கட்டுமானப்பணியின் போது தவறி விழுந்த பெண் – உடல் முழுவதையும் ஆக்கிரமித்த கம்பி!

கட்டுமான பணியின்போது 10 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த பெண்ணின் உடலை ஆக்கிரமித்த கம்பி, உயிர் பிழைத்த பெண்மணி. சீனாவில் கட்டுமான பணியின்போது 10 அடி உயரத்திலிருந்து பெண் ஒருவர் தவறி கீழே விழுந்துள்ளார். அப்பொழுது கீழே நீட்டிக்கொண்டிருந்த கம்பியில் இந்த பெண் நேராக விழுந்துள்ளார். இதனால் இந்தப் பெண்ணின் பின்புறம் வழியாக நுழைந்த கம்பி அவரது தோள்பட்டை வழியாக வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. உடனடியாக கம்பியை அறுத்து அங்கிருந்த உடன் வேலை ஆட்கள் மருத்துவமனைக்கு கொண்டு … Read more

கொரோனாவிலிருந்து மீண்டு 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளான 68 வயது சீன பெண்!

சீனாவில் 68 வயதுள்ள பெண்மணி கொரோனாவிலிருந்து மீண்டு 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தின் ஜிங்ஜோ எனும் பகுதியில் உள்ள 68 வயதுடைய பெண்ணொருவர் கொரோனாவிலிருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குணமடைந்து, தற்போது மீண்டும் கொரோனா தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டு உள்ளார். கொரோனா வைரஸ் முதன்முதலில் கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்டு சமூக பரவலாக மாறுவதற்கு முன்பதாகவே இந்த பெண்மணி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன் பின்பு சிகிச்சை … Read more

பிரேசிலிலிருந்து வந்த பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா வைரஸ் – சீனா எச்சரிக்கை!

பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சீனாவில் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு சீனாவில் உள்ள வுஹான் நகரில் உருவாகி பரவ ஆரம்பித்த கொரானா வைரஸ் தற்போது உலக நாடுகளை எல்லாம் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது சீனாவின் ஷென்ஷென் எனும் நகரில் பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியின் மேற்பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை சோதித்து பார்த்தபோது அதில் கொரானா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த … Read more

போர்???#அடுத்தடுத்த ஆப்பு_ஆமெரிக்கா-சீண்டி விட்டீர்கள்!சீறும் சீனா!

அடுத்தடுத்து நெருக்கடி கொடுக்கும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மறைமுக போரை துவக்க சீனா திட்டமிட்டுள்ளதாக சர்வதேச தகவல் வெளியாகியுள்ளது. சீன துாதரக அலுவலகங்களை எல்லாம் மூடுமாறு அமெரிக்கா முடுக்கி விட்டதை அடுத்து பதிலடி கொடுக்க நடவடிக்கையில் சீனாவும் இறங்கி உள்ளது. ‘கொரோனா வைரஸ் பற்றிய தகவலை  உலகிற்கு முன் கூட்டியே தெரிவிக்காமல் சீனா மறைத்து விட்டதாகவும் அதனால் தான், அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் பிடியில்  பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றது என்று … Read more

#பொருளாதார தடை_11சீன நிறுவனங்கள் வெளியேற்றம்!

11 சீன நிறுவனங்கள்  மனித உரிமை மீறலில்  ஈடுபட்ட அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. உய்குர் மக்களை அதிகளவில்  சிறையில் அடைப்பது அவர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது, அனுமதியின்றி அவர்களின் தனித்தகவல்களை சேகரிப்பது உள்ளிட்ட அடக்குமுறைகளை சீன அரசு செய்து வந்தது. உய்குர்  மக்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளை கண்டித்துள்ள,அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, அவர்களை சீனா  நடத்தும் விதம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கறை என விமர்ச்சித்துள்ளார்.இந்நிலையில் 11 சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் … Read more

