பீகாரில் மொத்தத்தை விட அதிக மதிப்பெண்கள்!தேர்வு எழுதாத பாடங்களுக்கும் மதிப்பெண்!குளறுபடியால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள்

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் பீகாரில் சில மாணவர்களுக்கு சில பாடங்களில் மொத்த மதிப்பெண்ணைவிட அதிக மதிப்பெண் வழங்கியிருப்பதும், தேர்வே எழுதாத ஒருசிலருக்கு மதிப்பெண்கள் வழங்கியிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் பள்ளித் தேர்வு வாரியம் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களில் 53விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களில் கொள்குறி வினாவிடைப் பகுதியில் மொத்த மதிப்பெண்ணான 35க்குப் பதில் சில மாணவர்களுக்கு 37, 38 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் உயிரியல் பாடத்தில் தேர்வெழுதாத மாணவிக்கு … Read more

புதுச்சேரி ஜிப்மர் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

புதுச்சேரியில் உள்ள  ஜிப்மர் மருத்துவக்கல்லூரி நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவக்கல்லூரியின் புதுச்சேரி மற்றும் காரைக்கால் கிளையில் உள்ள 200 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு ஜூன் -3ம் தேதி நடைபெற்றது. 1 லட்சத்து 54 ஆயிரத்து 491 பேர் எழுதிய இந்த நுழைவுத்தேர்வுக்கான முடிவுகள்  www.jipmer.puducherry.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வில் வெற்றி பெற்றோருக்கான கலந்தாய்வு ஜூன் 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் … Read more

சென்னையில் சோகம்!காதல் தம்பதி குழந்தையின்மையால் தூக்கிட்டுத் தற்கொலை!

 குழந்தை இல்லாத ஏக்கத்தில் சென்னையில் இளம்பெண்ணும், மனைவியைப் பிரிய மனமில்லாத அவரது கணவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். சென்னை தீவுத்திடல் அருகே உள்ள சத்யா நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த சுகன்யா என்பவரை கடந்த 4 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாததால், உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு செல்வதை சுகன்யா தவிர்த்து வந்துள்ளார். நேற்று மாலை, தனது வேதனையை வெளிப்படுத்திய சுகன்யாவுக்கு ஆறுதல் கூறிவிட்டுச் சென்ற … Read more

குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் இரண்டாவது நாளாக குளிக்கத் தடை!

சுற்றுலா பயணிகள் தென்மேற்கு பருவமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால்  குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையால் தென்காசி, செங்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் குளுமையான சூழல் நிலவிவருகிறது. இந்நிலையில் குற்றாலம் வனப் பகுதியில் பலத்த மழை பெய்துவருவதால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள நீர் தடுப்பு வளையத்தைத் தாண்டி விழுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ஆய்வில் அதிர்ச்சி தகவல்!இந்தியாவில் ​நிலத்தடி நீரில் அதிகரிக்கும் யுரேனியம்!நோய் பரவ வாய்ப்பு

விஞ்ஞானிகள் இந்தியாவின் 16 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீரில் கடுமையான யுரேனியக் கலப்பு இருப்பதாக  கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் 16 மாநிலங்களில் இருக்கும் நிலத்தடி நீரில் உள்ள யுரேனியத்தின் அளவு குறித்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.இந்தியாவில் குடிநீருக்கும், பாசனத்துக்கும் ஆதாரமாக இருக்கும் நிலத்தடி நீரில் யுரேனியத்தின் அளவு பரவலாக அதிகரித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் 324 கிணறுகளில் உள்ள நீரில் யுரேனியத்தின் அளவு … Read more

இந்த தீபாவளி தல தீபாவளியா?தளபதி தீபாவளியா ?தீபாவளி ரேஸில் ஜெயிக்கப்போவது யார்?

அஜித்தும், விஜய்யும் தான் தமிழ் சினிமாவில் தற்போது உச்ச மற்றும் மாஸ் நடிகர்கள் என்பார்கள். அவர்களுடைய படங்கள் வெளிவருகிறது என்றாலே திரையரங்குகள் திருவிழா போல காட்சியளிக்கும். அவரை நம்பி உள்ள தயாரிப்பாளருக்கும் பணமழை கொட்டும்.   தற்போது இரண்டு நடிகரும் பிசியாக உள்ளார்கள். அந்த வகையில் தற்போது தளபதி விஜய் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் “விஜய் 62” படத்தில் நடித்து வருகின்றார். இவர்களது கூட்டணியில் வெளியான இரண்டு படங்களுமே வெற்றியடைந்ததால் இந்த படத்தின் மீது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. தல அஜித் இயக்குனர் … Read more

விழுப்புரம் அருகே வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பு பொருட்கள் எரிந்து நாசம்!

பல லட்சம் ரூபாய் மதிப்பு பொருட்கள்  விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமாகின. கச்சேரி சலையில் உள்ள கோபுரம் வணிக வளாகத்தில் செயல்படும் வீட்டு உபயோக பொருட்கள் கடையில் மின்கசிவு காரணமாக அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றிய தீ, அருகே உள்ள துணிக் கடைகளிலும் பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், 2 மணிநேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். … Read more

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கினார்!

அமைச்சர்களுக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இலாகாக்களை ஒதுக்கியுள்ளார். நிதித்துறை, மின்சாரம், உளவுத்துறை, உள்கட்டமைப்பு உள்பட 11 துறைகளை தம் வசம் வைத்துக் கொண்டுள்ளார். குமாரசாமியின் அண்ணன் ரெவனாவுக்கு பொதுப்பணித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் பரமேஸ்வராவுக்கு உள்துறை, பெங்களூர் நகர நிர்வாகம் மற்றும் இளைஞர் வேலைவாய்ப்புத்துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரசைச் சேர்ந்த சிவகுமாருக்கு வருவாய்த்துறையும் பாசனத்துறையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்களிடையே இலாகாக்கள் தொடர்பாக இழுபறி நீடித்து வருவதால் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் காங்கிரஸ் தலைமை … Read more

விவசாயிகள் டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க கோரிக்கை!

விவசாயிகள்,மேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளனர். குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜுன் 12 ஆம் தேதி திறப்பது வழக்கம். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து, விவசாயிகளுக்கு இழப்பீடை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் … Read more

கர்நாடகாவில் முதலில் காலாவிற்கு எதிர்ப்பு,பிறகு மாறுவேடத்தில் காலா படம் பார்த்த கன்னட அமைப்பினர்!

க‌ர்நாடகாவில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் கன்னட அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் கடந்து  170-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுகிறது. நேற்று முன்தினம்  இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ திரைப்படம் வெளியானது. காவிரி விவகாரத்தில் ரஜினி தமிழகத்துக்கு ஆதரவாக பேசியதால் அவரது திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கூடாது என கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை காலாவுக்கு கர்நாடகாவில் தடை விதித்தது. படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் … Read more