#Breaking: கிருஷ்ணப்ப கவுதமை ரூ.9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சென்னை.. மொயின் அலியை விட அதிக தொகை!

இந்திய வீரரான கர்நாடகாவை சேர்ந்த கிருஷ்ணப்ப கவுதமை அடிப்படை தொகையான ரூ.20 லட்சத்திற்கு ஏலத்திற்கு விடப்பட்டார். அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.25 கோடிக்கு எடுத்தது. 2021 ஆம் ஆண்டிற்கான 14 வது ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள், தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்தெடுப்பதற்கான ஏலம், இன்று சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 164 இந்திய வீரர்கள் உட்பட மொத்தம் 292 வீரர்களை ஒவ்வொருவராக ஏலம் விடப்பட்டு வருகின்றன. … Read more

“CSK CSK” என முழக்கமிட்ட ரசிகர்கள்.. விசில் அடிக்குமாறு கூறிய கோலி.. வைரலாகும் வீடியோ!

இந்திய அணியின் கேப்டன் கோலி, விசில் அடித்து, ரசிகர்களை அடிக்குமாறு கூறினார். அவர் தனது சைகையால், “கேட்கல இன்னும் சத்தமா இன்னும்” என மைதானத்தையே அதிரவைத்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி, சென்னையில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 88 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் அடித்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, 95.5 ஓவர்களில் தனது அனைத்து விக்கெட்டையும் இழந்து … Read more

செம: ராபின் உத்தப்பாவை வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்.!

ஏலம் இல்லாமல் நேரடியாக வீரரை வாங்கும் முறையில், ராஜஸ்தான் அணியில் இருந்து ராபின் உத்தப்பாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. வருகின்ற 2021 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ராபின் உத்தப்பா விளையாடுவது உறுதியாகி உள்ளது. இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஆறாவது அணியாக  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ராபின் உத்தப்பா விளையாட உள்ளார். இதுவரை 2008 முதல் 189 ஆட்டங்களில் விளையாடி … Read more

கெய்க்வாட் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினார் – ஸ்டீபன் பிளமிங்..!

கெய்க்வாட் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதாக சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.  நேற்று ஐபிஎல் தொடரின் 49 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. அதன் படி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக அதன்பிறகு 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் … Read more

மோசமான தோல்விக்கு காரணம் இது தான் பிரையன் லாரா

ஐபிஎல்2020  போட்டிகள் கோலகலமாக ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கு கொண்ட அணிகள் தனது முழு திறமையும் வெளிப்படுத்தி ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு ஆட்டத்திலும் அனல் பறக்கும் ஆட்டத்தினை அரங்கேற்றி வருகின்றனர்.ஆனால் நடப்பு ஐபிஎல் போட்டியில் ஜொலிக்க சென்னை மட்டும் தவறியது. சென்னை ஆடிய அனைத்து போட்டிகளிலும் தனது முழு பலத்தைக் காண்பித்து விளையாடவில்லை. கேப்டன் தோனி தலைமையில் களமிரங்கிய சென்னை அணி இவ்வாண்டு கடும் விமர்சனங்களை சந்தித்தது மட்டுமின்றி ஐபிஎல் வரலாற்றில் … Read more

தூக்கம்மில்லா இரவுகளை விட்டுக்கொடுக்கும் தல தோனி – கம்பீர் உருக்கம்..!

தோனி கேப்டனாக இருக்கும் வரை அவருக்கு தூக்கமில்லா இரவுகள் தான் என்றும் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் வீரர் தோனி தான். கேப்டனாக அவர் செய்த சாதனைகள் எந்த ஒரு வீரராலும் நிகழ்த்த முடியாதது. இந்த சீசன் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு கேப்டன் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் பல ரசிகர்கள் வருந்தினர். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த வருடம் போட்டிகளில் விளையாடி … Read more

“2021-ல் தல தோனியே சென்னை அணியின் கேப்டன்” – சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் நம்பிக்கை!

2021-ல் நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் தோனியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை தாங்குவார் என அணியின் சி.இ.ஓ. காசிவிஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் முன்னணி அணியாக விளங்குவது, சீனியர் வீரர்களை கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. போட்டிகள் தொடங்கும் முன்னே ரெய்னா, ஹர்பஜன் சிங் தொடரில் இருந்து விலக, காயம் காரணமாக பிராவோவும் தொடரில் இருந்து விலகினார். இது, சென்னை அணிக்கு பெரும் தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர் தோல்வியால் சென்னை அணி பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. … Read more

தமிழ் ரசிகரின் மஞ்சள் வீடு….”சாதாரண விஷயமல்ல”மகிழ்ந்த தோனி பாராட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பிக்கும் வகையில் தனது வீட்டையே மஞ்சள் நிறத்தில் மாற்றிய தமிழக ரசிகர்க்கு  தோனி பாராட்டு தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் அரங்கூரில் வசித்து வரும் கோபிகிருஷ்ணன் இவர் தோனி ரசிகர் இல்லை வெறியர் என்று தான் சொல்ல வேண்டும் ஆமாம் கோபி ஐ.பிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே தனது வீட்டின் வெளிப்புறத்தில் தோனியின் படம் வரைந்து சுவர்கள் அனைத்திற்கு மஞ்சள் வர்ணம் தீட்டி சென்னை அணியின் மீதுள்ள தனது ஈடுபாட்டை காட்டினார்.மேலும் இந்த … Read more

அடுத்த வருஷம் CSK கண்டிப்பா திரும்பி strong வருவாங்க – இர்பான் பதான் ட்வீட்..!

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்து. இந்த நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அந்த ட்வீட்டில் “2020 CSKக்கான வருஷம் இல்ல. ஆனா, அடுத்த வருஷம் கண்டிப்பா திரும்ப strongஆ வருவாங்க! அணியில் சிலபலமாற்றங்கள் தேவைப்படும். ஏன்னா, மாற்றம் தான மாறாத ஒன்னு என்று பதிவிட்டுள்ளார். 2020 CSKக்கான வருஷம் இல்ல. ஆனா, அடுத்த வருஷம் கண்டிப்பா திரும்ப … Read more

IPL 2020: கோப்பையை கைப்பற்றிய சிஎஸ்கே.. வைரலாகும் நெட்டிசன்களின் புள்ளிப் பட்டியல்!

ஐபிஎல் 2020-ல் சென்னை அணி இறுதி போட்டியில் வெற்றிபெற்று, கோப்பையை கைப்பற்றியதாக நெட்டிசன்கள் உருவாக்கிய புள்ளிப் பட்டியல், சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரின் முன்னணி அணியான விளங்குவது, சீனியர் வீரர்களை கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை அணி துபாய்க்கு வந்த நிலையில், ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் தொடரில் இருந்து விலகி, இந்தியா திரும்பினார்கள். ரெய்னா விலகியது, சென்னை அணிக்கு மிடில் ஆர்டர் பேட்டிங்கில் பெரிய … Read more