சிறந்த வில்லனாக இவர்! சிறந்த வில்லியாக இவர்!! பிகைன்ட்வுட்ஸ் கோல்ட் மெடல் லிஸ்ட்!!!

வருடா வருடம் சிறந்த திரைப்பட கலைஞர்களை கவுரவுக்கும் விதமாக பிகைன்ட்வுட்ஸ்-ஆனது அவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும். அந்த வரிசையில் 15வது பிகைன்ட்வுட்ஸ் விருதுகள் நிகழ்ச்சி தற்போது நடந்து வருகிறது. அதில் சிறந்த வில்லியாக, சண்டகோழி 2, மற்றும் சர்கார் படத்தில் வில்லியாக நடித்திருந்த வரலக்ஷ்மி சரத்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல சிறந்த வில்லனாக செக்க சிவந்த வானம் படத்தில் வில்லனாக நடித்திருந்த அரவிந்த் சாமிக்கு விருது வழங்கப்பட்டது. DINASUVADU

செக்கசிவந்த வானம் திரைப்பட வீடியோ பாடல் இன்று வெளியீடு

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் செக்கசிவந்த வானம். இத்திரைப்படம் இம்மாதம் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதில் மழைகுருவி பாடலின் ஒரு நிமிட வீடியோ மட்டும் இன்று மாலை வெளியாக உள்ளது. DINASUVADU

சூப்பர் ஹிட் கூட்டணியுடன் தெலுங்கில் தடம்பதிக்கும் அருண் விஜய்

லேட்டாக எழுந்து வந்தாலும் மாஸாக வளர்ந்து வருகிறார் அருண் விஜய். தடையற தாக்க படத்தில் கவனிக்கப்பட்டு, என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்திற்க்கு மாஸான வில்லன் விக்டராக வலம் வந்து பின்னர் குற்றம் 23 எனும் சூப்பர் ஹிட்  படத்தில் படத்தில் நடித்து தற்போது மணிரத்னம் படத்தில் ஷ்டைலான ஹீரோவாக வரும் வரை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார் அருண் விஜய். அவர் நடிப்பில் அடுத்தாக மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’ மற்றும் ‘தடம்‘ ஆகிய படங்கள் … Read more

ரொமன்ஸ் தூக்கலாக ஒரு த்ரில்லர் ஆக்ஷன் ட்ரெய்லர் : அருண்விஜயின் "தடம்"

அருண்விஜய் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தடம்‘. அருண் விஜய், இயக்குனர் மகிழ் திருமேனி ஏற்கனவே இணைந்திருந்த ‘தடையற தாக்க‘ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றதால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தற்போது அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில்  இன்று வெளியான டீசர் அமைந்துள்ளது. அதில் ஆரம்பத்தில் ரொமன்ஸ் காட்சிகள் நிரம்பி, பிறகு ஃபுல் ஆக்ஷன் த்ரில்லர் பேக்கேஜாக வநத்துள்ளது. இந்த டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னுனும் அதிகமாக ஏற்படுத்தியுள்ளது. … Read more

கவிப்பேரரசின் கவிதை தொகுப்பில் உருவாகிவரும் செக்க சிவந்த வானம் பாடல்கள்

இயக்குனர் மணிரத்னம் – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் – கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் இணைந்தால் அப்படத்தின் பாடல்கள் இசை பிரியர்களின் காதுகளுக்கு தேனமுது. அவ்வளவு அருமையாக வரிகளும், இசையும் கலந்து உருவாக்கி வரும். மணிரத்னம் தற்போது இயக்கி வரும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் இக்கூட்டணி மீண்டும் கைகோர்த்துள்ளது. இப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் என நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது இசை பணிகள் நடந்து வருகிறது. அந்த … Read more