இலங்கையில் தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

M. G. Stalin Minister Jaishankar

சமீப காலமாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக உள்ள நிலையில், தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நேற்று ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 23 மீனவர்களையும், இன்று நெடுந்தீவு அருகே 14 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஏற்கனவே, இலங்கை கைது செய்த மீனவர்கள் 37 போரையும், 5 படகுகளை விடுதலை செய்ய மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட 37 மீனவர்களையும், சிறை பிடிக்கப்பட்ட 5 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக … Read more

பட்டாசு விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர்!

நாமக்கல்லில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிதியுதவி அறிவித்தார். நாமக்கல் மாவட்டம் மோகனுர் மேட்டுத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானது. இதில், பட்டாசு கடை உரிமையாளர் தில்லைக்குமார், தாயார் செல்வி, மனைவி பிரியா உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. கிடங்கில் இடமில்லாததால் வீட்டிலும் பதுக்கியபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மோகனுர் டவுனில் … Read more

மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உயர்வு – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத்தை ஜனவரி முதல் வழங்க ரூ.65.89 கோடி நிதி ஒதுக்கீடு. மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை ரூ.1,000 லிருந்து ரூ.1,500 ஆக உயர்த்திய நிலையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத்தை ஜனவரி முதல் வழங்க ரூ.65.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

புத்தாண்டே வருக.. புதுவாழ்வு தருக – முதலமைச்சர் வாழ்த்து

அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது என முதலமைச்சர் முக ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து. ஆங்கில புத்தாண்டையொட்டி, புத்தாண்டே வருக, புதுவாழ்வு தருக என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் வீடியோ வாயிலாக அனைவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது. உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம். புத்தாண்டே வருக, புதுவாழ்வு தருக! இணையற்ற இளைய ஆற்றல் … Read more

மேலும் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம்! – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

அறநிலையத்துறை சார்பில் மேலும் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடக்கம்.  தமிழ்நாட்டில் அறநிலையத்துறை சார்பில் மேலும் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் அங்கும் திட்டத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். அதன்படி, ராமேஸ்வரம் (ரங்கநாத சுவாமி), திருவண்ணாமலை (அருணாச்சலேஸ்வரர்), மதுரை (மீனாட்சி) ஆகிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.    

நடமாடும் பணிமனைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

அரசு நடமாடும் பணிமனைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். சென்னை தலைமை செயலகத்தில் அரசு நடமாடும் பணிமனைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசு வாகனங்களை ஆய்வு செய்யவும், பராமரிக்கவும் நடமாடும் பணிமனைகள் இயக்கப்படுகிறது. போக்குவரத்துத்துறை சார்பில் அமைக்கப்பட்ட 7 அரசு நடமாடும் பணிமனைகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

#BREAKING: விவசாயிகளுக்கு ரூ.51 கோடி இடுபொருள் நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் 48,593 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு. வடகிழக்கு பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட 27 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.51 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 27 மாவட்டங்களில் 48,593 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 40,031 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. கடந்த அக்.1 முதல் டிசம்பர் 4 வரையான வடகிழக்கு பருவமழை காலத்தில் … Read more

பிரதமர் மோடியின் தாயார் மறைவு – குஜராத் செல்கிறார் முதலமைச்சர்!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறுவதற்காக குஜராத் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நல குறைவு காரணமாக இன்று காலை காலமானார். குஜராத்தின் காந்திநகருக்கு சென்ற அவரது தாயார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, தாயார் உடலை தோளில் சுமந்து சென்றதுடன் இறுதி சடங்கில் பங்கேற்றார். இதன்பின் காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது. தாயார் … Read more

இவர்களுக்கான ஊக்கத்தொகையை 1000 ரூபாய் உயர்த்தி முதலமைச்சர் அறிவிப்பு!

மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் சுகாதார பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்தார் முதல்வர். திருச்சி மாவட்டம் சன்னாசிபட்டியில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் பயனடையும் 1 கோடியே 1வது பயனாளியான மீனாட்சி என்பவருக்கு மருந்து பெட்டகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். இதன்பின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மகத்தான சாதனை விழாவில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் 20,000 சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை ரூ.1000 உயர்த்தி அறிவித்துள்ளார். இதனிடையே, … Read more

விமர்சனங்களுக்கு செயலால் பதில் தருவார் உதயநிதி – முதலமைச்சர்

விளிம்பு நிலை மக்களை மேம்படுத்தும் துறைகள் உதயநிதியிடம் வழங்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் பேச்சு. விமர்சனத்துக்கு தனது செயல்பாடுகளால் பதில் சொல்லி அனைவரது பாராட்டையும் பெறுபவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்று திருச்சியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் விளிம்பு நிலை மக்களை மேம்படுத்தும் துறைகள் உதயநிதியிடம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தனக்கு ஒதுக்கப்பட்ட துறையை சிறப்பாக நடத்தி அனைவரது பாராட்டையும் பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் கூறியுள்ளார்.