இயேசுவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும்.. கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்.!

கிறிஸ்துமஸ் பெருவிழாவை மகிழ்ச்சியோடு, ஏற்றத்தோடும் கொண்டாடும் அனைவருக்கும் முதலமைச்சர் வாழ்த்து. நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பெருவிழாவை மகிழ்ச்சியோடு, ஏற்றத்தோடும் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேய பண்புகளின் விழாவாக அனபை பரிமாறி உதவும் திருநாள். தம்மை சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னிக்கக் கோரிய உயர்ந்த உள்ளம் கொண்டு விளங்கியவர் இயேசு என கூறியுள்ளார். “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக … Read more

கிறிஸ்துமஸ் – 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல 600 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாளை முதல் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து நாளை 300 சிறப்பு பேருந்துகளும், நாளை மறுநாள் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை வருவதால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கிறிஸ்துமஸ் 2022: மக்கள் ஏன் “Merry Christmas” என்று கூறுகிறார்கள்? வரலாறு உள்ளே..

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மக்கள் ஏன் “Merry Christmas” என்று கூறுகிறார்கள்? என்பதை குறித்து பார்க்கலாம். இந்த ஆண்டில் இது மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டங்களின் பருவம். மக்கள் தங்கள் வீடுகளை அலங்கரிப்பது, சுவையான இனிப்புகளை தயாரித்தல், விருந்துகளில் கலந்துகொள்வது போன்றவற்றுடன் ஆண்டு இறுதி விழாக்கள் டிசம்பர் 24-அன்று தொடங்குகின்றன. ஏனென்றால், டிச.25 இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கிறது மற்றும் உலகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்து பிறப்பு விழாவாக வருடந்தோறும் கொண்டாடப்பட்டு … Read more

கிறிஸ்துமஸ் குடில், மரம் அமைக்கும் வழக்கம் ஏன்.? எப்படி துவங்கியது தெரியுமா.?

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் குடில் மற்றும் மரம் ஏன் வைக்கப்படுகிறது என்று இந்த சிறு குறிப்பில் நாம் பார்க்கலாம். கிறிஸ்மஸ் என்றாலே நம் நினைவுக்கு வரும் முக்கிய விஷயங்களில் ஒன்று கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது. ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இந்த குடில் அமைக்கப்படுவது வழக்கம். இயேசு கிறிஸ்து ஏழை வீட்டு குடிசை தொழுவத்தில் தான் பிறந்தார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அதனை குறிப்பிடும் வகையில் தான் இந்த குடில் அமைக்கப்படுகிறது என்பதும் … Read more