-பாயின்ட் … Read more

#Helinamissile:இலக்கை துல்லியமாக தாக்கும் “ஹெலினா” ஏவுகணை சோதனை- அசத்திய இந்தியா!

காஷ்மீர்,லடாக்கில் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையான ‘ஹெலினா’ ஹெலிகாப்டரில் இருந்து ஏவி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) ஆகியவற்றின் விஞ்ஞானிகளின் குழுக்கள் கூட்டாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஹெலினா ஏவுகணையானது டிஆர்டிஓவின் ஏவுகணைகள் மற்றும் வியூக அமைப்புகள் (எம்எஸ்எஸ்) கிளஸ்டரின் கீழ் ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தால் (டிஆர்டிஎல்) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை ஏழு முதல் எட்டு கிலோமீட்டர் … Read more

நவீன நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி!

நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன டார்பிடோவை ஏவ உதவும் தொலைதூர சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ரக டார்பிடோ ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. ஒடிசாவின் பாலசூர் கடற்கரையில் சூப்பர்சோனிக் ஏவுகணையுடன் இணைத்து ஏவப்பட்ட டார்பிடோ வெற்றிகரமாக இலக்கை தாக்கியது. நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறனை மேம்படுத்த சூப்பர்சோனிக் ஏவுகணை உதவும் என்றும் டிர்டிஓவின் நவீன ரக டார்பிடோ தற்போது பயனில் உள்ளவற்றின் வரம்பிற்கு அப்பாலுள்ள இலக்கையும் தாக்கும் … Read more

ஒடிசாவில் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி..!

ஒடிசாவில் தரையிலிருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளது.  இந்த ஆகாஷ் ஏவுகணை சோதனை பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பால் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, இன்று (வெள்ளிக்கிழமை) ஒடிசாவின் கடற்கரை பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் புதிய தலைமுறை ஆகாஷ் என்ஜி ஏவுகணை சோதனை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. இதனை பாதுகாப்பு துறை நிறுவனங்களுடன் இணைந்து டி.ஆர்.டி.ஓ தயாரித்துள்ளது. இந்த ஆகாஷ் ஏவுகணை 2.5 மாக் … Read more

ஒடிசாவில் இலகுரக பீரங்கி எதிர்ப்பு சோதனை வெற்றி..!

இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட இலகுரக பீரங்கி எதிர்ப்பு சோதனை வெற்றியடைந்துள்ளது. ஒடிசா கடற்கரையில் இன்று சோதிக்கப்பட்ட ஏவுகணை எடைகுறைந்த ராணுவ டேங்கர்களை தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வான் இலக்கை தரையிலிருந்து தாக்கக்கூடிய இந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையில் அதிநவீனமாக உள்ள மினியேட்டரைஸ் அகச்சிவப்பு இமேஜிங் சீக்கருடன் மேம்பட்ட ஏவியோனிக்ஸ் உடன் … Read more

தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG கொரோனா மருந்து….! விலை எவ்வளவு தெரியுமா…?

டிஆர்டிஓ மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப் இணைந்து தயாரித்துள்ள  2 DG கொரோனா மருந்தின் விலை ரூ.990 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வைரசால் பாதிக்கப்படுவோரை மீட்டெடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மருந்து பாதுகாப்பு துறையின், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில், தண்ணீரில் கலந்து … Read more

மகிழ்ச்சியான செய்தி!கொரோனா தொற்றை குணப்படுத்தும் டி.ஆர்.டி.ஓ(DRDO )வின் பவுடர் வடிவிலான 2 டிஜி மருந்து! இன்று வெளியானது..!

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக டி.ஆர்.டி.ஓ(DRDO )வின் பவுடர் வடிவிலான ‘2 டிஜி’ மருந்தின் முதல் தொகுப்பை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் இணைந்து இன்று வெளியிட்டுள்ளனர். கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கிய 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) மருந்தின் முதல் தொகுப்பை இன்று காலை 10.30 மணிக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய … Read more

#Breaking: பவுடர் வடிவில் கொரோனா தடுப்பு மருந்து- மத்திய அரசு ஒப்புதல்..!

கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை பவுடர் வடிவில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கண்டுபிடித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது தீவிரமாகப் பரவி வருகிறது.இந்நிலையில்,கடந்த ஒரே நாளில் கொரோனா தினசரி பாதிப்பானது 4 லட்சத்தை எட்டியுள்ளது.மேலும்,கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,187 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால்,கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை பவுடர் வடிவில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் … Read more

கடற்கரையில் நடந்த சோதனையில் ஆகாஷ் ஏவுகணை வெற்றி..!

இந்திய ராணுவத்திற்கு தேவையான தடவாளங்களை தயாரிக்கும் டிஆர்டிஓ ஆகாஷ்-என்ஜி (New Generation) ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்த ஏவுகணையின் சோதனை இன்று ஒடிசாவில் நடைபெற்றது. ஒடிசா கடற்கரையில் நடைபெற்ற பரிசோதனையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. இதைத்தொடர்ந்து, ஆகாஷ்-என்ஜி ஏவுகணை தரையில் இருந்து வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் சோதனை வெற்றிகரமாக முடிவடைந்ததாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

ஏவிய பிறகு 8 நிமிடங்கள் கழித்து நிறுத்தப்பட்ட நிர்பே ஏவுகணை.!

33 நாட்களில் உருவாக்கப்பட்ட இந்த நிர்பே ஏவுகணை வங்காள விரிகுடாவில் ஏவப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இன்று ஒடிசாவின் சோதனை நிலையத்திலிருந்து 800 கி.மீ தூரம் நிர்பே கப்பல் ஏவுகணையை வங்காள விரிகுடாவில் ஏவியது. ஆனால், சில நிமிடங்கள் கழித்து சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்த முடிவு செய்தது. இந்த ஏவுகணை காலை 10.30 மணிக்கு சோதனை நிலையத்திலிருந்து ஏவப்பட்டது என்று ஒரு அதிகாரி … Read more