சவுரவ் கங்குலி குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா!

கொரோனா பாதிப்பில் இருந்து சவுரவ் கங்குலி மீண்டு வீடு திரும்பிய நிலையில் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

பிசிசிஐ தலைவர் சவ்ரவ் கங்குலி குடும்பத்தில் மகள் உள்பட குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா பதிப்பில் இருந்து கங்குலி குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் தற்பொழுது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

#Breaking:அதிர்ச்சி…சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு கொரோனா!

திருச்சி:சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில்,  இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.அதன்படி,தென் ஆப்பிரிக்கா,பிரிட்டன்,சிங்கப்பூர் உள்ளிட்ட ஒமைக்ரான் பரவிய 35 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதன்படி,ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்த விமான நிலையத்திலேயே தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தவருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பாதித்த தஞ்சையை சேர்ந்த இவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறிய மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பரிசோதனைக்கு பிறகு அவருக்கு எந்த வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என தெரிய வரும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும்,தொற்று பாதித்த நபருக்கு திருச்சிஅரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

#Breaking:சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா உறுதி….இன்று போட்டி நடைபெருமா?..!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் டி.நடராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான இந்தியன் பிரீமியர் லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில்,ஹைதராபாத் அணி வீரர், T நடராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும்,அவருடன் தொடர்பில் இருந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், அணி மேலாளர் விஜய் குமார், பிசியோதெரபிஸ்ட் ஷ்யாம் சுந்தர் ஜே, மருத்துவர் அஞ்சனா வண்ணன், தளவாட மேலாளர் துஷார் கேட்கர் மற்றும் நெட் பந்துவீச்சாளர் பெரியசாமி கணேசன் போன்றோர்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
எனினும்,மற்ற வீரர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் நெகடிவ் என வந்துள்ளதால்,இன்றைய போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

“அதிகாலை 3 மணி வரை தூங்காமல்,இந்திய வீரர்கள் அச்சம் கொண்டது ஏன்?” – தினேஷ் கார்த்திக் விளக்கம்..!

இந்திய வீரர்கள் அச்சம் கொண்டது ஏன் என்று இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்தானது குறித்து தினேஷ் கார்த்திக் விளக்கமளித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட  டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.இதற்கிடையில்,இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற இருந்தது. இதனால், நேற்று இந்திய குழுவினருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இந்தியாவின் பிசியோ நிபுணர் யோகேஷூக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியது.ஆனால், இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் ‘நெகட்டிவ்’ என முடிவு வந்தது.

இதனால்,5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.எனினும்,போட்டியை மீண்டும் நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

இந்நிலையில்,இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக், தற்போது இங்கிலாந்தில் உள்ள சில இந்திய வீரர்களுடன் பேசியதாகவும்,கொரோனா  காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்காக மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் மைதானத்தில் விளையாட அவர்கள் ஏன் தயங்கினார்கள் என்பதை புரிந்து கொள்ள முயன்றதாகவும் கூறினார்.

மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:

“நான் இந்திய வீரர்களிடம் பேசினேன்,மான்செஸ்டரில் நடந்த டெஸ்ட் போட்டியை முன்னிட்டு இந்தியாவின் உதவியாளர் பிசியோ யோகேஷ் பர்மார் நேர்மறை சோதனை செய்துள்ளார் மற்றும் புதன்கிழமை பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் அவரிடம் பயிற்சி பெற்றனர்.

அது வேறு யாராக இருந்தாலும்கூட அவர்கள் இந்த அளவுக்கு பயப்பட மாட்டார்கள்.ஆனால்,பிசியோ நபர் கொரோனா நேர்மறை சோதனை பெற்றதுதன் காரணமாகவே,இந்திய வீரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நடுக்கம் அடைந்தார்கள்.இதனால்,நேற்று அதிகாலை 3 மணி வரை நிறைய இந்திய வீரர்களால் தூங்க முடியவில்லை, எனவே டெஸ்ட் போட்டியை முன்னெடுப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று நினைக்கிறேன்.

மேலும்,2021 ஐ ஐக்கிய அரபு அமீரகத்தில் 9 நாட்கள் கழித்து ஐபிஎல் மீண்டும் தொடங்குவது இந்திய வீரர்களை மிகவும் தயங்க வைத்தது.

நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும், இது முடிந்தவுடன், அவர்கள் விரைவில் உலகக் கோப்பை,அதன் பிறகு ஐபிஎல் மற்றும் நியூசிலாந்து தொடரை விளையாடவுள்ளார்கள்.ஒருவார கால இடைவெளியில் அவர்களால் எத்தனை கொரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்க முடியும்?”,என்று தெரிவித்துள்ளார்.

