பிரேசிலில் கோவாக்ஸின் தடுப்பூசி இறக்குமதிக்கு அனுமதி..!

பிரேசிலில் இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. பிரேசிலில் கொரோனா தொற்று மிகவும் மோசமாக பாதித்து வருவதால் அங்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவாக்ஸின் தடுப்பூசியை இறக்குமதி செய்ய பிரேசில் அரசு அனுமதி அளித்துள்ளது. இதை சில நிபந்தனைகளோடு அறிவித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. தற்போது முதல்கட்டமாக 40 லட்சம் கோவாக்ஸின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யவிருப்பதாக பிரேசில் அரசு … Read more

பிரேசில் நாட்டு கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து – 4 பேர் பலி!

பிரேசில் நாட்டில் கொரோனா சிகிச்சை அளிக்கக் கூடிய நெஸ்டர் பைவா எனும் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதுவரை கிட்டத்தட்ட 17 கோடிபேர் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உலகின் பல நாடுகளிலும் தற்போது கொரோனா பாதிப்புகளும் உயிரிழப்பும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையிலும் பிரேசிலில் இதுவரை 1.63 கோடி பேருக்கும் … Read more

தடுப்பூசி இல்லாததால் ராஜினாமா செய்த அமைச்சர்…!

பிரேசில் வெளியுறவு துறை அமைச்சர் எர்னஸ்டோ அராஜூவா தனது பதவியை ராஜினாமா செய்தார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள்  மேற்கொண்டு வருகிற நிலையில், பல நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பிரேசிலை பொறுத்தவரையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 3,000 எட்டியுள்ளது. இதற்கிடையில், அங்கு போதுமான … Read more

ஒரே நேரத்தில் மாற்றுப் பாலின அறுவை சிகிச்சை செய்த உலகின் முதல் இரட்டையர்கள்!

பிரேசிலில் உள்ள இரட்டையர்கள் இருவர் ஒரே நேரத்தில் ஆண்களாக இருந்து பெண்களாக மாற்று பாலின அறுவை சிகிச்சை மூலமாக மாறியுள்ளனர். 2002 ஆம் ஆண்டு தென் அமெரிக்காவை சேர்ந்த பிரேசிலில் உள்ள டபிரா எனும் கிராமத்தில் பிறந்த சோபியா அல்புர்க், மைலா ரெசன்டே எனும் இரட்டையர்கள் பிறப்பிலேயே ஆண்களாக தான் இருந்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்குள் நாளுக்கு நாள் பெண்களின் தன்மை அதிகரித்து வந்ததையடுத்து பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். இதனையடுத்து அவர்கள் குடும்பத்தினர் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவு … Read more

பிரேசிலில் ஸ்புட்னிக் உட்பட 3 கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல்!

பிரேசிலில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் உட்பட 3 மருந்துகளுக்கு அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. அதன்படி தற்பொழுது … Read more

உடலுறவின் போது மனைவியின் தொண்டையை வெட்டி கொலை செய்த கணவர்

கடந்த ஆண்டு நடந்த ஃபிரான்சின் ரிகோ டோஸ் சாண்டோஸ் கொலை வழக்கில் சிலிர்க்கும் விவரங்கள் வெளிவந்துள்ளன. பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஃபிரான்சின் ரிகோ டோஸ் சாண்டோஸ்  என்பவர் ஒரு ஒப்பனை கலைஞர் ஆவார்.இவர் கர்ப்பத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தபோது ,அவரது கணவர் மார்செலோ அகஸ்டோ டி சௌசா அராஜோ (Marcelo Augusto de Sousa Araujo) அவரின் தொண்டையை வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது.மேலும் அவரது கணவர் ஒரு தற்கொலை கடிதத்தை உருவாக்க முன்வந்ததாகவும் , இது … Read more

“நான் கொரோனா தடுப்பூசியை போடமாட்டேன்” – அதிபரின் சர்ச்சையான பேச்சு!

நான் கொரோனா தடுப்பூசியை போடமாட்டேன் எனவும், அது எனது உரிமை என பிரேசில் நாட்டு அதிபர் போல்சோனாரோ தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் உலகளவில் பல நாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியா, அமெரிக்கா உட்பட நாடுகள் தீவிரமடைந்துள்ளது. தடுப்பூசி முழுமையாக கண்டுபிடிக்கப்பட்ட பின், அதனை மக்களுக்கு செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பில் உலகளவில் இரண்டாம் இடத்தில் … Read more

“நிச்சயமாக..சீனாவின் தடுப்பூசியை வாங்க மாட்டோம்” – பிரேசில் அதிபர்!

சீனா கண்டுபிடிக்கும் கொரோனா தடுப்பூசியை நாங்கள் வாங்கமாட்டோம் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ தெரிவித்துள்ளார். சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமடைந்துள்ளது. அதற்கான இறுதி கட்ட சோதனைக்கு விரைந்துள்ளனர். மேலும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது. இன்னும் சில மாதங்களில் இந்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என உலக நாடுகள் எதிர்பார்த்து உள்ளன. … Read more

பிரேசிலில் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்ட தன்னார்வலர் உயிரிழப்பு!

பிரேசிலில் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்ட தன்னார்வலர் உயிரிழப்பு. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், ஒவ்வொரு நாட்டு அரசும் இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸை தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், இந்த வைரஸை தடுக்க அதிகார பூர்வமாக எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், … Read more

பிரேசிலில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,50,000 தாண்டியது.!

பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது. மேலும், இன்று 290 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 150,488 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12,345 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரேசிலின் கொரோனா உயிரிழப்பு கடந்த சனிக்கிழமை 1,50,000 ஐத் தாண்டியது. இது, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிக அதிகமான இறப்பு எண்ணிக்கையைக் கொண்ட நாடாக பிரேசில் உள்ளது. பிரேசிலின் அதிக … Read more