இதுதான் அரசின் ‘கடைசி’ பட்ஜெட் கூட்டத்தொடர் – முக ஸ்டாலின்

இதுதான் அரசின் ‘கடைசி’ பட்ஜெட் கூட்டத்தொடர் என்று ஆளுநர் கூறியதுதான் எனக்கு மிகவும் பிடித்தது ஒன்று என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய முக ஸ்டாலின், ஆளுநர் பேசியதில் எங்களுக்கு பிடித்தது என்னவென்றால், உட்காருங்கள் இந்த அரசாங்கத்தின் இதுதான் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் என்று தெரிவித்தார். … Read more

#BREAKING: வரும் 5-ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்.!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப்.5-ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கூட்டத்தொடர் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில், பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் வரும் 5-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு நாளை பேரவையில் … Read more

இன்று நள்ளிரவுக்குள் நல்ல முடிவு வெளியாகுமா? – தொல் திருமாவளவன்.!

7 பேரையும் விடுதலை செய்வதற்குத் தமிழக ஆளுநர் இன்று நள்ளிரவுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுநர் ஒருவாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் விதித்த கால அவகாசம் முடிவுற்ற நிலையில், இதுதுகுறித்து ஆளுநர் நல்ல முடிவை … Read more

இதன் தொடர்பாக தான் நானும், முதல்வரும் ஆளுநரை சந்தித்தோம் – அமைச்சர் ஜெயக்குமார்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரை சந்தித்தோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சற்றுமுன் சந்தித்து பேசியுள்ளனர். பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து பேசப்படும் என்று தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரை சந்தித்தோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நல்ல முடிவை எடுத்து 7 … Read more

#BREAKING: சற்றுநேரத்தில் ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி.!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சற்று நேரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திக்க உள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சற்று நேரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திக்க உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து பேசப்படும் என்று தகவல் கூறப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடருக்கு ஆளுநருக்கு அழைப்பு விடுக்க உள்ளார் முதல்வர். ஆளுநர் சந்திப்பு முடிந்து செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆளுநர் சந்திப்பில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் ஜெயக்குமார் சந்திக்கிறார் என்பது … Read more

#BREAKING: தமிழ்வழி இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

தமிழ் வழியில் பயின்றோருக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வில் 20% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு டி.என்.பி.சி தேர்வில் 20 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். அரசுப்பணிகளில் தமிழ் வழியில் படித்தோருக்கான முன்னுரிமை இட ஒதுக்கீட்டு சட்டம் கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தில் சில திருத்தங்கள் மட்டும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு செய்யப்பட்டது. ஆனால், … Read more

#Breaking: ஆளுனருடன் முதல்வர் பழனிசாமியின் சந்திப்பு திடீர் ரத்து!

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் பழனிசாமி இன்று மாலை சந்திக்கவிருந்த நிலையில், திடீரென அந்த சந்திப்பு ரத்தானது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், 7 பேர் விடுதலைக்கு ஒப்புதல் கேட்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இதற்கு ஆளுநர் காத்து வருவதால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை 5 மணிக்கு சந்தித்து பேசவிருந்தார். … Read more

இன்று மாலை ஆளுநரை சந்திக்கும் முதல்வர்.. 7 பேர் விடுதலை குறித்து பேச வாய்ப்பு?

சென்னை ராஜ்பவனில் இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து பேசுகிறார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றது. இதன் காரணமாக 7 விடுதலைக்கு ஒப்புதல் கேட்டு தமிழக அரசு கோப்புகளை சமர்ப்பித்த நிலையில், ஆளுநர் இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வருகிறார். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை … Read more

“கெட்டவுட் கவர்னர்”- 7 பேர் விடுதலை குறித்து மனிதநேய கட்சியின் பொது செயலாளரின் அதிரடி பேச்சு!

7 பேர் விடுதலை குறித்து மனிதநேய கட்சியின் பொது செயலாளர் தமீமுன் அன்சாரியின் அதிரடி பேச்சு. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யபட்ட 7 பேரின் விடுதலை குறித்து பல தலைவர்களும், பொதுமக்களும் விடுதலை செய்யுமாறு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நாகையில், செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய மனிதநேய கட்சியின் பொது செயலாளர் தமீமுன் அன்சாரி, உச்சநீதிமன்றம் அளித்த கருத்தின்படி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கும், பன்னோக்கு விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கைக்கும், … Read more

பிரதமர் மோடியை இன்று மாலை சந்திக்கிறார் -ஆளுநர் பன்வாரிலால்!

பிரதமர் மோடியை இன்று மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் சந்திக்கிறார். சென்னையில் நேற்று ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக பாஜக தலைவரான‌ எல்.முருகன் இன்று திடீரென சந்தித்தார். அப்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இன்று காலை விமானம் மூலம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னையில் இருந்து டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். தற்போது, டெல்லி … Read more