காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஒலிம்பிக் வீரர்!

Vijender Singh

Vijender Singh: பிரபல குத்துசண்டை வீரர் விஜயேந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், முதல் கட்டமாக வரும் 19ம் தேதி தொடங்குகிறது. மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங் … Read more

துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட குத்துச்சண்டை வீரர் அமீர் கானின் வாட்ச் – பதைபதைக்கு வீடியோ காட்சி உள்ளே…!

லண்டனில் முன்னாள் உலக குத்துச்சண்டை வீரராகிய அமீர்கானுக்கு துப்பாக்கியை காண்பித்து அவரிடமிருந்து விலைமதிப்புள்ள வாட்ச் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. 35 வயதுடைய அமீர்கான் தனது மனைவியுடன் வெளியில் சென்றுள்ளார். அப்போது திடீரென காரிலிருந்து 2 மர்ம நபர்கள் வெளியே வந்து அமீர்கானை துப்பாக்கி முனையில் மிரட்டி அவரது கையிலிருந்த 72 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாட்சை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது மனைவியுடன் சாலையை … Read more

ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் மறைவு..! பிரதமர் இரங்கல்..!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வென்ற முன்னாள் குத்துசண்டை வீரர் டிங்கோ சிங்(42) கல்லீரல் புற்றுநோயால் உயிரிழந்தார்.  டிங்கோ சிங் மணிப்பூரை சேர்ந்தவர். இவர் இந்தியாவிற்காக 1998 இல் நடைபெற்ற ஆசிய குத்துசண்டை போட்டியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்று பெருமை சேர்த்தார். இதனால் இந்திய அரசு இவரை கௌரவிக்கும் பொருட்டு அந்த வருடமே அர்ஜுனா விருது வழங்கியது. மேலும் கப்பல் படையில் வேலை வழங்கியது. குத்துசண்டை மீது உள்ள ஈர்ப்பால் இவர் குத்துசண்டை … Read more

பாக்ஸர் படத்தின் மூலம் நடிகராக களமிறங்கும் பிரபல தயாரிப்பாளர்.!

அருண் விஜய் நடிக்கவுள்ள பாக்ஸர் படத்தினை தயாரிக்கும் மதியழகன் இந்த படத்தின் மூலம் நடிகராக களமிறங்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அருண் விஜய் நடிப்பில் அறிமுக இயக்குனரான விவேக் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘பாக்ஸர்’. இந்த படத்தை எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் பேனரின் கீழ் மதியழகன் தயாரிக்கிறார். டி. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்திகாசிங் நடிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த … Read more

அருண்விஜய்யின் ‘பாக்ஸர்’ படத்தின் வில்லன் யார் தெரியுமா.! கசிந்த கதை.!

அருண் விஜய் நடிக்க உள்ள பாக்ஸர் என்னும் திரைப்படத்தின் வில்லனாக தயாரிப்பாளரான மதியழகன் நடிப்பதாக கூறப்படுகிறது. அருண் விஜய், கடைசியாக கார்த்திக் நரேனின் மாபியா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்க இருப்பதோடு வா டீல் என்ற படமும், அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். இதற்கு முன்பெல்லாம் பாக்ஸர் என்னும் திரைப்படத்தில் கமிட்டாகி அதன் பூஜையும் நடைப்பெற்றது. ஆனால் இதன் படப்பிடிப்பு … Read more

அருண் விஜய்யின் ‘பாக்ஸர்’ படத்தினை குறித்த முக்கிய அறிவிப்பு இன்று.! சர்ச்சையை ஏற்படுத்திய அருண்விஜய் பதிவு.!

அருண் விஜய் நடிக்க உள்ள பாக்ஸர் என்னும் திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5மணிக்கு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அறிவிப்பில் படக்குழுவினர் மீது கோவமாகவே உள்ளார் என்று தெரிகிறது. அருண் விஜய், கடைசியாக கார்த்திக் நரேனின் மாபியா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்க இருப்பதோடு வா டீல் என்ற படமும், அக்னி சிறகுகள், சினம், … Read more

நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடித்து வருகிறார். இப்படத்திற்கு சல்பேட்டா என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குத்துசண்டை விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் ஆர்யா பாக்ஸராக நடிக்கிறார்.  இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக, இளம் நடிகையான துஷாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவின் 27 ஆண்டுகால மல்யுத்த ஏக்கத்தை தீர்த்த சுனில்குமார்.!

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சுனில்குமார் சாம்பியன்ஷிப் பட்டத்தை  வென்று  இந்தியாவின் 27 ஆண்டுகால மல்யுத்த கனவை நிறைவேற்றியுள்ளார்  சுனில் குமார். இந்நிலையில் இதற்கு முன்னதாக அரையிறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீரர் அஜாமத் குஸ்துபயேவை சந்தித்த இந்திய வீரர் சுனில் குமார் 12-8 என்ற புள்ளி கணக்கில் போராடி வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தார். டெல்லியிலுள்ள கே.டி. ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் இந்த இறுதி போட்டியானது நடைபெற்றது. இதில் கிர்கிஸ்தான் வீரர் அசாத் … Read more

அருண் விஜயின் புதிய படத்தில் ஹீரோயினாக களமிறங்கும் பிரபல பாலிவுட் நடிகையின் தங்கை!

நடிகர் அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக பல படங்கள் வெளியாக உள்ளன. அதில் முக்கியமாக, பாக்ஸர், மாஃபியா, சினம், அக்னி சிறகுகள் போன்ற படங்களும் ,அடுத்து தடம் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு படம், குற்றம் 23 பட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஒரு படம் என மிகவும் பிசியான நடிகராக அருண் விஜய் மாறிவிட்டார். இதில் அக்னி சிறகுகள் படத்தை மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்கி வருகிறார். இதில் இன்னொரு நடிகராக விஜய் ஆண்டனி … Read more

குத்துசண்டை சாம்பியன்ஷிப்: இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம்..!

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்போட்டி  ரஷியாவில் நடைபெற்று வருகிறத.இதில் 48 கிலோ எடைப்பிரிவில்  நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி, தாய்லாந்து வீராங்கனை சுதாமத் உடன் மோதினார். இதில் மஞ்சு ராணி 4 – 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் மஞ்சு ராணி, ரஷ்யா வீராங்கனை  எகடெரினா உடன் மோதினார். இதில் மஞ்சு ராணி  4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.