கேரள முதல்வர் ராஜினாமா செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.!

தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்யக் கோரி திருவனந்தபுரத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம். கேரளாவில் ஜூலை 5ம் தேதி தங்கக் கடத்தல் மோசடி நடைபெற்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் துணைத் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரித்தபோது, ​​தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஸ்வப்னா சுரேஷ் இதில் ஈடுபட்டிருப்பதை வெளிப்படுத்தினார். பின்னர் ஐ.டி துறை ஸ்வப்னா … Read more

காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில், பினராயி விஜயன் அரசு வெற்றி.!

கேரள சட்டப்பேரவையில் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சியின் தீர்மானம் தோல்வியடைந்தது. கொரோனா வைரஸ் பரவலால் ஒத்திவைக்கப்பட்டிருந்த கேரள சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. அப்போது திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும் என்றும் மக்களுக்கு விருப்பமில்லாத இந்த முடிவை செயல்படுத்தினால் போதிய ஒத்துழைப்பை வழங்குவதில் சிரமம் ஏற்படும் என … Read more

திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயமாக்கலை எதிர்த்து கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்.!

இன்று நடைபெற்ற கேரளா சட்டப்பேரவையில் திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயமாக்கலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தனியார் பங்களிப்புடன் 3 விமான நிலையங்கள் இயங்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார். அதில், அசாம் கவுகாத்தி, ராஜஸ்தான் ஜெய்ப்பூர், கேரளா திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்கள் தனியார் பங்களிப்புடன் இயங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதனையடுத்து, … Read more

கேரள முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் – இன்று கூடுகிறது சட்டப்பேரவை.!

இன்று ஒரு நாள் மட்டும் கூடும் கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது. கேரளாவில் சமீபத்தில் பெரும் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ள தங்கம் கடத்தல் வழக்கில் பினராயி விஜயன் தலைமையிலான அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. முதல்வர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளருக்குத் தங்கம் கடத்தலில் தொடர்பு இருப்பதால், முதல்வர் பினராயி விஜயனிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா … Read more

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா “நெகட்டிவ்”!

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், அவருக்கு தொற்று இல்லையென உறுதியானது. சமீபத்தில், கோழிக்கோடில் நடந்த விமான விபத்தில் சிக்கி, 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நடந்த இடத்தை கேரள முதல்வர் பினராய் விஜயன் நேரில் சென்று பார்வையிட்டார். இந்தநிலையில், கோழிக்கோடு விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட 22 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து கேரள முதல்வர் பினராய் விஜயன், கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தன்னைத் … Read more

நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடு.! கேரள முதல்வர் அறிவிப்பு

மூணாறு, நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடு கட்டித்தரப்படும். எனவும், நிலச்சரிவில் உயிருடன் மீட்கப்பட்டவர்களின் குழந்தைகளின் பள்ளிசெலவுகளை அரசே ஏற்கும் எனவும் கேரள முதல்வர் தெரிவித்தார். கேரளவில் பெய்த கனமழை காரணமாக மூணாறு, ராஜமலை பெட்டிமுடி பகுதியில் கடந்த 7ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 20க்கும் மேற்பட்ட தொழிலார்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். இதில் 80 பேர் மண்ணில் புதையுண்டனர். 55 உயிரிழந்ததாகவும், 13 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருவதாகவும், தகவல் வெளியானது. இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை … Read more

30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு.! மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அதிரடி சஸ்பெண்ட்.!

கேரளாவில் 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.சிவசங்கர் சஸ்பெண்ட் செய்ப்பட்டுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கு தற்போது அடுத்தடுத்த பல அதிரடி திருப்பங்களை சந்தித்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே ஸ்வப்னா சுரேஷ், மற்றும் சரித் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை வட்டத்திற்குள் சிக்கியுள்ளனர். தற்போது மூத்த ஐஏஎஸ் அதிகாரியான எம்.சிவசங்கரும் இதில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் … Read more

தங்க கடத்தல் விவகாரம் எதிரொலி.! கேரள முதல்வர் பதவி விலக நம்பிக்கையில்லா தீர்மானம்.!?

30 தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக முதல்வர் மற்றும் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் நடத்திய கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. அதில், அண்மையில் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் கடத்திவரப்பட்ட 30 கிலோ தங்கம் தொடர்பான வழக்கில் சிக்கியுள்ளவர்கள் உடன் முதல்வர் அலுவலகம் சம்பந்தம் உள்ளதாக கூறி, இதனால் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக அவர் பதவி விலக கேரள சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் … Read more

30 கிலோ தங்கம் கடத்தல் ! எந்த விசாரணைக்கும் தயார் – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

தங்க கடத்தல் விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் தயார் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. எனவே தூதரக முகவரியை வைத்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள  பார்சல்களை ஆய்வு செய்த போது சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 … Read more

30 கிலோ தங்கம் கடத்தல்.! தேசிய புலனாய்வு முகமை வழக்கை விசாரிக்கும்.! – உள்துறை அமைச்சகம் உத்தரவு.!

கேரள தங்க கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு. கேரளாவில் கடந்த ஜூலை 5ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வந்த விமானத்தில் 30 கிலோ தங்கம் சட்ட விரோதமாக கடத்தி கொண்டுவரப்பட்டது சுங்கத்துறை அதிகாரிகளால் கண்டறியப்பட்டது. நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கிய இந்த வழக்கை விசாரிக்க மத்திய புலனாய்வு குழுவை கேரளா அனுப்பி வைக்கவேண்டும். அந்த குழுவிற்கு கேரள மாநில அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என … Read more