புதிய ரூ.2000 நோட்டுக்கள் பதுக்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்!சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகள் ரத்து!

தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகளையும் ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது  சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகள் ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது.இதன் மூலம்  புதிய ரூ.2000 நோட்டுக்கள் பதுக்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது .ஒரே குற்றச்செயலுக்கு 3 வழக்குகளை பதிவு செய்ததாக சேகர் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் தற்போது  சிபிஐ பதிவு செய்த 2 வழக்குகளை ரத்து செய்து … Read more

இன்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு பட்ஜெட்டில்  தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கையின்படி, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. மருத்துவமனை அமைவதற்கான இடங்களாக மதுரை தோப்பூர், ஈரோடு பெருந்துறை உள்ளிட்ட 5 இடங்களை தமிழக அரசு மத்திய அரசிடம் பரிந்துரைத்திருந்தது. அண்மையில் மதுரை தோப்பூர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தோப்பூரில் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை தோப்பூரில் … Read more

அருணாச்சலப் பிரதேச மலைப்பாதையில் பயங்கர நிலச்சரிவு!சிக்கி 5 பேர் பலி

713ம் எண் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள மலைப்பாதையில்  அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில்அருகே  பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. கேமராவில் இந்த காட்சி படம் பிடிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக இந்த நிலச்சரிவு நிகழ்ந்துள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

ஓசூர் அருகே ரூ.3 லட்சம் கலப்பு திருமணம் செய்தவருகு அபராதம்,வீட்டுக்கு முள்வேலி!

கலப்பு திருமணம் செய்து கொண்டவருக்கு ஓசூர் அருகே 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, அபராதம் செலுத்தாததால் வீட்டுக்கு முள்வேலி அமைத்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றரை ஆண்டுக்கு முன்  ஜோகிர்பாளையத்தை சேர்ந்த சந்துரு அதே கிராமத்தை சேர்ந்த வேறு சாதியைச் சேர்ந்த தேவயானி என்பவரைக் காதலித்து மணம் முடித்துக் கொண்டு கோவையில் வசித்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு சந்துரு தனது குடும்பத்துடன் ஜோகிர்பாளையத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் தற்போது,உள்ளூர் … Read more

 உத்தரகாண்டில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற காட்டு யானை பலி!

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற காட்டு யானை ஒன்று உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் அருகே, ராஜாஜி புலிகள் காப்பகம் பகுதியில் ரயில் மோதி பலியானது. 17 யானைகள் கூட்டத்துடன் அந்தப் பெண் யானை தண்டவாளத்தைக் கடந்த போது டோராடூனில் இருந்து ஹரித்துவார் நோக்கி வேகமாக வந்த விரைவு ரயில் இந்தப் பெண் யானை மீது மோதி விபத்து நேரிட்டதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர். இப்பகுதியில் அடிக்கடி ரயில் மோதி வனவிலங்குகள் உயிரிழப்பதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

நாளை மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

நாளை நடப்பாண்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல்   வெளியிடப்பட உள்ளது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும்,தமிழகத்தில் 23 அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர 2 ஆயிரத்து 593 இடங்களுக்கும், 10 சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள 784 இடங்களுக்கும், 11 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஆயிரத்து 20 இடங்களுக்கும் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இந்தப் படிப்புகளில் சேருவதற்கு 43 ஆயிரத்து 935 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வந்துள்ளன. இந்தப் படிப்புகளுக்கான … Read more

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக தமிழகத்தில் செயல்பட்ட 29 இளைஞர்கள்!காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் பகீர் தகவல்

தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் ,தமிழகத்திலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை நோக்கி பயணித்த 29 இளைஞர்கள் மீட்கப்பட்டு, அவர்களை நல்வழிப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, காவல்துறையின் கீழ் இயங்கும் உளவுப்பிரிவில் ஒரு சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் மத அடிப்படைவாத அமைப்புகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பிரிவு அளிக்கும் தகவல்களின்படி, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு … Read more

6 வீரர்கள் நக்சலைட்டுகள் வைத்த கண்ணி வெடியில் சிக்கி உயிரிழப்பு!

6 வீரர்கள்  ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் வைத்த கண்ணி வெடியில் சிக்கி உயிரிழந்தனர். சிறப்புக் காவல் படையினர் இங்குள்ள கார்வா மாவட்டத்தில்  ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்த போது நக்சலைட்டுகள் கண்ணி வெடியை புதைத்து வைத்து வெடிக்கச் செய்தனர். சம்பவ இடத்திலேயே 6 வீரர்கள் பலியாகினர். மேலும் சில வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதுங்கியுள்ள நக்சலைட்டுகளை தேடி வரும் போலீசார், அவர்களுடன் துப்பாக்கிச் சண்டையிலும் ஈடுபட்டனர்.

18 வயது மாணவி சீனாவில் ஆசிரியரின் பாலியல் தொந்தரவால் தற்கொலை!

ஆசிரியரின் பாலியல் தொந்தரவால் சீனாவில் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் 8வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். குயிங்யாங் மாகாணத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார்.அந்த மாணவியை அந்தப் பள்ளியின் ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி அருகில் இருந்த உயரமான கட்டடத்திற்கு சென்று 8 மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெண் பத்திரிகையாளர் மீது மும்பையில் கடும் தாக்குதல்!

பெண் பத்திரிகையாளர் ஒருவர்  மும்பையில் ஷேர் கால் டாக்சியில் பயணித்த போது சக பெண் பயணி அவரை கடுமையாக தாக்கியதாக அந்தப்  பத்திரிகையாளர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்,தலைமுடியைப் பிடித்தும் முகத்தில் கீறியும் காயங்களை ஏற்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் உஷ்னோடா பால் ( ushnota paul ) தெரிவித்துள்ளார். உபர் கால் டாக்சியை  கொட்டும் மழையில் வீடு திரும்புவதற்காக பதிவு செய்து காத்திருந்த போது 35 வயதான சக பெண் பயணியுடன் காரை பகிர்ந்துக் கொண்டதாகவும், கட்டணத்தை பகிர்ந்துகொள்வதில் … Read more