“ அரியர் தேர்வை ரத்து செய்ய அதிகாரம் உள்ளது “ – தமிழக உயர் கல்வித்துறை

மாணவர்களின் நலன் கருதி அரியர் தேர்வை ரத்து செய்ய பல்கலைக்கழங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பட்டப் படிப்புக்களுக்கு இறுதிப் பருவத்தேர்வு தவிர, மற்ற பருவ தேர்வுகள் ரத்து செய்வதாகவும், அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்திருந்தது. அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் உத்தரவிற்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் … Read more

அரியர் வழக்கு – மாணவர்கள் வழக்கு விசாரணை நிறுத்தம்

அரியர் தேர்வுகள் ரத்தை எதிர்த்த வழக்கு விசாரணையை கவனிக்க நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆன் லைன் விசாரணையில் லாக் இன் செய்ததால் வழக்கு விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது. அரியர் தேர்வு ரத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், யூஜிசி  தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.  அதில், அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.இந்த விசாரணை ஆன்லைன் மூலமாக நடைபெற்றது.எனவே அரியர் தேர்வுகள் ரத்தை … Read more

வேல் யாத்திரை : அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை இன்று முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேல் யாத்திரைக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து  தமிழக அரசு வேல் யாத்திரைக்கு அனுமதி  மறுக்கப்பட்டது. ஆனால் பாஜக சார்பில் தடையை மீறி வேல் யாத்திரை  திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி ,நேற்று  காலை தடையை மீறி, தமிழக … Read more

வேல் யாத்திரை : தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாஜக!

வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி, தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாஜக பொதுச்செயலாளர். திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை, நவ.6 முதல் டிச.6 வரை வேல் யாத்திரை நடத்த பாஜக அரசு திட்டமிட்டிருந்தது. இதற்கு பல அரசியல் கட்சி பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சென்னையை சேர்ந்த பத்திரிக்கையாளர்களான பாலமுருகன் மற்றும் செந்தில் குமார் இருவரும் வேல் யாத்திரை நடத்த தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கு விசாரணைக்கு … Read more

சென்னை ஐகோர்ட்டில் சனம் ஷெட்டி தொடர்ந்த வழக்கு.!

சென்னை ஐகோர்ட்டில் சனம் ஷெட்டி தொடர்ந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்த போது அவரது புகாருக்கு காவல் துறை எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். நடிகையும், மாடலுமான சனம் ஷெட்டி தற்போதைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளராக திகழ்கிறார் . இவரும்,கடந்த சீசனில் போட்டியாளராக இருந்த தர்ஷனும் காதலிப்பதாக கூறப்பட்டது .ஆனால் தர்ஷன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் சனம் அவர்களை மறுப்பதாக கூறப்பட்டது .  அதனையடுத்து … Read more

கொரோனா உறுதி : சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மருத்துவமனையில் அனுமதி!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கொரோனாஉறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவின் தாக்கத்தால் தமிழகத்தில் பெரும்பாலும் அரசு ஊழியர்களும், முன்களப்பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களும் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு, உயிரிழக்கின்றனர். இந்நிலையில், தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி  ஏ.பி.சாஹி அவர்களுக்கு தற்பொழுது கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல்நல குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நீதிபதி  ஏ.பி.சாஹி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா … Read more

பேரறிவாளன் பரோல் நீட்டிப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். முதலில் இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.தற்போது  7 பேரும் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். இதனிடையே பேரறிவாளன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் … Read more

தமிழக அரசு வேல் யாத்திரைக்கு மறுப்பு தெரிவித்ததற்கான காரணம் என்ன?

தமிழக அரசு வேல் யாத்திரைக்கு மறுப்பு தெரிவித்ததற்கான காரணம். திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர்-6ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, சென்னையை சேர்ந்த பத்திரிக்கையாளர்களான, பாலமுருகன் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் இந்த யாத்திரைக்கு தடை விதிக்க கோரி தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர். அவர்கள் அளித்துள்ள மனுவில், கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி, மொகரம் … Read more

கோயில் நிலங்களை பிற பயன்பாடுகளுக்கு பயன்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம் .!

கோயில் நிலங்களை கோயில் பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், பிற பயன்பாடுகளுக்கு பயன்படுத்த கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கோயில் நிலங்களை பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது தொடர்பாக வி.பி.ஆர்.மேனன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதில், கோயில் நிலங்களை கோயில் விழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதாவது, மத ரீதியான பயன்பாடுகளுக்கு மட்டுமே கோயில் நிலங்களை பயன்படுத்த வேண்டும் என்றும், வேறு எந்த பயன்பாடுகளுக்கும் … Read more

7.5% உள் இடஒதுக்கீடு -ஆளுநரின் செயலர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

7.5% உள் இடஒதுக்கீடு  தொடர்பான ஆளுநரின் செயலர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, கொரோனா பரவலுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி கடந்த மாதம் 13 ஆம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்தார். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி மதுரையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு  … Read more