சிவகாசியில் விஜயகாந்த் பேசிக்கொண்டிருந்த மேடையை நோக்கி கல்வீச்சு!

சிவகாசியில் தேமுதிக பொதுசெயலாளர்  விஜயகாந்த் பேசிக் கொண்டிருந்தபோது மேடையின் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்கினர் . பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும், பட்டாசு தொழிலில் உள்ள சிக்கல்களை போக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் வளைவு முன்பு, தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 500க்கும் மேற்பட்டோர் … Read more

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் சமமாக நிவாரணம் வழங்க வேண்டும்!

கன்னியாகுமரியில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி  பிரேமலதா விஜயகாந்த்.அப்போது பேசிய அவர்  பேரிடர் பாதித்த மாவட்டமாக கன்னியாகுமரியை அறிவிக்க வேண்டும் என்றும்  புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் சமமாக நிவாரணம் வழங்க வேண்டும் எனவும்  பிரேமலதா விஜயகாந்த் கூறினார் … source: dinasuvadu.com

விஜயகாந்துக்கு பிறப்பித்த பிடிவாரன்ட் ரத்து

தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த 2013ஆம் ஆண்டு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பத்திரிக்கையாளர் ஒருவரை தாக்கியதாக கூறி அவர் மீது வழக்குபதிவு செய்யபட்டது. இந்த வழக்கில் விஜயகாந்த் அவர்களுக்கு ஆலந்தூர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிரப்பித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை சற்றுமுன் விசாரித்த நீதிபதி அவருக்கு பிறப்பித்திருந்த பிடிவாரன்ட் உத்தரவை ரத்து செய்து உத்தரவிடபட்டுள்ளது.