#BREAKING : முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம்..! தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்றி அரசாணை வெளியீடு…!

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியீடு. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைதந்து வந்த நிலையில், சமீப நாட்களாக, சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், … Read more

ஸ்டாலினை தொடர்ந்து கவச உடையுடன் சென்று கொரோனா சிகிச்சை பெறும் காவலர்களை நலம் விசாரித்த சென்னை காவல் ஆணையர்…!

கொரோனா சிகிச்சை மேற்கொண்டு வரும் காவலர்களை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கவச உடையில் சென்று நலம் விசாரித்தார்.  சென்னை எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவலர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு மிதமான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், கொரோனா சிகிச்சை மேற்கொண்டு வரும் காவலர்களை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கவச உடையில் சென்று, … Read more

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி மாயம்….! போலீசார் வலைவீச்சு…!

மதுரையில், அரசு ராஜாஜி மருத்துவமனையில், உசிலம்பட்டியை சேர்ந்த 60 வயதான மூதாட்டி, கொரோனா சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது மாயமாகியுள்ளார்.  தமிழகத்தில், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில், மதுரையில், அரசு ராஜாஜி மருத்துவமனையில், உசிலம்பட்டியை சேர்ந்த 60 வயதான மூதாட்டி, கடந்த 20-ம் தேதி கொரோனா சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த மூதாட்டி திடீரென மருத்துவமனையில் இருந்து வெளியேறி உள்ளார். … Read more

ரயில் பெட்டிகளில் கொரோனா சிகிச்சை மேற்கொண்ட 80 பேர் டிஸ்சார்ஜ்…!

ரயில் பெட்டிகளில் 146 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 80 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 66 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து, அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன. படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, மருத்துவமனைகளில் ஏற்படும் படுக்கைகள் பற்றாகுறை பிரச்சனையை போக்க ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டுகளாக ரயில்வே துறை மாற்றி வருகிறது. அந்த வகையில், கொரோனா … Read more

தனியார் மருத்துவமனைகள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – கனிமொழி எம்.பி

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி வலியுறுத்தல். திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், அரசு நிர்ணயித்த கொரோனா சிகிச்சை கட்டணத்தை விட அதிகமாக சில தனியார் மருத்துவமனைகள் வசூலித்து வருவதால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டணத்தை நிர்ணயித்த அரசு அதனை முறையாக செயல்படுத்தவும் வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களை … Read more

கொரோனா சிகிச்சைக்கு இந்த மருந்தை பயன்படுத்த வேண்டாம்! WHO அதிரடி முடிவு!

கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளின் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்து நீக்கம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த, மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து பயனளிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை உலக சுகாதார நிறுவனம் நீக்கியுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7 ஆயிரத்திற்கு அதிகமான … Read more

அரும்பாக்கத்தில் உள்ள அப்பாசாமி மருத்துவமனை மீது நடவடிக்கை.!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அப்பாசாமி மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்கு  அனுமதி தற்காலிக ரத்து.  கொரோனா நோய் தொற்று காலத்தில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் சிகிச்சைக்கு அதிக நிதிச்சுமைக்கு ஆளாகாத வண்ணம் தனியார் மருத்துவமனைகளில் அதிகபட்சமாக செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களை நிர்ணயித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கொரோனா நோய்க்கு வழங்கப்படும் சிகிச்சைகளையும் அதற்காக தனியார் மருத்துவமனைகளில் வாங்கும் கட்டணங்கள் குறித்து அரசு தொடர்ந்து … Read more

கொரோனா சிகிச்சைக்கான புதிய நெறிமுறை.. வெளியிட்டது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. ஒரே நாளில் இந்த வைரஸ் தொற்றால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ஒரே நாளில் 311 பேர் உயிரிழந்துள்ளது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கான புதிய நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறுகையில்,  ஒருவருக்கு கொரோனா தொற்று, ஆரம்பநிலையில் இருக்கும்போது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை கொடுக்க வேண்டும். அது முற்றிய நிலையில், அவர்களுக்கு ஹைட்ராக்ஸிகுரோகுவின் மருந்துகளை கொடுக்க கூடாது … Read more