காலம் ஒரு துரோகி, படுபாவி, பிசினாரி! ‘தரமணி’ வசந்த் ரவியின் மிரட்டலான நடிப்பில் ரத்தம் தெறிக்க வெளியான ராக்கி ட்ரெய்லர்!

ராம் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற தரமணி படத்தில் அறிமுகமாகி முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் வசந்த் ரவி. இவர் அடுத்ததாக தற்போது ராக்கி எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. டிவிட்டரில் ராக்கி டிரைலர் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதில் … Read more

என்ன ஒரு பாசப்பிணைப்பு! பாரதிராஜாவிடம் இருந்து பொன்னாடையை பறித்த சிவகுமார்!

சென்னையில் கதாசிரியர் கலைஞானத்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த்,  இயக்குனர் பாரதிராஜா, சிவகுமார், பாக்யராஜ் மற்றும் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், அந்த விழாவில் இயக்குனர் பாரதிராஜா, சிவகுமாருக்கு பொன்னாடை போர்த்த சென்றார். அப்போது பாரதிராஜாவிடம் இருந்து அந்த பொன்னாடையை பறித்து, அதனை பாரதிராஜாவுக்கே போர்த்தியுள்ளார். இந்த நிகழ்வில் நடைபெற்ற, இவர்கள் இவர்கள் இருவருக்கும் இடையேயான பாசப்பிணைப்பு, அங்கு வந்த பிரபலங்கள் மற்றும் பார்வையாளர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

நான் ஹீரோ ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 2.0 திரைப்படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. தற்போது இவர், தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் திரைப்பட கதாசிரியர் கலைஞானத்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இவ்விழாவில் பேசிய அவர், திரைத்துறையில், கதாசிரியர்களுக்கு போதிய ஊதியமோ, அங்கீகாரமோ கொடுப்பதில்லை என்றும், வாடகை வீட்டில் வசித்து வரும் … Read more

மீண்டும் கபடியை கையில் எடுத்து மிரட்டும் சுசீந்திரன்! கென்னடி கிளப் ட்ரெய்லர் இதோ!

தமிழ் திரையுலகில் நல்ல இயக்குனராக வளர்ந்து இருப்பவர் இயக்குனர் சுசீந்திரன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் கென்னடி கிளப். இந்த படத்தில் சசிகுமார், பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு இமான் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ட்ரைலர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. இதில், சசிகுமார் முன்னாள் கபடி வீரராகவும், பாரதிராஜா கபடி கோச்சாகவும், நடித்துள்ளனர். பெண்கள் கபடியை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை கவரும் படி உள்ளது. … Read more

இன்று இயக்குனர் பாரதிராஜா பிறந்தநாள்!

இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தேனி மாவட்டத்தில், 1941-ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னசாமி. இவரது நண்பர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மூலம் திரையுலகில் இவர் அறிமுகமானார். இவர் பிரபல கன்னட இயக்குனரான பி.புல்லையாவிடம் உதவியாளராக பணிபுரிந்து, சினிமா நுணுக்கங்களை கற்றுக் கொண்டார். இவரது இயக்கத்தில் முதன்முதலாக வெளியான திரைப்படம் ’16 வயதினிலே’. இந்த படம் 1977-ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல … Read more

இயக்குனர்கள் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் பாரதிராஜா!

சமீபத்தில், இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக முத்த இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.  இந்நிலையில்,இயக்குனர்கள் சங்க தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ” கடந்த மாதம் நடைபெற்ற நமது சங்க பொதுக்குழுவில், நமது சங்க நிர்வாகிகள் இயக்குனர்கள், இதணை, துணை உதவி இயக்குனர்கள், பேராதரவுடன் போட்டியின்றி என்னை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு மிகவும் நன்றி. ஆனால், தேர்தலில் போட்டியிடாமல் ஒரு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு … Read more

நடிகர் விஷால் ஒரு புல்லுருவி! அதை பிடுங்கி எறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது : இயக்குனர் பாரதிராஜா

இயக்குனர் சங்க தலைவர் பாரதிராஜா அவர்கள், சென்னையில் நலிந்த தயாரிப்பாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா தயாரிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் பாரதிராஜா அவர்கள் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், தென்னிந்திய நடிகர் சங்கம் என்பது, தமிழ் திரைப்பட நடிகர் சங்கமாக மாறவேண்டும் என்றால், அதற்கும் பாக்யராஜ் தலைமையிலான அணி வெற்றி பெறவேண்டும் என்றும், நடிகர்  சங்கத்திலும், தயாரிப்பாளர்  சங்கத்திலும் நடிகர் விஷால் ஒரு புல்லுருவியாக செயல்படுகிறார். அதை பிடுங்கி … Read more

கென்னடி க்ளப் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய இயக்குனர் சுசீந்திரன்

வெண்ணிலா கபடிகுழு படம் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல இயக்குனராக அறிமுகமானவர்இயக்குனர்சுசீந்திரன்.அடுத்ததாகஅழகர்சாமியின்குதிரை,நான் மகான் அல்ல பாண்டியநாடு, என வரிசையாக நல்ல கதைகளம் உள்ள படங்களை இயக்கினார். இவர் தற்போது சாம்பியன், ஏஞ்சலினா, கென்னடி க்ளப் என வரிசையாக படங்களை இயக்கி வருகிறார். இதில் கென்னடி க்ளப் திரைபடம் பெண்கள் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சசிகுமார், பாரதிராஜா ஆகியோருடன் கபடி விளையாட்டு வீராங்கனைகளும் நடித்துள்ளனர். இந்நிலையில் இவருக்கு இன்று பிறந்தநாள் ஆதலால் இந்த … Read more

கபடி வீராங்கனைகளுக்கு விருந்தளித்த பாரதிராஜா !!!

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் “கென்னடிகிளப்” உருவாகி வருகிறது. இந்த படத்தில் சசிகுமார் ,பாரதிராஜா முதலியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். சமீபத்தில் இந்த படத்தில் நடிகர் பாரதிராஜாவின் பகுதி முடிவடைந்த நிலையில், நேற்றுமுன்தினம் அவரது இல்லத்தில் படத்தில் நடித்த நிஜ வீராங்கனைகள், இயக்குநர், உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவில் பணியாற்றியவர்களுக்கு மதிய விருந்தளித்து உபசரித்துள்ளார். இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் “கென்னடிகிளப்” உருவாகி வருகிறது. இந்த படத்தில் சசிகுமார் ,பாரதிராஜா முதலியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.இந்நிலையில் இந்த படம் பெண்கள் … Read more

துவங்கபடாத படத்திற்கு இவ்வளவு எதிர்ப்பா?!! : அப்படி என்ன படம் அது?!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறு படமாகபோகிறது எனவும், அதனை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயகுக்க போகிறார் எனவும், அதற்க்கு கதாநாயகி தேர்வு நடைபெறுவதாகவும் சில செய்திகள் கிளம்பின. இந்நிலையில் இயக்குனர் மிஸ்கினின் உதவியாளர் பிரியதர்ஷினியும் இப்படத்தை இயக்குவார் என கூறப்பட்டது. இதற்கிடையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா பெயரும் இயக்குனர் லிஸ்டில் இடம்பெற்றது. அதில் நடிக்க திரிஷா, ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா என முன்னணி  நடிகைகள் நடிக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை … Read more