விமான நிலையத்துக்கான பாதுகாப்பு கட்டணத்தை பயணிகளிடமிருந்து உயர்த்தி வசூலிக்க விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக இயங்காமல் இருந்த விமானங்கள் தற்போது சில கட்டுப்பாடுகளுடன் இயங்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களை பாதுகாக்கும் பணிகளுக்காக விமான சேவை நிறுவனங்கள் பயணிகளிடமிருந்து டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து பாதுகாப்புக்கான கட்டணத்தையும் வசூலித்து அதை மத்திய அரசுக்கு செலுத்தி வருகின்றது. இந்நிலையில் உள்நாட்டு விமான போக்குவரத்தில் விமான நிலைய […]