காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ! மொத்தம் 69.44% வாக்குகள் பதிவு

புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 69.44% வாக்குகள் பதிவாகியுள்ளது . புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த நிலையில் வாக்குப்பதிவு 6 மணியுடன் நிறைவுக்கு பெற்ற நிலையில் தேர்தல் அதிகாரி கூறுகையில், புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 69.44% வாக்குகள் பதிவாகியுள்ளது .காமராஜ் நகர் தொகுதியில் 35,009 வாக்காளர்களில் 24,310 … Read more

நாங்குநேரியில் விதிமுறைகளை மீறிய வசந்தகுமார் ! போலீசார் விசாரணை

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். நாங்குநேரி தொகுதியில் வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது.மக்கள் அனைவரும் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்றதாக கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். கலுங்கடி பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் வசந்தகுமார் சென்றுகொண்டிருந்த போது நாங்குநேரி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்

தல, தளபதி ரசிகர்களிடம் சீமான் கேட்ட கேள்வியால் தலைகுனிவு..!

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சீமான் அவர்கள் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய சீமான் அவர்கள் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை சீண்டும் வகையில் பேசியுள்ளார். ‘தற்போது இந்தி காரர்கள் தமிழக அரசு வேலையில் வேலை செய்யும் நிலைமை வந்துவிட்டது. ஆனால் … Read more

‘விபத்தில்’ முதல்வரான எடப்பாடி பழனிசாமி..! எடுபிடி ஆட்சி..! – திமுக தலைவர் பிரச்சார உரை.

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் வருகின்ற 21-ந் தேதி (திங்கட்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி வி.நாராயணன்(நாங்குநேரி) மற்றும் எம்.ஆர்.முத்தமிழ்செல்வனும்(விக்கிரவாண்டி), தி.மு.க சார்பில் நா.புகழேந்தி(விக்கிரவாண்டி) மற்றும் ரூபி மனோகரன்(நாங்குநேரி), சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றனர். வரும் 19ம் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவதால் அனைத்து கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பிரசாத்தில் பன்னீர்செல்வம், பழனிச்சாமி, ஸ்டாலின் மற்றும் சீமான் பங்கேற்று வருகின்றனர். … Read more

நாங்குநேரி, விக்கிரவாண்டி  தொகுதி ! துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் பிரசார பயண விவரம் வெளியீடு

நாங்குநேரி, விக்கிரவாண்டி  தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வத்தின் பிரசார பயண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.அதிமுக சார்பில் விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் , நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி  தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வத்தின் பிரசார பயண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி வரும் 13, 14, 17 தேதிகளில் விக்கிரவாண்டியிலும், 15, 16, 18 தேதிகளில் … Read more

புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி ! காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார் போட்டியிடுகிறார். புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதனையொட்டி  காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி சார்பில் விருப்பமனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார் போட்டியிடுகிறார் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பை  காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்  முகுல் வாஸ்னிக் அறிவித்துள்ளார்.மேலும் ரூபி’ மனோகரனை சோனியா காந்தி … Read more

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் ! அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி

அதிமுக கூட்டணியில் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலியாக உள்ள  இடைத்தேர்தல் தொகுதிக்கான தேதியை  அறிவித்தது தேர்தல் ஆணையம்.அதன்படி புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் அக்டோபர் 21- ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுகிறது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் -துணை  ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி , ரங்கசாமி முன்னிலையில் … Read more

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் ! இதுவரை 2 பேர் வேட்புமனு தாக்கல்

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு  தெரிவித்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.செப்டம்பர் 23-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு  இது குறித்து கூறுகையில்,விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்  .பேனர் விவகாரத்தில் … Read more

Election Breaking: திருவாரூர் ,திருப்போரூர் தொகுதியில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

22 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் திருவாரூர்,திருப்போரூர் தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். திருவாரூர் திமுக வேட்பாளர் கலைவாணன் அதிமுக வேட்பாளரை விட  63,122 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.திருப்போரூர் திமுக வேட்பாளர் இதய வர்மன் அதிமுக வேட்பாளரை விட 20,377வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி  பெற்றுள்ளனர். திருவாரூர் திமுக 1,15,223 அதிமுக 52,101 வித்தியாசம் 63,122   திருப்போரூர் திமுக 1,02,410 அதிமுக 2,033 வித்தியாசம் 0,377

Election Breaking: பெரம்பூர் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து பத்திரிகையாளர்கள் வெளியேற்றம்

தமிழகம் முழுவதும் மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. திமுக,அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் இடையில் நல்ல போட்டி நிலவுகிறது. இந்நிலையில் பெரம்பூர்  வாக்கு எண்ணும் மையத்திற்கு வடசென்னை மக்களவை வாக்கு இயந்திரமும் வடசென்னை மையத்திற்கு பெரம்பூர் வாக்கு இயந்திரமும் தவறாக வந்ததால் வாக்கு எண்ணும்  மையத்தில் உள்ள முகவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. அங்குள்ள கட்சி முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணும்  அலுவலர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. … Read more