மும்பையில் ரயிலின் படியை தொட்டு வணங்கிய பயணி…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!

கடந்த 1ஆம் தேதியன்று, மும்பை மாநகரில் 11 மாதங்களுக்கு பின் உள்ளூர் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ரயிலில் பயணம் செய்வதற்கு முன்னர் பயணி ஒருவர் ரயில் வண்டியின் படியை தொட்டு வணங்கி ஆசிபெற்று ஏறியுள்ளார். கொரோனா  ஊரடங்கு காரணமாக பல இடங்களில் ரயில் சேவை, விமான சேவை என போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 1ஆம் தேதியன்று, மும்பை மாநகரில் 11 மாதங்களுக்கு பின் உள்ளூர் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த ரயிலில் பயணம் செய்வதற்கு … Read more

#BREAKING: இளவரசிக்கு இன்று கொரோனா பரிசோதனை.!

பெங்களூர் சிறையில் உள்ள இளவரசிக்கும் இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது. பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என சிறை கண்காணிப்பாளர் லதா என்பவர் தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது சிறையில் உள்ள இளவரசிக்கும் பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கல்லூரி திறப்பது குறித்து 2 நாட்களில் முடிவு – அமைச்சர் அன்பழகன்

முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி திறப்பது குறித்து 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட கல்லூரிகள், டிசம்பர் மாதம் திறக்கப்பட்டன. முதுகலை மற்றும் இளங்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே கல்லூரிகள் திறக்கப்பட்டது. முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி திறப்பது குறித்து 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் … Read more

வணக்கம் கூறி பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர்!

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழில் வணக்கம் கூறி பிரிட்டனில் வசிக்கும் தமிழர்களுக்கும் தமிழ் மருத்துவர்களுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று தமிழர்களின் புதிய வருட பிறப்பை கொண்டாடும் வகையில் தைப்பொங்கல் திருநாள் உலகின் பல இடங்களில் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று பொங்கல் திருநாளை ஒட்டி பல தலைவர்களும் அரசியல்வதிகளும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களும் தமிழில் வணக்கம் கூறி தனது … Read more

மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது கொரோனாவை அதிவேகமாக பரப்பும் – பொது சுகாதார நிபுணர்

மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது கொரோனாவை அதிவேகமாக பரப்பும் என பொது சுகாதார நிபுணர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.  கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமலில் இருந்தது. இந்நிலையில், சமீப காலமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிற நிலையில், சமீபத்தில் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கலாம் என தமிழக முதல்வர் தெரிவித்திருந்த நிலையில், நேற்று 100% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு … Read more

#BREAKING: அவசரகால பயன்பாட்டுக்கு கோவாக்சின் தடுப்பூசி பரிந்துரை.!

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்தலாம் என்று நிபுணர் குழு பரிந்துரை. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் புனே சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு, ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள மற்றோரு தடுப்பூசி ஆகிய  3 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே, அவசர கால பயன்பாட்டிற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் தர மத்திய அரசுக்கு, மருந்து … Read more

சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் 85 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னையில் கிண்டியில் உள்ள பிரபல ஓட்டலான ITC கிராண்ட் சோழா ஓட்டலில், ஊழியர்கள் உள்ளிட்ட 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலான ITC கிராண்ட் சோழா ஓட்டலில் 600 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில், 50 பேருக்கு பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 85 … Read more

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியருக்கு கொரோனா தொற்று!

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த செவிலியரான மாத்யூ பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் மீண்டும் அவருக்கு கொரோன தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இதனை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒரு சில நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த செவிலியரான மாத்யூ டிசம்பர் 18ஆம் தேதி இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டார். பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக் கொண்டதும் … Read more

இந்தியாவில் 14 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று!

இந்தியாவில் புதிதாக உருவாகியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் தற்பொழுது மீண்டும் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் தொற்று இன்னும் உலக அளவில் அதிக பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தி வரும் நிலையில், அதன் தாக்கமே குறையாத நிலையில் இந்த கொரோனா வைரஸ் இப்பொழுது புதிதாக உருவெடுத்து மேலும் அதிகமான பாதிப்பு கொண்ட நோயை பரப்புகிறது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை … Read more

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை – விஜயபாஸ்கர்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை என  அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் 28 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்றார். மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் சுகாதாரத்துறை முயற்சியால் கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் மீண்டும் முழு … Read more