இந்தந்த இடங்களில் கூட்டணியை வீழ்த்தி வெற்றி பெற்ற திமுக..!

நேற்று திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு குறிப்பிட்ட சில இடங்களை ஒதுக்கீடு செய்தது. இதைதொடர்ந்து, கூட்டணி கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு தங்களது வேட்பாளர்களை அறிவித்தனர். இன்று மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் திமுக வேட்பாளர்கள் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதன்படி, தருமபுரி: விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட பொ.மல்லாபுரம் பேரூராட்சித் தலைவர் … Read more

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா!

தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட சென்னை சட்டப்பேரவை செயலாளரிடம் வேட்புமனு அளித்தார் திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா. தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களில் ஒரு இடத்துக்கு மட்டும் செப். 13ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அதிமுக எம்பி முகமது ஜான் 2021 மார்ச் 23-ஆம் காலமானதை அடுத்து அந்த இடம் … Read more

திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வாக்களித்தார்…!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான தனது வாக்கை பதிவு செய்தார் திமுக வேட்பாளர் மருதுகணேஷ். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும் என்பது தான் திமுகவின் கோரிக்கை எனவும்,அதேபோல் ரூ.6,000 அல்ல ரூ.60,000 கொடுத்தாலுமே ஆர்.கே.நகர் மக்கள் ஏமாறமாட்டார்கள் எனவும் வாக்களித்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். source : dinasuvadu.com