மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு சரியாகத்தான் வைத்துள்ளார்கள்-விஜய்க்கு அமைச்சர் பதிலடி

விஜயை முதல்வரிடம் அழைத்து சென்று பேசவில்லை என்றால் மெர்சல் படம் வந்து இருக்காது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசுகையில்,  யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்திருக்க வேண்டும்.மேலும் சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுநர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுகிறார்கள். யார் மீது பழி போட வேண்டுமோ, அதைச் செய்யாமல் லாரி ஓட்டுநர் மீது பழிபோடுகிறார்கள் என்று பேசினார். இது குறித்து அமைச்சர் … Read more

பேனர் விவகாரம் குறித்து விஜய் பேச்சு ! பெரிசா எடுக்க வேண்டிய அவசியம்-பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

விஜய் பேசியதை பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நேற்று பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது அரசியல் வட்டாரங்களில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் நேற்று பேசுகையில்,சுபஸ்ரீ விவகாரத்தில் பேனர் வைத்தவர்களை கைது செய்யாமல் லாரி ஓட்டுனர்களையும்,அச்சடித்தவர்களையும் கைது செய்வதாக குற்றம் சாட்டினார்.இவரது கருத்துக்கு  அரசியல் கட்சித் தலைவர்களும் பதில் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து  முன்னாள் மத்திய … Read more

இவங்க மேல மயிரளவு கூட மரியாதையும் இல்ல,பயமும் இல்ல- கமல் வெளியிட்ட ஆவேச வீடியோ

அரசின் அலட்சியத்தால் பல ராகுக்கல்,பல சுபஸ்ரீகள் கொல்லப்பட்டிருக்காங்க என்று கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் ஸ்கூட்டியில் சென்ற போது அவர் மீது பேனர் மேலே  விழுந்ததில் கீழே விழுந்தார்.அந்த சமயத்தில் அவர் பின்னே வந்த லாரி அவர் மீதி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.மேலும் சுபஸ்ரீ மரணம் … Read more

சுபஸ்ரீ விவகாரம் குறித்து பேசிய விஜய் !நல்ல ஒரு மேடையை நியாயமாக பயன்படுத்தியுள்ளார் விஜய்-கமல் பாராட்டு

சுபஸ்ரீ விவகாரத்தில் விஜய் நியாயத்திற்கு குரல் கொடுத்துள்ளார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் பேனர் கீழே விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பின்னே வந்தே லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் இது குறித்து பேசினார். அப்பொழுது அவர் கூறுகையில்,சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுநர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுகிறார்கள். யார் … Read more

வெறும் 1000 ரூபாய் தான் !சுபஸ்ரீயின் உயிரை பறித்த லஞ்சம்?

சுபஸ்ரீ உயிரிழக்கக் காரணமான பேனரை வைப்பதற்கு, மாநகராட்சி ஊழியர்களுக்கு ரூ. 1,000  லஞ்சம் வழங்கியதாக ஆடியோ ஓன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த  சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர்  மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான ஜெயகோபால் மீது  … Read more

சுபஸ்ரீ குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி

திமுக அறக்கட்டளை சார்பில் சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டது  என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த  சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர்  மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனையடுத்து  சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு  பல்வேறு அரசியல்  கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து … Read more

சுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு

சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான ஜெயகோபால் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணை அருகே  அதிமுக பிரமுகர் மகளின் திருமணத்திற்க்காக வைத்திருந்த பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.இது தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நீதிமன்றமும் கண்டனத்தை பதிவு செய்து அரசியல் கட்சிகளை பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய அறிவுறுத்தியது. சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான ஜெயகோபால் மீது ஏற்கனவே, 304(A), 279, 336 ஆகிய பிரிவுகளில் … Read more

சுபஸ்ரீக்கு நிகழ்ந்தது போல் வேறு யாருக்கும் நடந்து விட கூடாது-உதயநிதி ஸ்டாலின்

சுபஸ்ரீக்கு நிகழ்ந்தது போல் வேறு யாருக்கும் நடந்து விட கூடாது என்று திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த  சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர்  மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள … Read more

பேனர் வைக்க மாட்டோம்-திமுக பிரமாணப்பத்திரம் தாக்கல்

சட்டவிரோதமாக பேனர் வைக்கமாட்டோம் என்று திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில்  சுபஸ்ரீ என்ற இளம்பெண் தனது  ஸ்கூட்டியில்  வந்து கொண்டிருந்தபோது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.ஆனால் அவர் பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது.இதனால் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில், திமுக நிகழ்ச்சிகளில் … Read more

எந்த விழாவிலும் பேனர்கள் வைக்க கூடாது-மு.க.ஸ்டாலின்

எந்த விழாவிலும் பேனர்கள் வைக்க கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் விழா  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது. எந்த விழாவிலும் பேனர்கள் வைக்க கூடாது.கருணாநிதி பிறந்த நாள் செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படும். தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் பெயர்களை முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்.திமுகவின் சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது.டைடல் பார்க் ஒன்றே போதும் திமுகவின் சாதனைக்கு .கருணாநிதியை பார்த்துதான் … Read more