#BREAKING: மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியானது..!

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இயின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்வின் முடிவுகள் www.cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதல் தாளில் 12,47,217பேர் தேர்வு எழுதிய நிலையில் 4,14,798 பேரும், இரண்டாம் தாளில் 11,04,454 தேர்வு எழுதிய நிலையில் 2,39,501 பேரும் தகுதி பெற்றிருப்பதாக சிபிஎஸ் அறிவித்துள்ளது.

#BREAKING: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு.!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி மற்றும் போட்டி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்தும் அறிவிப்பு வெளியாகிறது. இந்நிலையில், தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு வருகின்ற ஜூலை 5-ம் தேதியன்று நடைபெற இருந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) கொரோனா பாதிப்பு காரணமாக  ஒத்திவைக்கப்படுவதாக சிபிஎஸ்இ நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஆசிரியர் சிடெட்( CTET) தேர்வுக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம்.!

சிபிஎஸ்இ, நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு CTET (Central Teacher Eligibility Test) நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. CTET தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள பட்டதாரிகள், விண்ணப்பிக்கலாம். தமிழக பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், சிபிஎஸ்இ, நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு CTET (Central Teacher Eligibility Test) நடத்தப்படுகிறது. … Read more