#Breaking: தடுப்பூசு போடுவதற்கான முன்பதிவு செய்யும் இணையதளத்தில் சிக்கல்!

இந்தியாவில் 18-44 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், அதற்கான வலைத்தளத்தில் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 3.50 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தற்பொழுது 45 வயதிற்கு மேலானவர்களுக்கு கோவிஷில்ட், கோவாக்ஸின் என 2 கொரோனா தடுப்பூசிகள் … Read more

#BREAKING: தடுப்பூசி விலையை குறைக்க உத்தரவிட வேண்டும் – பிரதமருக்கு முதல்வர் கடிதம்!!

கொரோனா தடுப்பூசிகளின் விலையை குறைக்க உத்தரவிடக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். உள்நாட்டு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசி மாநில அரசுக்கு ரூ.400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என்று விலை நிர்ணயம் செய்தது அறிவித்திருந்தது. அதுபோல, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசி, மாநில அரசுகளுக்கு ரூ.600 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 என விலை நிர்ணயம் செய்து அறிவித்திருந்தன. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி விலை உயர்வு … Read more

மே 1 முதல் இந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி இலவசம்.. முழு பட்டியல் இதோ!

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், மே 1-ம் தேதி முதல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 17 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 2.50 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது 45 … Read more

கொரோனா 2வது அலை மோசமாக தாக்கியுள்ளது…மூச்சு பயிற்சி செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் – பிரதமர் மோடி

பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா இலவச தடுப்பூசி சென்றடைய மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும் என பிரதமர் மோடி உரை. மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா இரண்டாவது அலை நம்மை மிகவும் மோசமாக தாக்கியுள்ளது. கொரோனா முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்து வெளிவந்த நிலையில், 2வது அலை மோசமாக உள்ளது. தொற்று பரவலை மாநில அரசுகள் தங்களால் முடிந்த முயற்சிகள் அனைத்தையும் செய்து வருகின்றனர் என கூறியுள்ளார். மிகவும் கடினமான சூழ்நிலையை நாம் சந்தித்து … Read more

கொரோனாவுக்கு நாசல் தடுப்பூசி சாத்தியம் – பாரத் பயோடெக் எம்.டி விளக்கம்!!

கொரோனா வைரசுக்கு நாசல் தடுப்பூசி (nasal vaccine) குறித்த சாத்தியக் கூறுகளை பாரத் பயோடெக் எம்.டி டாக்டர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். பிரபல ஊடகம் ஒன்றில் பேசிய பாரத் பயோடெக் எம்.டி டாக்டர் கிருஷ்ணா எலா, கொரோனா தடுப்பூசிகள் நுரையீரல் கீழ்ப்பகுதி மட்டுமே பாதுகாக்கின்றனர். நுரையீரலின் மேற்பகுதி மற்றும் மூக்கு பாதுகாக்கப்படுவதில்லை என கூறியுள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படலாம். ஆனால், அந்த தடுப்பூசி மூலம் தீவிர நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பதைத் தடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். … Read more

#FactCheck:மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளக்கூடாது என்பது வதந்தி – அரசு

மாதவிடாய் சுழற்சி நேரத்தில் முன்னும் பின்னும் ஐந்து நாட்களுக்கு கொரோனா  தடுப்பூசி போட்டுக் கொள்ளக் கூடாது என சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பி வருவதாகவும் இது தவறானது, அது உண்மை அல்ல எனவும் அரசாங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தினமும் குறைந்தது மூன்று லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார். இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் நாளுக்கு நாள் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில்  கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி … Read more

ஆக்சிஜன் உற்பத்தி உபகரணங்களுக்கு வரிவிலக்கு – பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு

ஆக்சிஜனுக்கான கலால் வரி, சுகாதார செஸ் வரி விலக்கு அளிக்க பிரதமர் தலைமையிலான உயர்மட்ட கூட்டத்தில் முடிவு. கொரோனா தொற்றியின் இரண்டாவது அலைகளை நாடு எதிர்த்துப் போராடும் நேரத்தில், இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஆக்சிஜன் உற்பத்தி, சேமித்து வைக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களை அதிகரிப்பதற்கும், அதிகரித்து வரும் ஆக்ஸிஜனின் தேவையை பூர்த்தி செய்வதற்கும், ஆக்ஸிஜன் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை மூன்று மாதங்களுக்கு இறக்குமதி செய்வதற்கான அடிப்படை சுங்க வரி மற்றும் … Read more

#BREAKING: மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் – மத்திய சுகாதார அமைச்சகம்

மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக தரப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசி மாநில அரசுகளுக்கு ஒரு டோஸுக்கு ரூ.400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸுக்கு ரூ.600 என விலை நிர்ணயம் செய்திருந்தது. இதையடுத்து, ஏன் இலவசமாக தடுப்பூசி வழங்கக்கூடாது என பலவேறு தரப்பில் இருந்து … Read more

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் – முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு. நாடு முழுவதும் மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி என மத்திய அரசு அறிவித்த நிலையில், தமிழகம், கேரளா, அசாம், உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அறிவித்திருந்தன. அந்த வகையில், தற்போது ஆந்திர மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் … Read more

பி.எம்.கேர்ஸ் நிதியை ஏன் இலவசமாக கொரோனா தடுப்பூசிக்கு பயன்படுத்த முடியாது? – மம்தா பானர்ஜி

பி.எம். கேர்ஸ் நிதியை ஏன் இலவசமாக கொரோனா தடுப்பூசிக்கு பயன்படுத்த முடியாது? என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி. இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசின் மொத்த தவறான நிர்வாகத்தின் காரணமாக நாடு குழப்பத்தில் உள்ளது. கொரோனா முடிந்துவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சர் கூறியிருந்த நிலையில், அவர் இதில் கவனம் செலுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். மேற்குவங்கத்தை கைப்பற்றும் முயற்சியில், பாஜகவினர் முழு நாட்டையும் குழப்பத்தில் தள்ளியுள்ளனர் என விமர்சித்துள்ளார். கொரோனா தடுப்பூசியின் உலகளாவிய … Read more