ஆர்.கே நகர் ; வயிற்றில் பணம் கட்டி வைத்திருந்த அதிமுக நிர்வாகி பச்சையப்பன் கைது…!

சென்னை ஆர்.கே. நகரில் வாக்காளருக்கு கொடுப்பதற்காக வயிற்றில் பணத்தை கட்டி வைத்திருந்த அதிமுகவை சேர்ந்த பச்சையப்பன் என்பவர் கைது செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் அவரை விசாரணை செய்து வருகின்றனர்.கடந்த தேர்தலை போல இந்த தேர்தலிலும் பணம் சும்மா பூந்து விளையாடுது போல….???

இந்திய கடற்படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுவ்ரோஜோதி ராய் அவர்களை நேரில் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள்…!

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்கள் பற்றியும், எதிர்காலத்தில் புயல் பாதிப்புக்களை உயிர்ச்சேதமின்றி எதிர்கொள்வது பற்றியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் ,நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான டி.கே.ரெங்கராஜன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் ஆகியோர் இந்திய கடற்படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுவ்ரோஜோதி ராய் அவர்களை நேரில் சந்தித்து விவாதித்தனர்.

ஓகி புயல்: இழப்பீடு ரூ.20 லட்சம் போதாது ரூ.50 லட்சம் கொடுக்கனும் ட்விட்டரில் கோரிக்கை வைத்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…!!

ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடாக அரசு அறிவித்த ரூ.20 லட்சம் போதாது;அந்த நிவாரண தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க அரசு ஆவணம் செய்ய வேண்டும்  என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசிடம் ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.

ஓகி புயல்: உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கும் தலா ரூ.20 லட்சமும் ,குடும்பத்தில் படித்த ஒருவருக்கு அரசு வேலை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.பின்பு செய்தியாளர்களை சந்தித்து ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் எனவும் மேலும் அவர் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்

ஓகி புயலில் சிக்கி உயிரிழந்த 5 தூத்துக்குடி மீனவர்களில் ஒரு மீனவரின் உடல் இறுதிசடங்குக்காக நாளை தூத்துக்குடி வருகிறது….

தூத்துக்குடி:ஒகி புயலில் சிக்கி உயிழந்த தூத்துக்குடி மீனவர் காலனியை சேர்ந்த மீனவர் ஜூடு(வயது 40) என்பவரது உடல் மட்டும் DNA பரிசோதனை மூலம் மட்டும் அடையாளம் காணப்பட்டு,பின்பு பிரேத பரிசோதனை செய்யபட்டுள்ளார்.இறந்த அந்த மீனவரது உடலானது நாளை காலை தூத்துக்குடி வந்தடையும் பின்பு அவருக்கான இறுதிசடங்கு நடைபெறும் அங்குள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மீனவர்களின் குடும்பத்தினரால் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   முதல்வர் பினராயி விஜியனிடம் போனில் பேச்சுவார்த்தை: இறந்து போன தூத்துக்குடி மீனவர் உடலை கொண்டு … Read more

8 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவிகளின் கல்வி உதவித்தொகை என்னாச்சு…கனிமொழி எம்.பி

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் 8ஆம் வகுப்புக்கு மேல் படிக்க மத்திய அரசாங்கம் உதவித் தொகை அளிக்கிறது. தமிழக அரசால் பயனாளிகள் பட்டியல் தரப்படாததால் 2011 முதல் தமிழகத்தில் யாருக்கும் இது கிடைக்கவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பின்பாவது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாநில அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும்” இலங்கை தமிழ் எம்.பி

“எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும்” ”இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை இலங்கை கடற்படையால் தடுக்க முடியவில்லை” மேலும் அப்படி எல்லையை மீறி மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து கடுமையான தண்டனைகளை வழங்க இலங்கை அரசு உத்தரவிட வேண்டும் என வடக்கு மாகாண எம்.பி சரவணபவன் இலங்கை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.  

முதல்வர் மற்றும் துணை முதல்வர் வருகைக்காக 15 நிமிடங்களில் தயாராகும் தற்காலிக சாலை.

சென்னையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் வருகைக்காக 15 நிமிடங்களில் தயாராகும் தற்காலிக சாலை. தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் அருகே உள்ள சாலையை தற்காலிகமாக அவரச அவரசமாக தயாராகிறது இந்த சாலை .இதே போன்று அனைத்து பகுதிகளிலும் அரசு விரைந்து செயல்பட்டால் மக்களும் மகிழ்ச்சியாக தங்களது அனுதினத்தையும் களிப்பார்கள் …. கவனிக்குமா நமது மாநில அரசு ..