மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விழுந்த பேருந்து – 7 பேர் பலி, 28 பேர் காயம்!

பாகிஸ்தானில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து கீழே விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் கராச்சி பகுதியில் இருந்து சாக்வால் மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தின் டயர் திடீரென வெடித்துள்ளது. இதனால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தின் போது பேருந்தில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விபத்தில் 7 … Read more

டம்பர் மீது மோதிய பேருந்து : 7 பேர் உயிரிழப்பு; 13 பேர் படுகாயம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் டம்பர் மீது பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 13 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள பிந்த் எனும் மாவட்டத்தில் இன்று காலை பேருந்து ஒன்று டம்பர் லாரி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பேருந்திற்குள் இருந்த பயணிகள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்து நடந்த பகுதியில் காவலர்கள் போலீசார் விசாரணை மேற்கொண்டு … Read more

கிராமப்புற பகுதியில் அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் இயக்கப்படும் – அமைச்சர் ராஜகண்ணப்பன்!

கிராமப்புற பகுதியில் அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றியத்தில் திமுக சார்பில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அப்பகுதியில் தேர்தல் பரப்புரையை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கியுள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியின் பொழுது சுமார் 35 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் முதல்வர் … Read more

பேருந்து கண்ணாடியை உடைத்த காட்டுயானை..!பயணிகளின் திக் திக் நிமிடங்கள்..!வீடியோ

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த காட்டு யானையின் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் அரசு பேருந்து ஒன்று கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது மேல்தட்டப்பள்ளம் என்ற இடத்தில் காட்டு யானை ஒன்று அரசு பேருந்தை வழிமறித்துள்ளது. இதனால் செய்வதறியாது, ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி இயக்கியுள்ளார். இதன் பின்னர் பேருந்தை நோக்கி காட்டு யானையும் வேகமாக துரத்தி வந்துள்ளது. துரத்தி வந்த காட்டு யானை பேருந்தின் முன்பக்க கண்ணாடியை … Read more

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து – 32 பேர் உயிரிழப்பு…!

பெரு நாட்டில் உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில், 32 பேர் உயிரிழந்துள்ளனர். தென்னமெரிக்க நாடான பெரு நாட்டின் தலைநகராகிய லிமா மற்றும் சென்ட்ரல் அண்டஸ் நகரை இணைக்கும் சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. இந்த பஸ்சில் 63 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது கார்ரிடிரா சென்ட்ரல் சாலையில் உள்ள மலைப்பாங்கான ஒரு பகுதியில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 650 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த … Read more

ஓடிய பேருந்தில் இருந்து உருண்டோடிய சக்கரம்…! நூலிழையில் உயிர்பிழைத்த பயணிகள்..!

சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தில் சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்த போது, சக்கரம் கழன்று ஓடியுள்ளது.  சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தில் சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது பேருந்தின் முன்பக்க சக்கரம் திடீரென, கழன்று தனியாக உருண்டோடியுள்ளது. இதனையடுத்து, சக்கரம் கழன்று ஓடியதை அறிந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனால், நல்வாய்ப்பாக எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை. பயணிகளும் உயிர்தப்பினர். ஆனால், உருண்டோடிய சக்கரத்தால், சாலையோரம் நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

உத்தரப்பிரதேச மாநில பேருந்து விபத்தில் 1 வயது குழந்தை உட்பட 3 பேர் பலி..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 1 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரிலிருந்து நேற்று இரவு 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று ஆக்ரா நோக்கி சென்றுள்ளது. அப்போது தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்துள்ளது. அந்த பேருந்து எதிர்பாராத விதமாக லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த பேருந்து விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ஓம்வீர் சிங் தெரிவித்துள்ளதாவது, சாலை ஓரத்தில் … Read more

உத்தரகண்ட் நிலச்சரிவிலிருந்து தப்பிய பேருந்து..!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவிலிருந்து பேருந்து ஒன்று அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளது. நேற்று உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள வடகிழக்கு பகுதியான நைனிடாலிலிருந்து பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. அப்போது 14 பயணிகளுடன் சென்ற அந்த பேருந்து மலைப்பாங்கான பகுதி வழியாக சென்றுள்ளது. சற்றும் எதிர்பாராத விதமாக அங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் பாறைகள் உருண்டோடியது. இந்த சம்பவத்தை தொலைவிலேயே கண்ட ஓட்டுநர் பேருந்தை நிலச்சரிவிற்கு தொலைவில் நிறுத்தியுள்ளார். இருந்தபோதிலும் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவை பார்த்து பயந்த பயணிகள் அனைவரும் … Read more

பேருந்து கட்டணம் உயர்வு..? – அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்..!

பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.  சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் இருந்து செங்கல்பட்டுக்கு மீண்டும் அரசு பஸ் சேவை தொடங்கியுள்ளது. இந்த பேருந்து சேவையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை; போக்குவரத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை புதுப்பொலிவு பெறும். பழைய பேருந்துகள் அகற்றப்பட்டு 2,500 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். … Read more

நவம்பர் மாதத்திற்குள் 2,200 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் – மாநகர போக்குவரத்து கழகம்

நவம்பர் மாதத்திற்குள் 2,200 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வரும் நவம்பர் மாதத்திற்குள் 2,200 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்த சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறுகையில்,  கொரோனா பாதிப்பிற்கு பிறகு பயணிகளின் தேவைக்கு ஏற்றாற்போல் மாநகர பேருந்து இயக்கப்பட்டு வருவதாகவும், இருப்பினும் கொரோனா பரவலுக்கு முன்பு … Read more