முழுமையான பிங்க் நிறமாக மாறும் பெண்களுக்கான அரசு பேருந்துகள்…!

பெண்கள் இலவசமாக பயணிக்கும் பேருந்துகள் முழுவதுமாக பிங்க் நிறத்திற்கு மாற்றம்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் பெண்கள் கட்டணம் இல்லாமல் இலவசமாக பேருந்தில் பயணிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்து பெண்கள் இலவசமாக பயணித்து வந்த நிலையில், தமிழகத்தில் கட்டணப் பேருந்தா அல்லது இலவச பேருந்தா என்பதை அறிந்து கொள்ளும் வகையில் மகளிர் இலவசமாக பயணிக்கும் பேருந்துகளை பிங்க் நிறத்தில் வண்ணம் பூசி முதல் கட்டமாக 60 பேருந்துகள் நடைமுறைக்கு வந்தது. இந்த பேருந்துகளின் முன்பக்கம் … Read more

நாளை முதல் ஆட்டோ, பஸ் டாக்சி கட்டணம் உயர்வு – எங்கு தெரியுமா?

கேரளாவில் நாளை முதல் பேருந்து, ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து, பேருந்து, ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இதற்கான கட்டணம் உயர்த்தப்படும் என்று சமீபத்தில் கேரள அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பேருந்து, ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேரள மாநில போக்குவரத்து துறை நடத்திய … Read more

பேருந்துகளில் விரைவில் அறிமுகமாகும் ஒலிபெருக்கி – அமைச்சர் சிவசங்கர்

பேருந்துகளில் ஒலிபெருக்கி அமைக்க திட்டமிட்டு வருவதாக அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு. தமிழகத்தில் பேருந்துகளில் அடுத்து வரும் நிறுத்தம் குறித்த அறிவிப்பை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் முதற்கட்டமாக 500 மாநகர பேருந்துகளில் ஒலிபெருக்கி அமைக்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு பேருந்துகளில் கேமரா பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்து வரும் பஸ் ஸ்டாப்புகள் குறித்து அறிவிக்க … Read more

நிர்பயா திட்டம் – 2100 பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தீவிரம்!

நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் 2100 பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்தாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக முன்னதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர் தெரிவித்திருந்தார். தற்பொழுதும் செய்தியாளர்களிடம் பேசிய அவர். நிர்பயா திட்டத்தின் கீழ் 2100 பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்தின் படி ஒரு பேருந்தில் … Read more

மீண்டும் அதிர்ச்சி …. பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட குறவர் குடும்பம் …!

நாகர் கோவிலில் குறவர் குடும்பத்தினரின் உடமைகளை வெளியில் போட்டு, பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் எனும் மீன் விற்கும் தாயாரை கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக பேருந்தில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் பெருமளவில் பேசப்பட்டது. தாயார் தனது மனக்குமுறலை பேருந்து நிலையத்தில் கதறலாக கூறிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகிய நிலையில் முதல்வர் உள்ளிட்ட பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். மேலும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட பேருந்து … Read more

குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்; அவர்களை தண்டிக்க வேண்டாம் – செல்வமேரி அம்மா!

பேருந்திலிருந்து என்னை இறக்கி விட்டவர்களை தண்டிக்க வேண்டாம், குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என பாதிக்கப்பட்ட செல்வமேரி அம்மா கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளைச்சலில் மீன் விற்பனை செய்து வரக்கூடிய செல்வம் எனும் மூதாட்டி மீன் விற்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக வானியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்பொழுது மூதாட்டியின் உடலில் துர்நாற்றம் வீசுவதாக கூறி பேருந்து நடத்துனர் அவரை கீழே இறங்கி விட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டி அந்த பேருந்து நிலையத்தில் நின்று அழுது கூச்சலிட்டுள்ளார். … Read more

மீன் விற்பனை செய்யும் பெண்ணை பேருந்திலிருந்து இறக்கி விட்டதற்கு முதல்வர் கண்டனம்…!

மீன் விற்பனை செய்யும் பெண்ணை பேருந்திலிருந்து இறக்கி விட்டதற்கு முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளைச்சலில் மீன் விற்பனை செய்து வரக்கூடிய செல்வம் எனும் மூதாட்டி மீன் விற்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக வானியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்பொழுது மூதாட்டியின் உடலில் துர்நாற்றம் வீசுவதாக கூறி பேருந்து நடத்துனர் அவரை கீழே இறங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மூதாட்டி அந்த பேருந்து நிலையத்தில் நின்று அழுது கூச்சலிட்டுள்ளார். தான் நடந்து சென்று … Read more

பயணிகள் கவனத்திற்கு..! இனிமேல் பேருந்துகளில் இப்படி செய்தால், பேருந்தில் இருந்து இறக்கி விடப்படுவீர்கள் – உயர்நீதிமன்றம் அதிரடி

பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அறிவுறுத்தலை மீறி, பேருந்துகளில் தங்களது  மொபைலில் பாட்டு கேட்பவர்களை தாராளமாக கீழே இறக்கி விடலாம்.  கர்நாடகா : பொதுவாகவே பயணிகள் பேருந்தில் பயணிக்கும் போது பேருந்துகளில் பாடலை இயக்குவது வழக்கம். ஆனால் சில சமயங்களில் பேருந்துகளில் பாடல்கள் இயக்கப்படாத போது, சிலர் பொழுதுபோக்கிற்காக தங்களது மொபைலில் பாடல்களை போட்டு கேட்டுக்கொண்டு வருவதுண்டு. ஆனால், இந்த செயல் அருகில் இருப்பவர்களை எரிச்சலடைய செய்கிறது. அவ்வாறு தொந்தரவுக்கு உள்ளான நபர் ஒருவர்,  கர்நாடக மாநில … Read more

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டயர் பற்றாக்குறை இல்லை..!

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டயர் பற்றாக்குறை இல்லை என போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். டயர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாக செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கூறுகையில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டயர் பற்றாக்குறை இல்லை. டயர்கள் மற்றும் ரீட்ரெடிங் பொருள்கள் போதுமான அளவில் இருப்பதால் பேருந்துகளை சீராக இயக்க முடியும். தீபாவளி பண்டிகையின் போது அனைத்து தடப்பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகளை சீராக இயக்க முடியும்.   … Read more

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு கூடுதல் பேருந்து – அமைச்சர் ராஜகண்ணபன்..!

3 பேருந்து நிலையங்களில் இருந்து வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 12, 13 தேதிகளில் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்துத்துறை கூடுதல் பேருந்துகளை இயக்க உள்ளது. அதன்படி, வெளியூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 3 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணபன் அறிவித்துள்ளார். தாம்பரம் ரயில் … Read more