#BREAKING: அதிகரிக்கும் கொரோனா – பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை. நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி அவரச ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்ததால், கொரோனா பாதிப்பு நிலவரம், தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். தடுப்பூசி போடும் பணிகள், மருத்துவ … Read more

நாளை முதல்…இவை கட்டாயம்;மீறினால் ரூ.500 அபராதம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை:நாளை முதல் (ஜன.10 ஆம் தேதி) புறநகர் மின் ரயில்களில் பயணிக்க இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும்,கொரோனா கட்டுப்பாடுகளின்படி,புறநகர் ரயில் சேவைகள் 50% இருக்கை வசதியுடன் இயக்க அனுமதிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில்,நாட்டில் நிலவும் தொற்றுநோய் சூழ்நிலையை கருத்தில் கொண்டும்,மத்திய … Read more

இந்தியா முழுவதும் ஒரே நாளில் 40 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி- அமைச்சர் மன்சுக் மாண்டவியா..!

இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 40 லட்சம் சிறார்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் 2 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 3 பிரிவுகளாக பிரித்து தடுப்பூசிக்கான பரிசோதனை நடைபெற்று வந்தது. அதில், 2 முதல் 8 வரை, 8 முதல் 14 வரை, 12முதல் 18 வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனை நடைபெற்றது. … Read more

எச்சரிக்கை…மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – ஒரே நாளில் 16,764 பேர் பாதிப்பு;220 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,764 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 220 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,48,38,804 ஆக உள்ளது. மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,270 ஆக உயர்வு. கடந்த 24 மணி நேரத்தில் 16,764 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 3,600 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை  3,48,38,804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு … Read more

#BREAKING: பிரத்யேக மையங்களில் சிறார்களுக்கு தடுப்பூசி..!

15-18 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்த பிரத்யேக தடுப்பூசி மையங்களை மையங்கள் அமைக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல். ஜனவரி 3-ஆம் தேதி முதல் 15 – 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், ஜனவரி 10 ஆம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், சுகாதாரத்துறை … Read more

#Breaking:மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவோவாக்ஸ்,கார்பேவாக்ஸ் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கும் மற்றும் மோல்னுபிராவிர் மருந்து ஆகியவற்றிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) கொரோனா தடுப்பூசிகளான கோவோவாக்ஸ் & கார்பேவாக்ஸ் மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்தான மோல்னுபிராவிர் போன்றவற்றின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்துக்கு  அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக,மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது: “மத்திய சுகாதாரம் … Read more

15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி – மத்திய அரசு இன்று ஆலோசனை!

15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அனைத்து மாநில தலைமை செயலாளர்கள்,சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார். வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15 – 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும்,முன்களப் பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் பணி ஜனவரி 10 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் பிரதமர் மோடி கடந்த இரு தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இதனைத் … Read more

சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி ஜனவரி 1 முதல் முன்பதிவு..!

15- 18 வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட COWIN  செயலியில் ஜனவரி 1 முதல் முன்பதிவு செய்யலாம் இந்தியாவில் 2 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 3 பிரிவுகளாக பிரித்து தடுப்பூசிக்கான பரிசோதனை நடைபெற்று வந்தது. அதில், 2 முதல் 8 வரை, 8 முதல் 14 வரை, 12முதல் 18 வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய … Read more

#BREAKING: இன்னும் 6 மாதங்களில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – சீரம் நிறுவனம்

குழந்தைகளுக்கு இன்னும் 6 மாதங்களில் கொரோனா தடுப்பூசி அறிமுகம் என சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு. இன்னும் 6 மாதங்களில் 3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி அறிமுகமாகும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இதுதொடர்பான குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுமா என்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், 3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இன்னும் 6 மாதங்களில் கொரோனா … Read more

குட்நியூஸ்…நீண்ட நாட்களுக்கு பிறகு 6 ஆயிரத்து கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,784 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 252 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,47,03,644 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5,784 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட  1500 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,47,03,644 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 252 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,75,888 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து … Read more