கோவிஷீல்டு உற்பத்தித்திறன் 120 மில்லியனாக அதிகரிக்கப்படும்..!

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறன் 120 மில்லியனாக அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை பாதித்து வருகிறது. இதன் காரணத்தால் இதிலிருந்து காத்து கொள்ள கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதில் இந்தியா கோவிஷீல்டு, கோவேக்சீன் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகிறது. தற்போது கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி உற்பத்தித்திறனை 120 மில்லியனாக அதிகரிக்கப்படும் என்று எழுத்துபூர்வமாக மத்திய அரசு, மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளனர். இது … Read more

#BREAKING : ஒருவருக்கு இருவேறு தடுப்பூசி -சோதனைக்கு ஒப்புதல்..!

ஒருவருக்கு இருவேறு கொரோனா தடுப்பு ஊசிகளை செலுத்தலாமா என பரிசோதனை மேற்கொள்ள நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஒருவருக்கு இருவேறு கொரோனா தடுப்பு ஊசிகளை செலுத்தலாமா..? அல்லது வேண்டாமா..? என பரிசோதனை மேற்கொள்ள நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது நடைமுறையில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு நபர் முதல் தவணையில் எந்த தடுப்பூசியை செலுத்தி கொள்கிறாரோ அதே தடுப்பூசியை தான் 2-வது தவணையிலும் செலுத்தி கொள்ளும் நடைமுறை உள்ளது. … Read more

நாளை கோவிஷூல்டு தடுப்பூசி மட்டுமே போடப்படும்- சென்னை மாநகராட்சி ..!

நாளை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தடுப்பூசி மையங்களில் 200 தடுப்பூசி போடப்படுகிறது. சென்னையில் கொரோனா தொற்றை குறைக்க பல நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. தற்போது, கொரோனா தொற்றை குறைக்க தடுப்பூசி செலுத்தும் பணியில் அதிக கவனத்தை சென்னை மாநகராட்சி செலுத்தி வருகிறது. சென்னையில் 40-க்கும் மேற்ப்பட்ட மையங்களில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை சென்னையில் 28,65,576 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நாளை ஒவ்வொரு தடுப்பூசி … Read more

கோவிஷீல்டு செலுத்திக்கொண்ட பயணிகளுக்கு பிரான்ஸ் அரசு அனுமதி..!

இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகளுக்கு பிரான்ஸ் நாட்டிற்கு வருவதற்கு அந்நாடு அனுமதி அளித்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அதேசமயம், சில நாட்களுக்கு முன்பு ஐரோப்பிய யூனியன் நாடுகள் தங்கள் நாடுகளுக்குள் வருவதற்கு அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலை வெளியிட்டது. இதில் ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி மட்டுமே இருந்தது. இதனால் இந்தியா இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தது. இதனை அடுத்து இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களை … Read more

சிறுவர்களிடம் 2,3-ம் கட்ட பரிசோதனை – சீரம் நிறுவனத்திற்கு அனுமதி மறுப்பு!

சீரம் நிறுவனம் சிறுவர்களிடம் 2,3 ஆம் கட்ட தடுப்பூசி பரிசோதனை நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ரஜெனகாவின் கூட்டு கண்டுபிடிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசி சீரம் நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு மற்ற பிற நாடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிஷீல்ட் தடுப்பூசி மக்களால் அதிக அளவில் நம்பி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீரம் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த தடுப்பூசியை 2-17 வயது சிறுவர்களுக்கு  பயன்படுத்துவதற்கான முதற்கட்ட பரிசோதனை நடந்தது. தற்போதும் அதே வயதுடைய சிறுவர்களுக்கான இரண்டாவது மற்றும் … Read more

கோவிஷீல்டு 2-வது டோஸ் தடுப்பூசியை 10 மாதத்திற்கு பின் போடுவதால் அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி…!

கோவிஷீல்டு 2-வது டோஸ் தடுப்பூசியை 10 மாதத்திற்கு பின் போடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக  பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்தும் வண்ணம் உலகம் முழுவதும், பல நாடுகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணை செலுத்திக் கொண்டவர்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் கால இடைவெளி அதிகரிப்பதால், நோய் எதிர்ப்பாற்றல் அதிகாரிக்கும் எனக் பல … Read more

கோவிஷீல்ட் தடுப்பூசி,டெல்டா வகை கொரோனா வைரஸுக்கு எதிராக 61% பயனுள்ளதா? – டாக்டர் என்.கே. அரோரா…!

கோவிஷீல்ட் தடுப்பூசி டெல்டா வகை கொரோனா வைரஸுக்கு எதிராக 61% பயனுள்ளதாக இருக்கிறது என்று டாக்டர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார். சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசி டெல்டா வகை கொரோனா வைரஸுக்கு எதிராக 61% பயனுள்ளதாக இருக்கும் என்று கோவிட் பணிக்குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா நேற்று தெரிவித்தார். மேலும்,இதுகுறித்து டாக்டர் என்.கே.அரோரா கூறியதாவது: கிறிஸ்டியன் மெடிக்கல் கல்லூரி வேலூர் நடத்திய ஆய்வில்,டெல்டா வகை கொரோனா வைரஸுக்கு எதிராக கோவிஷீல்ட்டின் … Read more

தமிழகத்தை அடைந்த 4 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை மாவட்டம் வாரியாக அனுப்ப நடவடிக்கை..!

தமிழகத்திற்கு இன்று வந்தடைந்த 4 லட்சம் தடுப்பூசிகளை மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக தற்போது கொரோனா தாக்கம் சற்று குறைந்து வருகிறது. கொரோனா நோய்த் தொற்றிலிருந்து காத்துக் கொள்வதற்கு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, தமிழகத்திற்கு இன்று  4 லட்சம் கொரோனா தடுப்பூசி வந்தடைந்துள்ளது. இதில் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 1,26,270 கோவாக்ஸின் தடுப்பூசிகளும் உள்ளது. இதனை மாவட்டம் வாரியாக பிரித்து கொடுக்கும் முயற்சியில் … Read more

மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி தமிழகம் வந்ததது..!

மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்தது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  மத்திய அரசு தடுப்பூசி விநியோகத்தை பொறுப்பேற்று மாநிலங்களுக்கு பிரித்து வழங்கி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு இன்று மாலை மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்தது. இன்று காலையில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 270  கோவாக்சின் தடுப்பூசிகள் வந்த நிலையில் மாலையில் கோவிஷீல்டு தடுப்பூசியில் … Read more

தமிழகத்துக்கு 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வருகை!

தமிழகத்திற்கு 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி வருகை. விரைவில் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என தகவல். தமிழகம் முழுவதிலும் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு சற்றே குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், மக்கள் தங்களைப் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு அடைந்துள்ளதால், பலரும் தற்போது தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தமிழகத்தின் பல இடங்களிலும் கடந்த சில நாட்களாக … Read more