முதலமைச்சர் பழனிசாமி ஸ்டாலினின் கேள்விக்கு சட்டப்பேரவையில் பதில் !

ஒக்கி புயல் குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் பிரின்ஸ் பேச்சுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார் . அவர் கூறிய பதில் , புயல் சின்னம் உருவாகும் முன்பே மீனவர்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதி மூலம் தகவல் கொடுக்கப்பட்டது.30.11.2017 வானிலை ஆய்வு மையத்தில் புயல் சின்னம் குறித்த தகவல் பெறப்பட்டது. புயல் சின்னம் குறித்த தகவல் பெறப்பட்ட பின்னர் மீனவ மாவட்டங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது . அரசின் நடவடிக்கையின் மூலம் பல்வேறு மாநிலங்களில் கரை சேர்ந்த 1,124 … Read more

சட்டசபையில் வெளிநடப்பு செய்தது ஏன் என்று விளக்கம்!

ஆளுநர் ஆய்வை வரவேற்கும் தமிழக அரசின் நடவடிக்கை வேதனை அளிப்பதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெரும்பானமையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடாததால் வெளிநடப்பு செய்ததாக ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.பெரும்பான்மை இல்லாமல் அ.தி.மு.க அரசு நீடிப்பதை ஆளுநர் அனுமதிப்பதாக எனவும்  குற்றச்சாட்டு.அ.தி.மு.க அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை ஆளுநர் உறுதிப்படுத்த வேண்டும். பெரும்பான்மை இல்லாத அரசின் கொள்கைகளை உரையாக ஆளுநர் வாசிப்பது ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் செயல் எனவும் அ.தி.மு.க அரசுக்கு 111 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாக தேர்தல் ஆணையம் … Read more

திமுகவின் ஒருதலைபட்சமான அறிக்கை வருத்தமளிக்கிறது!

இதுதொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக செயல்தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், நேற்று (6.1.2018) என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை உடனே பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது, அவரிடம் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு இதுவரை எடுத்துள்ள பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தெரிவித்து, போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஊதியம் குறித்த கோரிக்கைகளை … Read more

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி முதல்வருடன் ஸ்டாலின் பேச்சு!

போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். முதல்வர் பழனிசாமியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய ஸ்டாலின் அவர்கள் அந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். பேச்சுவாரத்தை மூலம் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். போக்குவரத்து தொழிலாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். source: dinasuvadu.com

அண்ணா தொழிற்சங்கங்கள் மூலம் பேருந்து இயக்க திமுக செயல்தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசு போக்குவரத்து கழகங்கள் மக்களின் நலன் கருதி அண்ணா தொழிற்சங்கம் மூலம் ஓட்டுநர்களையும், நடத்துநர்களையும் வைத்து பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. இதனை எதிர்த்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறுகையில், ‘அண்ணா தொழிற்சங்கம் மூலம் பேருந்துகளை இயக்க முடிவு செய்தால், நெருப்புக்குள் கைவிட்ட குழந்தையின் நிலை தான் ஏற்படும்’ என்று போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். source : dinasuvadu.com

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா! கமலஹாசன் கண்டனம்…..

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டதற்கு கமலஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி தரப்பில் ஒவ்வொரு வாக்குக்கும் ரூ.6,000 தரப்பட்டது என்று கூறியுள்ளார். சுயமாக வளர்ந்த சுயேட்ச்சை ரூ.2,000 தந்து ஒவ்வொவொரு ஒட்டுக்கும் விலை நிர்ணயம் செய்துள்ளார். மேலும் அதிக விலை நிர்ணயித்த சுயேட்சைக்கு பொத்தானை வாக்காளர்கள் அலுத்தியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். source: dinasuvadu.com

தூத்துக்குடி அருகே உள்ள ஆத்தூரில் 46 லட்சம் மதிப்பிலான திட்டபணிகளை நேரில் ஆய்வு!

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் மற்றும் புன்னக்காயல் பகுதியில்  46 லட்சம் மதிப்பில் இரண்டு திட்டங்களின்   பணியை திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில்  ஆய்வு செய்தார்…. ஆத்தூரில் உள்ள  தைக்காதெருவில் 20இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை  மற்றும்  4இலட்சம் மதிப்பில் சின்டெக்ஸ் டேங்க் அமைப்பு .புன்னக்காயல் பகுதியில் 22 இலட்சம் மதிப்பில் 5 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆகிய பணிகள் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் … Read more

துரைமுருகன் தமிழக அரசு மீது கடும் விமர்சனம்!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து 16 லட்சம் ரூபாய் செலவில் கால்வாய் புதியதாக அமைக்கும் பணிகளை துரைமுருகன் துவங்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ஒதுக்கிய நிதியை, தமிழக அரசு பயன்படுத்தாத  தகவல் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என கூறினார். மேலும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் முழுவதும் நஷ்டத்தில் இயங்குவதற்கு நிர்வாக திறமையின்மையே காரணம் என்றும், இப்படியே சென்றால் அரசு போக்குவரத்துகழகமே இல்லாத நிலை உருவாகும் எனவும் … Read more

தேர்தல் பத்திரங்கள் என்ற புதிய திட்டம் !பீதியில் அரசியல் கட்சிகள் ..நன்கொடைக்கு கடிவாளம் …

அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளை வரன்முறைப்படுத்தும் வகையில், கடந்தாண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில், மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, எலெக்ட்ரல் பான்ட்  எனப்படும் தேர்தல் பத்திரங்கள் முறை கொண்டுவரப்படும் என்றார். இந்நிலையில், இதுதொடர்பான கேள்வி ஒன்றிற்கு, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, செவ்வாய்க்கிழமை, மக்களவையில், எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க வகை செய்யும் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வரையறைகளை மத்திய அரசு இறுதி செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய … Read more

திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்!அடுத்தது என்ன ?

அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்திக்கவுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.. திமுக தலைவர் கருணாநிதியை இன்று மாலை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க உள்ளதாக தகவல். கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ரஜினி மும்மரமாக ஈடுபட்டுள்ள நிலையில் சந்திப்பு நடக்கிறது.உடல்நலம் குறித்து விசாரிக்கவும், ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கவும் கருணாநிதியை ரஜினி சந்திக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏற்கனேவே அவர் ஆளுங்கட்சியை விமர்சித்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது …. … Read more