முதல்வராக பொறுப்பேற்கவுள்ள முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் – எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக மு.க ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளைக் கைப்பற்றி, தனி பெரும்பான்மையுடன் முக ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்கவுள்ளார். திமுகவின் வெற்றிக்கு பலரும் நேரில் சென்றும், சமூகவலைத்தளம் மூலமாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலாலுக்கு சேலத்தில் இருந்தே அனுப்பியுள்ளார். தமிழக … Read more

#LIVE: தமிழகத்தில் வாக்கு முடிவுகள் இதோ…! சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி

4:02:உதயநிதி வெற்றி|சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி.50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் களம்கண்ட பாமக வேட்பாளர் கஸ்ஸாலி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். 3:55-காட்பாடி தொகுதியில்  18-வது சுற்று முடிவில் 971 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் துரைமுருகன் முன்னிலை அ.தி.மு.க – 57828 தி.மு.க – 58,799 3:12-மார்கண்டேயன் வெற்றி|விளாத்திகுளம் திமுக வேட்பாளர் மார்கண்டேயன் 73,261 வாக்குகள் பெற்று வெற்றி .அதிமுக வேட்பாளர் சின்னப்பனை விட 37,893 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி … Read more

பட்டாசுகளை வெடிப்பது, வெற்றி ஊர்வலம் போன்ற செயல்களில் நாளை யாரும் ஈடுபடக்கூடாது -ஓ.பி.எஸ், இ.பி.எஸ்

பட்டாசுகளை வெடிப்பது, வெற்றி ஊர்வலம் போவது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என முதல்வர், துணை முதல்வர் அறிக்கை. தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையன்று (நாளை) பட்டாசுகள் வெடிக்க கூடாது, வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட கூடாது மற்றும் ஊர்வலம் போன்றவைகள் நடத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. வாக்கு எண்ணிக்கையின் போது தொண்டர்களை, தலைவர்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுயிருந்தது. இந்த நிலையில், பட்டாசுகளை வெடிப்பது, வெற்றி ஊர்வலம் போன்ற … Read more

அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் – முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின்

தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர் மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு மத்தியில் நாடு முழுவதும் இன்று தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில்,  தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர் மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அதன்படி, தளர்வறியா உழைப்பினால் இந்திய அளவில் தமிழகத்தை எப்போதும் முதன்மை … Read more

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இரட்டை இலையே என்றென்றும் வெல்லும் – ஓபிஎஸ், இபிஎஸ்

வாக்கு எண்ணிக்கையின்போது கட்சியினரும், தோழமை காட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், முகவர்களும் ஆரம்பம் முதலே கவனமாக இருந்து விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று முதல்வர், துணை முதல்வர் கூட்டு அறிக்கை. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில், கருத்து கணிப்புகள் எந்தவித மனசோர்வை தரவில்லை என்பதைக் கேட்டுப் பெருமிதம் கொள்கிறோம். அதிமுக … Read more

#BREAKING: தடுப்பூசி விலையை குறைக்க உத்தரவிட வேண்டும் – பிரதமருக்கு முதல்வர் கடிதம்!!

கொரோனா தடுப்பூசிகளின் விலையை குறைக்க உத்தரவிடக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். உள்நாட்டு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசி மாநில அரசுக்கு ரூ.400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என்று விலை நிர்ணயம் செய்தது அறிவித்திருந்தது. அதுபோல, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசி, மாநில அரசுகளுக்கு ரூ.600 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 என விலை நிர்ணயம் செய்து அறிவித்திருந்தன. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி விலை உயர்வு … Read more

#BREAKING: ஸ்டெர்லைட்டை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கலாம் – 5 தீர்மானங்கள் நிறைவேற்றம் – தமிழக அரசு

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிப்பு தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என ஒருமனதாக முடிவெடுத்து 5 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து நிறைவேற்றப்பட்டது. அதன்படி, உச்சநீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்தில் அமைந்துள்ள பிராண வாயு உற்பத்தி மற்றும் அதைச் … Read more

#breaking: ஸ்டெர்லைட் ஆலை திறக்கமடுமா? – முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது!!

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது. முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, சிபிஎம், சிபிஐ மற்றும் பாமகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாமா என்பது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. … Read more

#BREAKING: நாளை அனைத்து கட்சி கூட்டம் – முதல்வர் பழனிசாமி அழைப்பு!!

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக ஆலோசிக்க நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு. சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. தலைமை செயலகத்தில் நாளை காலை 9.15 மணிக்கு நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்த நிலையில், அது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் … Read more

தவறான கணக்கெடுப்பு… தமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பாதீர்கள் – பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை உறுதி செய்ய வேண்டும் என ரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் இருந்து ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு திருப்பிவிடப்பட்ட விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. ஸ்ரீபெரம்புதூர் ஆலையில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பிற மாநிலங்களுக்கு அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை உறுதி செய்ய வேண்டும் … Read more