அயலான் படத்தின் டப்பிங் பணிகளை பூஜையுடன் தொடங்கிய படக்குழு..!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் டப்பிங் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.  நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். டாக்டர் படம் மார்ச் மாதம் 26ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் அயலான் படத்தினை ‘இன்று நேற்று நாளை’ படத்தினை இயக்கிய ரவிகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்தி கேயனுடன் ரகுல் ப்ரீத்தி சிங்,யோகி பாபு மற்றும் கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். … Read more