பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதலாக ரூ.6,200 கோடி.! ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு .!

வரும் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.6,200 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், கடந்த மார்ச் 24 முதல் முழு ஊரடங்கு அமலில்உள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி,  நுழைவுத் தேர்வுகள், உள்ளிட்ட அனைத்து ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஊரடங்கு முடிந்த உடன் வரும் கல்வி ஆண்டில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய நேற்று, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் … Read more

இந்தியாவுக்கு உதவிய ஆசிய வளர்ச்சி வங்கி.! ரூ.11,387 கோடி கடனுதவி.!

இந்தியாவுக்கு உதவும் வகையில் ரூ.11,387 கோடி கடனுதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனவால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மற்றும் கொரோனா தடுப்பு பணிக்கு உதவும் வகையில் ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.11,387 கோடி கடனுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருவதால் 2 ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மே 3 ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் ஊரடங்கு மேலும் … Read more

ஜூன், ஜூலையில் பாதிப்பு அதிகமாக இருக்கும்.!

நேற்று முதல்வர்களுடனான பிரதமரின் உரையாடல் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கையால் பல ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்றபட்டுள்ளது. பிரதமருடன் பேசிய முதலமைச்சர்கள் சர்வதேச எல்லையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.  இந்நிலையில், இந்த ஆலோசனைக்கு பின் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அளித்த பேட்டியில், பிரதமருடன் கலந்துரையாடிய பெரும்பாலான முதல்வர்கள் ஊரடங்கை தொடர வேண்டும் என்று வலியுறுத்தினர். சில பொருளாதார … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்குகிறது.!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,974 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 937 ஆகவும் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக நிறைவடைய இருக்கும் ஊரடங்கும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்குகிறது. அதாவது, தற்போதைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,974 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 937 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் … Read more

சீனா நிறுவனங்களிடம் இருந்து இனி எந்த கிட்டுகளும் வாங்கப்படாது – ஐசிஎம்ஆர்.!

சீன நிறுவனங்களிடம் இருந்து இனி எந்த கிட்டுகளும் வாங்கப்படாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. தரமற்ற உபகரணங்களை கொடுத்த சீனா நிறுவனங்களிடம் இருந்து இனி எந்த பொருள்களும் வாங்கப்படாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதனிடையே சீனாவில் இரண்டு நிறுவனங்களான குவாங்சோ வோண்ட்ஃபோ பயோடெக் மற்றும் ஜுஹாய் லிவ்ஸன் போன்ற நிறுவனங்களிடம் சுமார் 5 லட்ச ரேபிட் டெஸ்ட் கிட் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஆர்டர் செய்திருந்த நிலையில், முதற்கட்டமாக 3 … Read more

டெல்லி நிதி ஆயோக் அலுவலகம் மூடல் .!

நிதி ஆயோக் அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. டெல்லியில் உள்ள நிதி ஆயோக் அலுவலகத்தில் பணியாற்றி வந்த இயக்குநர் பதவியில் இருந்த ஒருவருக்கு  இன்று காலை 9 மணிக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல் அதிகாரிகளுக்கு தெரியவர, உடனடியாக அவர் பணியாற்றி வந்த நிதி ஆயோக் அலுவலக கட்டிடத்தை  இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.  மேலும் மூடப்பட்ட கட்டிடத்திற்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெறுகிறது. கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் … Read more

மேற்கு வங்கத்தில் கொரோனாவால் மேலும் ஒரு மருத்துவர் உயிரிழப்பு.!

மேற்கு வங்க மாநிலத்தில் 697 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை கொரோனாவுக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த 60 வயதான மூத்த மருத்துவர் பிப்லாப் கண்டி தஸ்குப்தாவுக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவரின் மறைவுக்கு மேற்கு … Read more

1000 ரூபாய்க்கு கொரோனா தடுப்பூசி.! விரைவில் அறிமுகம்…

1000 ரூபாய் விலையில் மருத்துவ சந்தையில் தடுப்பூசி கிடைக்கும். விரைவில் துல்லியமான புள்ளிவிவரம் வெளியாகும். என புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர்  ஆதார் பூனவல்லா கூறியுள்ளார்.  கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறிவதில் பல்வேறு நாடுகளும் தீவிரமாக முயன்று வருகின்றன. இந்த தடுப்பூசி தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வரும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான புனேவைச் சேர்ந்த சீரம் … Read more

நாடு முழுவதும்  29,435 பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.தொடர்ந்து கொரோனா தொடர்பான பரிசோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தியாவில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நாடு முழுவதும்  29,435 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது .இந்தியாவில் கொரோனா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  … Read more

இந்தியாவில் பாதிப்பு 28,380 ஆகவும், உயிரிழப்பு 886 ஆகவும் உயர்வு.!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,380 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 886 ஆகவும் அதிகரித்துள்ளது. உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 30,14,073 பேர் ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 2,07,906 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,88,543 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 9,87,322 பேர் பாதிக்கப்பட்டு, 55,415 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் … Read more