இன்றைக்குள் பதில்! இல்லை#59Apps_??இந்தியா கடும்எச்சரிக்கை!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் தொடர்ந்து செயல்பட்டால் நிறுவனங்கள் மீது தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்  என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்திய இறையாண்மைக்கு  எதிராக இருப்பதால் தடை செய்யப்பட்ட குறிப்பிட்ட செயலிகள்  நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து  கிடைப்பது மற்றும் செயல்படுவது சட்டவிரோதம் என்று கூறியுள்ளது,மேலும் 79 அடங்கிய கேள்விகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு  மத்திய அரசு அனுப்பி உள்ளது. இந்த கேள்விகள் … Read more

#வர்த்தகம் கிடையாது – ஒப்பந்தம் ரத்து! சிக்கலில் சீனா!

அமெரிக்கா -சீனா இடையிலான உறவு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால், அந்நாட்டோடு இனி  இரண்டாம் கட்ட வர்த்தக ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு முற்றிலும் நசிந்து விட்டது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக தெரிவிது உள்ளார். அமெரிக்கா மற்றும் சீனா இடையில் இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த சுமுக பேச்சு வார்த்தையை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே, மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்ஆனது கையெழுத்தானது. இதன் தொடர்ச்சியாகவே 2ம் கட்ட ஒப்பந்தமும் விரைவில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் தான் … Read more

#உங்களை கண்டு பெருமிதம்- சீனாவின் சிறகை ஒடிப்போம்!

எல்லை விவகாரத்தில் சீன ஆக்கிரமிப்பை இந்தியா துணிச்சலாக எதிர்த்து நிற்ப்பது பெருமையானது; மற்ற நாடுகள் சீனாவை எதிர்கொள்வதில் அச்சம் தேவையில்லை என்பதை இதன் மூலமாக உணர்ந்து உள்ளதாக அமெரிக்க செனட்டர்  அதிரடியாக தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு சொந்தமான கிழக்கு லடாக் அருகே, இந்திய-சீன எல்லைப் பகுதியில் கல்வானின்  அத்துமீறி   சீனா அடியெடுத்து வைத்தது மட்டுமின்றி ஆக்கிரமிப்பு முயற்சியிலும் இறங்கியது.சீனாவின் அத்துமீறலை அகற்ற களமிறங்கியது இந்திய ராணுவம். சீன ராணுவமும் தன் படைகளை குவித்தது.இவ்வாறு இரு நாட்டு வீரர்களுக்கு இடையே  … Read more

#அறக்கட்டளை#க்கு சட்டவிரோத?? நன்கொடையா?? விசாரிக்க குழு?

புராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற விவகாரம் தொடர்பாக சட்ட விதிமீறல் நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரிக்க  அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவை மத்திய அரசு அமைத்து உள்ளது. அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக அமலாக்கத் துறையின் இயக்குனரே, இக்குழுவின் தலைவராகவும்  நியமிக்கப்பட்டு உள்ளார். இந்திய – சீன எல்லை பிரச்னையில், காங்கிரஸ் தலைவர்கள், மத்திய அரசை கடுமையாக விமர்சித்த வந்த வண்ணம் இருந்த நிலையில் சீன ராணுவம், நம் நிலப்பரப்புக்குள் ஊடுருவி விட்டது. ஆனால், அப்படி … Read more

உத்தரகண்ட் மந்திரி ராமாயண நகலை சீனாவின் ஜி ஜின்பிங்கிற்கு அனுப்பியுள்ளார்!

விரிவாக்க மனப்பான்மையை சுட்டி காட்டி உத்தரகாண்ட்டின் மந்திரி ராமாயண நகல் ஒன்றை சீனாவின் ஜி ஜின்பிங் அவர்களுக்கு அனுப்பியுள்ளார். உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவி வரும் நிலையில் சீனா தனது எல்லையை விரிவாக்குவற்காக சில முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், உத்தரகண்ட் மந்திரி அவர்கள் சீனாவுக்கு ராமாயண நகல் ஒன்றை அனுப்பி கொரானா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மக்கள் தங்கள் பணத்தை செலவழிக்கும் படி செய்யுங்கள். விரிவாக்கதிற்காக மக்கள் பணத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கூறி … Read more