செவிலியர் கல்லூரி மாணவர்கள் 100 பேருக்கு கொரோனா-கர்நாடகா..!

கர்நாடகாவில் 100 செவிலியர் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தற்போது செவிலியர் கல்லூரி மாணவர்கள் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 26 ஆம் தேதி அன்று கர்நாடகத்தில் செவிலியர் தேர்வு நடக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் கேரளாவை செர்ந்த 48 மாணவர்கள் பங்கேற்று உள்ளனர். இவர்களில் 21 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் செவிலியர் கல்லூரிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் 9 கல்லூரிகளில் கிட்டத்தட்ட 900 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். இவர்களில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் அறிகுரியற்ற நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாணவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் சாஹலுக்கு கொரோன உறுதி ..!

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் சாஹலுக்கு கொரோன உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது.இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இதைத்தொடர்ந்து,நடைபெற்ற டி20 போட்டியில்,இந்திய அணி 1 -2 என்ற கணக்கில்,இலங்கையிடம் தோற்றது.இதற்கிடையில்,இரண்டாவது டி -20 போட்டியின்போது,கிருனால் பாண்டியாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்,அவருடன் இருந்த 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில்,எட்டு வீரர்களின் குழுவில் இருந்த,மூத்த லெக்ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஸ்பின்-பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கே கவுதம் இருவரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால்,கிருனலுடன் சாஹல் மற்றும் கவுதம் ஆகியோர் மீண்டும் கொழும்பில் தங்கியிருக்க வேண்டியிருக்கும்.மேலும்,பரிசோதனையில் கொரோனா நெகடிவ் என வந்த மற்ற ஆறு வீரர்களான கிருனலின் சகோதரர் ஹார்டிக், பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, தீபக் சாஹர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இன்று இந்தியா திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனினும்,மீதமுள்ள இந்திய அணி குழு இந்தியாவுக்குத் திரும்புவது உறுதி.

இலங்கை அரசின் வழிகாட்டுதல்களின்படி,கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட எவரும் குறைந்தது பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும், பின்னர் புதிய சோதனைகளை முடித்து நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ ஒலிம்பிக்: கொரோனா பாதித்த மற்றொரு அமெரிக்க வீராங்கனை..!

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் அமெரிக்க ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை ஒருவருக்கு கொரோனா பாசிடிவ் என வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற 23 ஆம் தேதி 32-வது ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கவுள்ளது.இந்த ஒலிம்பிக் போட்டியானது ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள்.இதன்காரணமாக,அவர்களுக்கு தினமும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக நடைபெறும் பயிற்சி முகாமில் அமெரிக்க ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாசிடிவ் என்று வந்துள்ளதாக கியோடோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும்,சிபா ப்ரிஃபெக்சர் இன்சாய் நகரத்தால் கொரோனா பாதிக்கப்பட்ட டீனேஜ் விளையாட்டு வீரரின் பெயர் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில்,ஐரோப்பாவின் செக் குடியரசு கைப்பந்து வீரருக்கு கொரோனா உறுதி செய்ததாக செய்தி வந்த நிலையில்,தற்போது அமெரிக்க ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனைக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும்,இந்த வளாகத்தில் இருந்த இரண்டு தென்னாப்பிரிக்க கால்பந்து வீரர்கள் மற்றும் ஒரு ஆய்வாளர் ஆகியோருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அதேப் போன்று,அமெரிக்காவை சேர்ந்த 17 வயது டென்னிஸ் வீராங்கனை கோகோ காப்க்கு,கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும், இதன்காரணமாக ஒலிம்பிக் போட்டியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Breaking: தமிழகத்தில் புதிதாக 4,804 பேருக்கு கொரோனா பாதிப்பு..!-98 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 4,804 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4,804 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,70,678 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 291 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 98 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32,388 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 6,553 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 23,97,336 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,60,895 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,25,15,205 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 40,954 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

#Breaking: தமிழகத்தில் புதிதாக 5,415 பேருக்கு கொரோனா பாதிப்பு..!-148 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 5,415 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 5,415 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,60,747 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 314 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 148 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32,199 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 7,661 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 23,83,624 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,70,963 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,21,88,107 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 44,924 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

#Breaking: தமிழகத்தில் புதிதாக 5,755 பேருக்கு கொரோனா பாதிப்பு..!-150 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 5,755 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 5,755 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,55,332 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 350 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 150 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32,051 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 8,132 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 23,75,963 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,71,117 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,20,17,144 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 47,318 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version