ஸ்டாலின் கூறியபிறகு விவசாய கடனை முதலமைச்சர் தள்ளுபடி செய்தது சந்தர்ப்பவாதம் – கே.எஸ்.அழகிரி கருத்து

விவசாயிகள் கடன் சுமையால் துவண்டபோதே தள்ளுபடி செய்திருக்கலாம் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். நேற்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110-விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை அறிவித்தார்.அதாவது, கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார்.மேலும் கடன் தள்ளுபடி மூலம் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இது … Read more

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் இருந்து பலர் தூது விட்டனர் – மு.க.ஸ்டாலின் பேச்சு

மக்களால் வாக்களிக்கப்பட்டு ,திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய குறிக்கோள் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பயணம் மேற்கொண்ட ஸ்டாலின் பேசுகையில்,ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி … Read more

முதலமைச்சர் பழனிசாமியை சந்திக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ் ?

பாமக நிறுவனர் ராமதாஸ்  முதலமைச்சர் பழனிசாமியை சந்திக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறி பாமக சார்பில் பல போராட்டங்கள் நடைபெற்றது.ஆனால், ஆளும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவின் கோரிக்கையை அதிமுக அரசு இதுவரை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. இதனால் மூத்த அமைச்சர்கள் , பாமக நிறுவனர் ராமதாஸுடன் பல முறை பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.இந்நிலையில் தான் இன்று … Read more

“நான் சொல்வதை எல்லாம் அப்படியே செய்கிறார் முதலமைச்சர் பழனிசாமி” – மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் சுயநலத்துக்காக ரத்து செய்துள்ளார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110-விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை அறிவித்தார்.அதாவது,  கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி  செய்யப்படுவதாக அறிவித்தார்.மேலும் கடன் தள்ளுபடி மூலம் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் அறிவிப்புக்கு பதில் அளிக்கும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் … Read more

அன்றே அறிக்கை விடுத்தேன்., இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி – நிறுவனர் ராமதாஸ்

முதல்வர் பழனிசாமி பயிர் கடன்களை தள்ளுபடி செய்திருப்பது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர் கடன்கள் தள்ளுபடி செய்வதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். பயிர் கடன் தள்ளுபடி மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு விவசாயிகள் மட்டுமில்லாமல் பலரும் பாராட்டியும், வாழ்த்துக்கள் தெரிவித்தும் வருகின்றார்கள். அந்தவகையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் … Read more

7 பேர் விடுதலை ! முதல்வருடன் வரத் திமுக எம்பிக்கள் தயார் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

எழுவர் விடுதலையில், உங்கள் முகமூடி கழன்று கீழே விழுந்து விட்டது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையில் தி.மு.க. அரசியல் நாடகம் நடத்துகிறது” என்று தமிழகச் சட்டமன்றத்தில் கூறி – 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் ஏழு பேரின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தியிருப்பதுடன், மெகா பொய்யையும் அவிழ்த்து விட்டிருக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அ.தி.மு.க.வும் – பா.ஜ.க.வும் … Read more

பிப்ரவரி 14 ஃபெப்சி சங்க தேர்தல் – ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு.!

வரும் 14-ஆம் தேதி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தேர்தல் நடைபெறும் என்று ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஃபெப்சி) தலைவர், 5 துணை தலைவர்கள், 5 இணை செயலாளர்கள், 1 பொதுச்செயலாளர், 1 பொருளார் என மொத்தம் 13 நபர்களுக்கு இந்த தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். மேலும், இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 7-ஆம் … Read more

முதலமைச்சர் ,துணை முதலமைச்சருக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி -அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழக முதலமைச்சர் பழனிசாமி ,துணை முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு கொரொனா தடுப்பூசி போடப்படும் என்று பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.இதனையடுத்து, 3-வது நாளாக இன்று சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் நடைபெற்று வருகிறது.அப்பொழுது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழக முதலமைச்சர்,துணை முதலமைச்சர்,  அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு  விரைவில் கொரொனா தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கான கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பி … Read more

அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக  முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 22.1.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்கள் பணியில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், மக்களின் நலனுக்காக பணியாற்றும் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், நிர்வாக கட்டுப்பாட்டை நிலைநிறுத்தவும் சில நடவடிக்கைகளை … Read more

வாக்குறுதியை நிறைவேற்றாமல், உழவன் மகன் என எடப்பாடி நடிக்கக் கூடாது- வைகோ

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,உயர்மின் கோபுர திட்டங்களால் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும், வட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும், விவசாயிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், உயர்மின் கோபுரத்திற்குப் பதிலாக சாலை ஓரமாகக் கேபிள் அமைத்து, மின்சாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்து, கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயிகள், அறவழியில் போராடி வருகின்றார்கள். கடந்த … Read more