பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் !திருநாவுக்கரசர்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இன்றைய மே(21) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: பெட்ரோலின் விலை லிட்டருக்கு 28 பைசா உயர்ந்து ரூ.79.47 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு 27பைசா உயர்ந்து ரூ.71.59 ஆக விற்பனை செய்யப்பட்டுவருகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. நேற்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் … Read more

கோவை அருகே சாக்குமூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் கண்டெடுப்பு!

 கழிவுநீர்க் கால்வாயில் கோவை சிங்காநல்லூர் குளத்தேரி அருகே சாக்கு  மூட்டையில்  கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஜெயந்தி என்பவர் கடந்த 18ந் தேதி வீட்டில் இருந்து மாயமானதாக அவரது கணவர் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில்,  சிங்காநல்லூர் குளத்தேரி அருகே உள்ள கழிவுநீர்க் கால்வாயில் சாக்கு மூட்டையில் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார், அழுகிய நிலையில் கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்டவாறு … Read more

எடியூரப்பா கர்நாடகத்தில் ஆட்சிக்கு வர எடுத்த முயற்சி பாஜகவுக்கு இந்தியா முழுவதும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது!ஈஸ்வரன்

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன்,கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று எடியூரப்பா எடுத்த முயற்சி பாஜகவுக்கு இந்தியா முழுவதும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது என்று  தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பேசிய அவர், ஆனைமலை-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

சோனியா, ராகுல், காங். நிர்வாகிகள் ராஜீவ் நினைவிடமான வீர் பூமியில் அஞ்சலி!

காங்கிரஸ் தலைவர்கள்,முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுதினத்தை முன்னிட்டு அவரது நினைவிடமான வீர் பூமியில்  அஞ்சலி செலுத்தினர். கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டு வெடிப்பில் ராஜீவ் கொல்லப்பட்டார். அவரது நினைவுநாளான இன்று, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். … Read more

திமுக மீனவ சமுதாயத்திற்கு என்றென்றும் பாதுகாப்பு அரணாக விளங்குகிறது! மு.க.ஸ்டாலின்

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்,மீனவ சமுதாயத்திற்கு என்றென்றும் பாதுகாப்பு அரணாக விளங்கும் ஒரே கட்சி திராவிட முன்னேற்ற கழகம் மட்டும்தான் என்று  தெரிவித்துள்ளார். நாகையில் திமுக மாநில மீனவர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் நாட்டுக்காக பாடுபடக்கூடிய கட்சி திமுக என்றார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

உரிய நீர் காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் கிடைக்கும்!துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளதால், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் உரிய நீர் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். தி.மு.க. நடத்தும் அனைத்து கட்சி கூட்டமோ, போராட்டமோ தற்போது தேவையில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்தார் முதல்வருக்கும் தமக்கும் எந்த பிணக்கும் இல்லை என்றும், எல்லா நிகழ்ச்சிகளிலும் இருவரும் கலந்துகொள்ள வேண்டியதில்லை என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு … Read more

உத்தரகாண்ட் வனப்பகுதியில் பற்றியெரியும் காட்டுத்தீ! பொதுமக்கள் மூச்சு திணறலால் அவதி!

பெரும் தீ விபத்து  உத்தரகாண்ட் மாநிலத்தில் ஸ்ரீநகர் வனப்பகுதியில் ஏற்பட்டிருக்கிறது. பற்றியெரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கார்வால் வன மண்டலத்திற்கு உட்பட்ட, ஸ்ரீநகர் வனப்பகுதியில், கடந்த 4 தினங்களுக்கு முன், காட்டுத்தீ ஏற்பட்டது.  கடும் புகைமூட்டத்துடன் பற்றியெரியும் காட்டுத்தீயால், வனப்பகுதியை ஒட்டி வசிப்பவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பே இறுதியானது!முதலமைச்சர் பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளதை உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெளிவாகக் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 14 புள்ளி ஏழு ஐந்து டிஎம்சி தண்ணீர் குறைப்பு தவிர, ஏற்கெனவே நடுவர் மன்றத் தீர்ப்பில் உள்ள அத்தனை அம்சங்களையும் செயல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் டாப் 10-ல் இந்தியா!

இந்தியா உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில், 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. AfrAsia வங்கி சார்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தனிநபர்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும், அவர்களின் சொத்துக்களின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டும் பட்டியல் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசுகளின் பொருளாதார பலம் கணக்கில் கொள்ளப்படவில்லை, என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பிரிட்டன் 4-வது இடத்திலும், ஜெர்மனி 5வது இடத்திலும், இந்தியா 6வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா … Read more

டெல்லியில் கேப்சூல்களில் கொக்கைன் போதைப் பொருளை அடைத்து வயிற்றில் கடத்திவந்த பெண் கைது!

50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கொக்கைன் போதைப் பொருளை தென் அமெரிக்காவில் இருந்து  விழுங்கி கடத்திவந்த பிரேசில் நாட்டு இளம் பெண்ணை அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 14ஆம் தேதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், பிரேசில் பெண்ணை தடுத்தி நிறுத்தினர். பின்னர், அவரை, சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்தபோது வயிற்றினுள் ஏராளமான கேப்சூல்கள் இருப்பது தெரியவந்தது. வயிற்றுக்குள் இருந்த 106 கேப்சூல்கள் … Read more