#Breaking:மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை…!

தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட ஆட்சியர்களுடன்,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,நாளை  காலை 11 மணியளவில்,காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஜூன் 21 வரை ஆம் தேதி ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக 38 மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். அதன்படி,நாளை காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில்,மாவட்ட வளர்ச்சிப்பணிகள்,கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவது … Read more

#Breaking:திமுகவில் இணையும்,மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய டாக்டர் மகேந்திரன்…!

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய டாக்டர் மகேந்திரன். திமுகவில் இணையவுள்ளதாகவும்,அதற்காக இன்று அண்ணா அறிவாலயம் வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக,அதிமுகவை தொடர்ந்து மக்கள் நீதி மையம் கட்சியும் போட்டியிட்டது.ஆனால்,மக்கள் நீதி மய்யம் கட்சியானது அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது.மேலும், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து,மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன், பொன்ராஜ், குமரவேல், மவுரியா,சந்தோஷ்பாபு, பத்மபிரியா உள்ளிட்ட பல … Read more

#Breaking:கொரோனா தடுப்பூசி உற்பத்தி – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…!

கொரோனா தடுப்பூசி உற்பத்தி குறித்து பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.எனினும்,ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அச்சம் கொண்டனர்.ஆனால்,தற்போது அதிக அளவிலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்காரணமாக,தற்போது தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.மேலும்,மத்திய அரசிடம் இருந்து போதுமான தடுப்பூசிகள் … Read more

#BREAKING : நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். கலைஞரின் கோபாலபுர இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்றுசக்கர சைக்கிள், ஏழை எளிய … Read more

#BREAKING : ஊரடங்கு நீடிப்பா…? முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…!

முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு, ஜூன் 7-ம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கை  அமல்படுத்தியுள்ளது.  இந்த ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.  இந்நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா … Read more

“பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக முதல்வரின் செயல்பாடு உள்ளது”-சரத்குமார் பாராட்டு!

பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடு உள்ளது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பாராட்டியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிகமாக காணப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன்படி,திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் கொரோனா நோயாளிகளுக்காக, திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த ஆக்சிஜன் வசதியுடன் … Read more

“மனித நேயத்தின் மறுபதிப்பாக செயல்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு” – வைகோ பாராட்டு..!

மனித நேயத்தின் மறுபதிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செயல்பட்டிருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டியுள்ளார். தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனாவால் பெற்றோர்களை இழந்து ஏராளமான குழந்தைகள் அதரவின்றி உள்ளனர். இதன்காரணமாக,கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கியில் 5 லட்சம் வைப்புத் தொகை செலுத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மேலும், பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு … Read more

#Breaking: முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் நன்றி….!

கொரோனா தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு,அதிமுக ஒருங்கிணப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனாவால் பெற்றோர்களை இழந்து ஏராளமான குழந்தைகள் அதரவின்றி உள்ளனர். இதன்காரணமாக,கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கியில் 5 லட்சம் வைப்புத் தொகை செலுத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மேலும், பெற்றோர்களை இழந்த … Read more

கோவையில் 50 கார் ஆம்புலன்ஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர்..!

கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 50 கார் ஆம்புலன்ஸ்களை கொடியசைத்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில்,சென்னையை விட கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படுகிறது. இதன்காரணமாக,கொரோனா பரவல் அதிகமாக உள்ள கோவை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் 6 மாவட்டங்களுக்கு இன்று,நேரடியாக … Read more

3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் டெல்லியில் தொடங்கி 6 மாதங்களாகியும் அதனை மத்திய அரசு கண்டு கொள்ளாதது கவலையளிக்கிறது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும்.மேலும்,இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறத் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை . இதுகுறித்து ,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் நாடாளுமன்ற நடைமுறைகளைப் புறக்கணித்து அவசரம் அவசரமாகக் கொண்டு வந்த “விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைச்சட்டம் 2020″, … Read more