27 வேணும்., 22 தான் முடியும் – திமுக – காங்கிரஸ் இடையே தொடர் இழுபறி.!

27 இடங்களை ஒதுக்குமாறு திமுகவிடம் காங்கிரஸ் கட்சி கேட்பதாகவும், 22 வரை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. திமுக, காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு நாளை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனிடையே நேற்று வரை சட்டப்பேரவையில் 18 தொகுதிகள் வரை ஒதுக்குவதாக கூறி வந்த திமுக, தற்போது சற்று முன்னேறி 22 வரை தருவதற்கு முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் ஆரம்பத்தில் 35 இடங்கள் கேட்டார்கள், பின்னர் படிப்படியாக குறைந்து 30 வரை … Read more

திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் கிடையாது – தினேஷ் குண்டுராவ்

திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் கிடையாது என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் அக்கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், திமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் கிடையாது என்றும் விரைவில் திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்து நல்ல முடிவு எட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, திமுக – காங்கிரஸ் இடையே தொடர் பேச்சுவார்த்தை நடத்தியும் கூட இதுவரை … Read more

திமுக – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை.!

சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே பேச்சுவார்த்தை. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் 4 பேர் குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை பொறுத்தவரை அவர்கள் வரும் … Read more

தொடர் இழுபறி., இன்று இரவுக்குள் திமுக – மதிமுக தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம்.!

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு இன்று இரவுக்குள் தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகிறது என்று கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் மதிமுக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மதிமுக சார்பில் 8 தொகுதிகள் கேட்கப்படும் நிலையில், 5 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து தொகுதி பணங்கிடு பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்து வந்தது. இம்மாதம் 12ம் தேதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான நாள் தொடங்குகிறது. அதற்குள்ளாக தொகுதி பங்கீட்டை … Read more

பாஜகவிடம் இருந்து எதிர்கட்சிகளை காப்பற்ற வேண்டும்., அதற்கான பந்து திமுகவிடம் தான் இருக்கிறது – கேஎஸ் அழகிரி

தொகுதி பங்கீடு குறித்து திமுக தான் முடிவு செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, மத்திய பாஜக அரசும், மாநிலத்தில் அதிமுக அரசும் தோல்வியை தழுவ வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியான சிந்தனைகளை கொண்டுள்ளது என கூறியுள்ளார். பாஜகவிடம் இருந்து இந்தியாவை காப்பாற்றுவது மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகளையும் காப்பாற்ற வேண்டிய கடமை இருப்பதாக நான் … Read more

#BREAKING: காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகள் ஒதுக்க திமுக முடிவா?

காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் காங்கிரஸ் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தரப்பில் ரந்திப் சுர்ஜிவாலா, உம்மன் சாண்டி ஆகியோர் ஏற்கனவே திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். … Read more

தலைமை எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைக்க வேண்டும் – விசிக தலைவர் திருமாவளவன்

தலைமை எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு தருமாறு விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் தொல் திருமாவளவன், சட்டமன்ற தேர்தலில் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என கூறியுள்ளார். தேர்தல் தொடர்பாக விசிக இன்னும் ஒரு முடிவை எட்டவில்லை என்றும் தொடர்ந்து திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகிறோம் எனவும் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். வேட்பாளர் குறித்த முடிவுக்கும் … Read more

தொகுதி பங்கீட்டில் இழுபறி., தனி சின்னத்தில் தான் போட்டி – வைகோ அதிரடி

வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனிசின்னத்தில் தான் போட்டியிடும் என அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சமரசம் செய்ய திமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ஆகியோர் சந்தித்து, அவசர ஆலோசனை நடத்தினர். மதிமுக சார்பில் 8 தொகுதிகள் கேட்கப்படும் நிலையில், 5 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் … Read more

#ElectionBreaking: வைகோவுடன் திமுக முன்னாள் அமைச்சர்கள் அவசர ஆலோசனை.!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து, திமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் அவசர ஆலோசனை. திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் நேற்று உடன்பாடு ஏற்படாத நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சமரசம் செய்ய திமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மதிமுக சார்பில் 8 தொகுதிகள் கேட்கப்படும் நிலையில், 5 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மார்ச் 3ல் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் – தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ்

நாளை கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், மார்ச் 3ல் காங்கிரஸ் கட்சியுடனான 2ம் கட்ட பேச்சுவார்த்தை – திமுக  திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு நாளை மறுநாள் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குண்டுராவ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு திமுக, காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் திமுக சொன்னதை விட கூடுதல் தகுதிகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் … Read more