அதிமுக வெற்றிபெற்றால் இன்னோவா கார், தங்க சங்கிலி பரிசு.! விஜயபாஸ்கர் அறிவிப்பு.!

ADMK Ex Minister C Vijayabaskar

Election2024 : அதிமுக வேட்பாளரை வெற்றிபெற செய்தால் கட்சி நிர்வாகிகளுக்கு பரிசு என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் கடந்த முறை போல அல்லாமல் இந்த முறை எப்படியாவது அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று அதிமுக தலைவர்கள் தீவிரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபக்கம் தீவிர பிரச்சாரம் செய்து வந்தாலும், மறுப்பக்கம், கட்சி நிர்வாகிகள் சோர்ந்து விட கூடாது என அதிரடி அறிவிப்புகளும் அதிமுக சார்பில் வெளியாகி உள்ளது. அதிமுக சார்பில் … Read more

விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு…!

அதிமுக ஆட்சியின்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பின்னர்,லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் தலா 17,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டு சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது … Read more

“தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.2500-ஐ மக்கள் என்றும் மறக்கக்கூடாது” – அமைச்சர் விஜயபாஸ்கர்!

பொங்கல் பரிசாக தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.2500-ஐ மக்கள் என்றும் மறக்கக்கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்றும், அதனுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, திராட்சை, வெல்லம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்திற்காக ரூ.5,604 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி … Read more

“தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை!”- அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் சமுகப்பரவலாக மாறவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக நாள் ஒன்றுக்கு 5,800 முதல் 6,000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக 4 ஆம் தளர்வுகளுடனான ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அந்தவகையில் இன்று கடலூரில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். … Read more

எஸ்.பி.பி உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன்.! – அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்.!

எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்தேன். அவர் விரைந்து குணமடைய விரும்புகிறேன். – அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட். திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொரோனா நோய் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சென்னை சூளைமேட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில், ‘எஸ்.பி.பியின் உடல்நிலை … Read more

வரதராஜனை அழைத்து சென்று காட்ட தயார்- அமைச்சர் விஜயபாஸ்கர்!

டிவி நடிகர் வரதராஜனை அழைத்து சென்று மருத்துவர், தூய்மை பணியாளர்களின் பணிகளை காட்ட தயார் என சுகாதாரத்துறை துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி. சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக டிவி நடிகர் மற்றும் பத்திரிகையாளரான வரதராஜன் குற்றம் சாற்றினார். இந்நிலையில், இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், டிவி நடிகர், பத்திரிகையாளரான வரதராஜன், அரசுக்கு எதிராக தவறான தகவலை … Read more

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்த அமைச்சர்!

தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன்,கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று அவரின் உடல்நிலை கவலைக்கிடம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அன்பழகனின் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுமக்கள் முதல் ஆளுநர் மாளிகை வரை சென்ற கொரோனா, தற்பொழுது எம்.எல்.ஏ-வயும் விட்டுவைக்கவில்லை. திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டு, குரோம்பேட்டையிலுள்ள … Read more

24,000 ரேபிட் கருவிகளையும் திருப்பி அனுப்பப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்.!

சீனாவிடம் தமிழக அரசு வாங்கியுள்ள 24,000 ரேபிட் கருவிகள் திருப்பி அனுப்பப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவை சேர்ந்த பையோ மெடிக்ஸ், வோன்ஃபோ ஆகிய நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய  ரேபிட் டெஸ்ட் கருவியின் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட முடிவுகள் தவறாக வருகிறது என்று புகார் எழுந்தது. இதையெடுத்து, சீனாவில் இருந்து அனுப்பிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என இன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மாநில அரசுகளுக்கு கூறியது. மேலும் … Read more

ஐ.டி நிறுவனங்களுக்கு ஊரடங்கை தளர்த்த வேண்டாம்.! பார்த்திபன் கோரிக்கை.!

அடித்தட்டு மக்களுக்கு உதவியாக இருக்கும் திட்டங்களை செயல்படுத்துங்கள். ஐடி போன்ற பெரு நிறுவனங்களுக்கு ஊரடங்கு விதியை தளர்த்த வேண்டாம் என பார்த்திபன் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. வரும் ஏப்ரல் 20ஆம் தேதி கட்டட தொழிலாளர்கள், பிளம்பிங், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக் வேலை செய்யபவர்கள் வேலைக்கு செல்லலாம் எனவும், குறிப்பிட்ட தொழிற்சாலைகள், கம்பெனிகள் பாதி ஆட்களை வைத்து இயக்கலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு நடிகர் பார்த்திபன் … Read more

#Breaking: தமிழகத்தில் இரண்டாவது நபரை தாக்கிய கொரோனா வைரஸ்.!

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். டெல்லியிலிருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்குமுன் தமிழகத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.  #Coronaupdate: #RGGH, Chennai … Read more