#BREAKING: கல்லூரி திறக்கப்பட்டதும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை – அமைச்சர்

கல்லூரிகள் திறக்கப்பட்டதும் முதலாமாண்டு மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என தகவல். தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டதும் முதலாமாண்டு மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு உதவித்தொகை ரூ.1000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறினார். இதனிடையே, தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் … Read more

கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? – அமைச்சர் பொன்முடி விளக்கம்!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரம் காரணமாக நடப்பு ஆண்டில் இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து, தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், பள்ளி, கல்லூரிகள் திறக்க தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. மாநிலத்தில் … Read more

அண்ணா பல்கலைக்கழகம் – வகுப்புகள் நடைபெறும் அட்டவணை வெளியீடு!

அனைத்து இளநிலை, முதுநிலை வகுப்புகளும் பிப். 8 முதல் முழுமையாக திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. BE, BTech, ME, MTech முதலாமாண்டு மாண்வர்களுக்கு வரும் 8ம் தேதியும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் 15ம் தேதியும்,மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதியும் வகுப்புகள் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அட்டவணையை வெளியிட்டுள்ளது.