தமிழகத்தில் புயல் மழையால் 7 பேர் உயிரிழப்பு.!

நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் புரேவி புயல் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 1,064 வீடுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், புயலாக வலுப்பெற்று, இலங்கை திரிகோணமலை பகுதியில் கரையை கடந்து தற்போது மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளது .இந்த புரேவி புயல் வலுவிழந்த பின்னரும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது .இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் வடகிழக்கு பருவமழையும் தீவிரமடைந்துள்ளதை அடுத்து மயிலாடுதுறை, புதுக்கோட்டை, … Read more

அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் – வானிலை மையம் எச்சரிக்கை !

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புரேவி புயலானது, இலங்கையில் கரையை கடந்த நிலையில், மன்னார் வளைகுடாவில் நுழைந்து, தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்தது.ராமநாதபுரத்திற்கு அருகில் நிலைகொண்டுள்ள இந்த புயலானது, வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து  தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. ராமநாதபுரம் வழியே கடந்து மேற்கு தென்மேற்காக நகர்ந்து தெற்கு கேரளாவை அடையும் என … Read more

#BREAKING: 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாறும்- வானிலை மையம்.!

மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தொடர்ந்து அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது. இன்று மாலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே பகுதியில் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், மன்னார் வளைகுடா, தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் அடுத்துவரும் 24 மணி நேரத்தில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இதனால், மீனவர்கள் நாளை … Read more

இயற்கை புயலோ? செயற்கை புயலோ? புயல் தூள் தூளாகிவிடும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். புரவி புயல் எதிரொலியையடுத்து, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ‘நீர் மேலாண்மை திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும், நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தி,  விருதுகள் பெற்றுள்ளோம் … Read more

புரேவி புயல் எதிரொலி! திருவனந்தபுர விமான நிலையம் மூடல்! 5 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை!

கேரளாவில், புரேவி புயல் எதிரொலியால், திருவனந்தபுர விமான நிலையம் மூடபட்டுள்ளது. 5 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு.  வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புரேவி புயலானது, இலங்கையில் கரையை கடந்த நிலையில், மன்னார் வளைகுடாவில் நுழைந்து, தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்தது. இந்த புயலானது, வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. பாம்பன் பகுதியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் புயலை எதிர்கொள்ள கேரள அரசு முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையம் … Read more

“12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கும்”- வானிலை ஆய்வு மையம்

ராமநாதபுரத்திற்கு அருகில் 10 மணி நேரமாக நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்னும் 12 மணிநேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், புயலாக வலுப்பெற்று, இலங்கை திரிகோணமலை பகுதியில் நேற்று இரவு கரையை கடந்தது. இதனையடுத்து நேற்று நள்ளிரவு அல்லது இன்று அதிகாலை பாம்பன் – குமரி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன்காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை … Read more

3 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்ட தாழ்வு மண்டலம் ! அதிக மழை பெய்ய வாய்ப்பு

3 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்ட தாழ்வு மண்டலம் உள்ள நிலையில், அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ராமநாதபுரம் அருகே ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகராமல் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வலுவிழந்த புரெவி புயலானது , ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, ராமநாதபுரத்திற்கு தென்மேற்கில் 40 கி.மீ. தூரத்திலும் பாம்பனுக்கு மேற்கு … Read more

வலுவிழந்த புரேவி புயல்! விடிவிடிய வெளுத்து வாங்கும் கனமழை!

புரேவி புயலானது, வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால், தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புரேவி புயலானது, இலங்கையில் கரையை கடந்த நிலையில், மன்னார் வளைகுடாவில் நுழைந்து, தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்தது. இந்த புயலானது, வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்நிலையில்,  ராமநாதபுரம்- தூத்துக்குடி இடையே கரையை கடக்க உள்ளதால், மணிக்கு 50கி.மீ முதல் 60கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் … Read more

#BREAKING: வலுவிழந்தது புரெவி புயல் – ஆர்.பி.உதயகுமார்.!

புரெவி புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நீண்ட நேரமாக நகர்வின்றி பாம்பன் பகுதியில் நிலவுகிறது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைப்பொழிவுக்கு மட்டுமே வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

#BREAKING: 4 மாவட்டங்களில் கனமழை.. 9 மாவட்டங்களில் மிதமான மழை..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தற்போது வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள புரேவி புயல் நாளை அதிகாலை பாம்பன் -கன்னியாகுமரியை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அரியலூர் நாகை தஞ்சாவூர் திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர், சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய … Read more