குடும்பத்துடன் போக்குவரத்து தொழிலாளர்கள் வண்ணார் பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்…!!

நெல்லை :தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக தமிழக போக்குவரத்துத்துறை தங்களுக்கு கொடுக்கிற ஊதியத்தை உயர்திகொடுக்க வேண்டும், அதேபோல தங்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர் தமிழக போக்குவரத்து ஊழியர்கள். இந்நிலையில் குடும்பத்துடன் போக்குவரத்து தொழிலாளர்கள் வண்ணார் பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாநகராட்சி அருகே 23 தொழிற்சங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடனும் அதிமுக கொடியுடனும் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…!!

தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக தமிழக போக்குவரத்துத்துறை தங்களுக்கு கொடுக்கிற ஊதியத்தை உயர்திகொடுக்க வேண்டும், அதேபோல தங்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர் தமிழக போக்குவரத்து ஊழியர்கள். இந்நிலையில் இன்று தமிழக அரசை கண்டித்து திண்டுக்கல் மாநகராட்சி அருகே 23 தொழிற்சங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் அதிமுக கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம்: தற்காலிக ஓட்டுனரால் சென்னையில் விபத்து,ஒருவர் பலி…!!

சென்னை சாந்தோமில் அரசு பேருந்து மோதியதால் பட்டினப்பாக்கம் டுமில்குப்பம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து ஏற்படுத்தியதாக கண்ணகி நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற தற்காலிக ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்தமுறை நடந்த போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தின் போது கூட தற்காலிக ஓட்டுனர்களால் இம்மாதிரியான விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் நாளை வார நாட்களைப்போல் அனைத்து மின்சார, விரைவு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

சென்னையில் நாளை வார நாட்களைப்போல் அனைத்து மின்சார, விரைவு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு செய்துள்ளது.போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதால் ரயில்வே துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நாமக்கல்லில் அரசு பேருந்துகளை இயக்க 200க்கும் மேற்பட்ட தினக்கூலி ஓட்டுநர், நடத்துநர்கள் நியமனம்

நாமக்கல்லில் அரசு பேருந்துகளை இயக்க 200க்கும் மேற்பட்ட தினக்கூலி ஓட்டுநர், நடத்துநர்கள் நியமனமிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் நாமக்கல் பிரதான சாலை மற்றும் நகரங்களைத் தவிர கிராமப்புறங்களுக்கு அரசு பேருந்து சேவை இல்லை என மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 20 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் 434 அரசு பேருந்துகள் உள்ளது இதில் 84 பேருந்துகள் தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கொண்டு சுமார் 20 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

திருநெல்வேலி தென்காசி மற்றும் செங்கோட்டை இருந்து 108 பேருந்துக்களில் 43 பேருந்துகள் இயக்கம்…!!

தென்காசி அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து 69 பேருந்துக் களில் 30 பேருந்துகள் இயக்கப்படுகிறது.அதேபோல் செங்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து இயக்கப் படும் 38 பேருந்துக்களில் 13பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 38 பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 பணிமனைகளில் இருந்து 800க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சுமார் 100 பேருந்துகள் மட்டுமே இயக்கம்…!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட வேண்டிய 800க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சுமார் 100 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.போக்குவரத்து தொழிலாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் அவதியடைதுள்ளனர். அரசு தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்றுமா.???  

தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்; கோரிக்கையை நிறைவேற்றுமா தமிழக அரசு…??

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் 3வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலாளர்கள் சம்பளத்தை அரசு உயர்த்தும் என நம்பினர். ஆனால் அரசு தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.இதனால் போக்குவரத்து தொழிலாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் அவதியடைதுள்ளனர். அரசு தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்றுமா…???

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்…!! நடிகர் விஷால் ட்வீட்…??

மக்கள் நலன் மீது அக்கறை கொண்டு தமிழக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று வேலை நிறுத்தத்தை கைவிட செய்ய வேண்டும். என நடிகர் சங்க பொதுச்செயலாளரும் ,தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மக்கள் நலன் மீது அக்கறை கொண்டு தமிழக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று வேலை நிறுத்தத்தை கைவிட செய்ய வேண்டும். – விஷால் pic.twitter.com/I2CmsgKa9c … Read more