ஒரே நாளில் உலகளவில் கொரோனாவுக்கு 32,000 பேர் பாதிப்பு!

சீனா, வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட புதியவகை வைரஸான கொரோனா வைரஸ், அந்நாட்டை வாட்டிவதைக்தது. இதனால் சீனாவில்  நாளுக்கு நாள் உயிரிழப்புகள் வந்தது. மேலும், உலகளவில் இந்த வைரஸின் தாக்கம் அசுரவேகத்தில் பரவிவருவதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், உலகளவில் கடந்த 24 மணிநேரத்தில் 32000 பேர் பாதிக்கப்பட்டு, 1344 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 298,073‬ பேர் பாதிக்கப்பட்டு, 12,528 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

நன்றி மறவோம்!!வர கூடாது என்று தடுக்கும் அவர்கள் .!இன்று மாலை.,5 மணிக்கு..கூறுவோம் மனதார நன்றி!

இன்று மாலை 05.00 மணிக்கு வீட்டின் நுழைவு வாயிலில் நின்று கைதட்டல் மூலமோ, மணியோசை எழுப்பியோ நன்றியை வெளிப்படுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இன்று (மார்ச்.,22 ) இந்தியா முழுவதும் சரியாக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கிட்டத்தட்ட அதாவது 14 மணி நேரம் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த 4 ஆவது வாரத்தில் கொரோனா 3 ஆவது நிலையை அடைவதிலிருந்து தடுக்க இன்று சுய ஊடரங்கு கடைபிடிக்க  படுகிறது.அதன்படி இன்று காலை … Read more

மார்ச்.,31 வரை ஊரடங்கு-முதல்வர் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச்.,31வரை ராஜஸ்தானில் ஊரடங்கு என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இது குறித்து அம்மாநில முதல்வர் அசோக் கெஹ்லோட் கூறுகையில் அனைத்து மால்கள் ,பள்ளிகள்,திரையரங்குகள்,சுற்றுலா,போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.ராஜஸ்தானில் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த முதல்வர் இவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவமால் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.லாக் அவு ட் காலங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க முன்னெச்செரிக்கை நடவடிக்கை … Read more

நாளை இந்த இரண்டு இடங்கள் மட்டுமே 24 மணி நேரம் செயல்படும் – சென்னை ஆணையர் பிரகாஷ்!

தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தோற்றால் பலரும் பல விதமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பேசியுள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், யாரும் அதிகளவில் வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள். ஹோட்டல் உணவுகளை  தவிருங்கள்,வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள், கைகளை சுத்தமாக கழுவுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் பொது மக்கள் அரசாங்கத்தின் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார். 24 மணி நேரமும் நாளை மருத்துவமனை செயல்படும் என கூறியுள்ளார்.  அது … Read more

தற்காத்து கொள்வது எப்படி?? நாட்டு மக்களுக்கு நடிகை த்ரிஷா வீடியோ மூலம் விழிப்புணர்வு

உலகம் முழுவது பரவி வருகின்ற கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்பது பற்றி நடிகை த்ரிஷா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா இவர் யுனிசெஃப் நிறுவனத்தின் இந்தியாவுக்கான நல்லெண்ணத் தூதராக உள்ளார்.இந்நிலையில் கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் #Coronavirus வைரஸிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது? @trishtrashers #UNICEF India நல்லெண்ண … Read more

நிலவரம் தெரிந்தும் அதிக விலைக்கு விற்ற கடைகள்-32க்கு சீல்! வைத்து அதிரடி

தமிழகம் முழுவதும் முகக்கவசம், கிருமி நாசினி தெளிப்பான் போன்றவற்றைவை அதிக விலைக்கு விற்றதாக 32 கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பது கவலை அளிப்பதாகவும் கொரோனா பரவலை தடுக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க  வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.  தமிழகம் முழுவதும் கொரோனாவிற்கு பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக  … Read more

அச்சுறுத்தும் கொரோனா ! இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது. மத்திய அரசு கொரோனோ வைரஸை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்  கொரோனா வைரஸை தேசிய பேரிடராக அறிவித்தது மத்திய அரசு. இந்தியாவில் கொடூரன் கொரோனா வைரசால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ்:மாஸ்க் அணிய வேண்டாம்..மைய சுகாதாரத்துறை அறிவிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது.இதனால் மத்திய ,மாநில அரசு கொரோனோ வைரஸை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது ஒரு அறிவுறுத்தலை பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது. அதில் கொரோனா வைரஸ்க்காக அனைவரும் மாஸ்க் அணிய வேண்டிய அவசியமில்லை என்றும் மாறாக  இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இருப்பவர்கள் மட்டுமே மாஸ்க் அணிந்தால் போதுமானது.அவ்வாறு மாஸ்க் அணிந்திருக்கும்போது வெளிப்புறத்தை கைகளால் தொடக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

சடலத்தை கையாளவோ, தொடவோ, முத்தமிடவோ கூடாது”- கையாளும் வழிமுறை குறித்து எய்ம்ஸ் வெளியிட்டது

கொரோனா வைரஸ் தொற்று  தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் வைரஸ் தாக்கி இறந்தவர்களின் சடலங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்ற வழிமுறைகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 150க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்த வைரஸ்க்கு 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5800 பேர் உயிரிழந்து உள்ளனர். சீனாவில் பரவிய இந்த வைரஸ் படிப்படியாக அனைத்து … Read more