48 நாள்கள் விரதம் இருந்த மாவட்ட ஆட்சியர்!

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள்கோவிலில்  40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி வரதர் மக்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை1-ம்  தேதி முதல் கடந்த மாதம் 17-ம் தேதி வரை அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முதல் 31 நாள்கள் வரை அத்திவரதர்சயன கோலத்திலும், அடுத்த 17 நாள்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அத்திவரதரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை … Read more

அனந்தசரஸ் குளத்தில் பொற்றாமரைக் குளத்தின் நீரை நிரப்ப கூடாது -உயர்நீதிமன்றம் உத்தரவு !

காஞ்சிபுரம் பெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த ஜூலை 1-ம் தேதி அனந்த குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்க தொடங்கினார். முதல் 31 நாள்கள் சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர். பின்னர் கடந்த 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து அத்தி வரதரை காண தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். மேலும் கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் இருந்து பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசனம் செய்ய வந்தனர். அத்திவரதரை … Read more

இனி அத்திவரதர் 2059-ம் ஆண்டு தான்… !நள்ளிரவில் குளத்தில் வைக்கப்பட்ட அத்திவரதர்!

அத்திவரதர் வைபவத்தின் 48-வது நாளான நேற்று காலை மற்றும் மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஆகம விதி படி அத்திவரதரை வைப்பதற்கான பணிகள் நடைபெற்றது.இதை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அத்திவரதர் வசந்த மண்டபத்தில் இருந்து அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி  மண்டபத்தில் சயன கோலத்தில் வைக்கப்பட்டார். அவர் அருகில் நாக சிலைகளும் வைக்கப்பட்டது.40 வருடங்கள் அத்திவரதர் எந்தவிதமான பாதிப்பு ஏற்படாமல் இருக்க மூலிகை கலந்த தைலக்காப்பு பூசப்பட்டு உள்ளது.அத்திவரதர் சிலை வைக்கப்பட்டதும் காஞ்சிபுரம் சுற்று வட்டாரத்தில் … Read more

அத்திவரதர் தரிசனம் இன்று நள்ளிரவு வரை மட்டுமே !

அத்திவரதர் தரிசனம் இன்றுடன்  நிறைவு பெறுவதால் நாளை கோவில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்பட உள்ளார். நாளை அத்திவரதருக்கு 6 கால பூஜைகள் ஆகம விதிப்படி நடைபெற உள்ளது. அதன் பின்னர் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்படுவர்.அத்திவரதர் குளத்தில்  கொண்டு செல்லப்படுவதால் நாளை பக்தர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அளித்த பேட்டியில்  இரவு 9 மணிக்கு கிழக்கு கோபுர வாசல் மூடப்பட்டு உள்ளே இருக்கும் பக்தர்கள் மட்டும் நள்ளிரவு … Read more

அத்திவரதர் பாதுகாப்பு பணியில் காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு!

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வசந்த மண்டபத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சயனகோலத்தில்  காட்சியளித்தார். பிறகு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இன்று வரை நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். இன்றுடன் அத்திவரதர் வைபவம்  நிறைவடைய உள்ளது.இதை தொடர்ந்து 45 நாள்களுக்கு மேலாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறைக்கு டிஜிபி திரிபாதி பாராட்டு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் பாதுகாப்பு  பணியில் இருந்த ஒவ்வொரு … Read more

அத்திவரதர் தரிசன நீட்டிக்கக்கோரிய மனு தள்ளுபடி !

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வசந்த மண்டபத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சயனகோலத்தில்  காட்சியளித்தார். பிறகு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இன்று வரை நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். இன்றுடன் அத்திவரதர் வைபவம்  நிறைவடைய உள்ளது.இந்நிலையில்  தரிசன நாள்களை நீடிக்க கோரிய இரண்டு மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது. மத வழிபாடு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதி மணிகுமார் , சுப்பிரமணியன் … Read more

இன்றுடன் நிறைவு பெறுகிறது அத்திவரதர் வைபவம்!

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வசந்த மண்டபத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி  முதல் 31-ம் தேதி வரை அத்திவரதர் சயனகோலத்தில்  காட்சியளித்தார். பின்னர் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இன்று வரை நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை காஞ்சிபுரத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் அத்திவரதரை தரிசனம் செய்த பிறகே தரிசனம் நிறைவடையும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.மேலும் நாளை அதிகாலை தரிசனம் நிறுத்தப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள அனைவரையும் … Read more

தன் காதலனுடன் சென்று அத்திவரதரை தரிசனம் செய்த நயன்தாரா !

கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் இன்று 46-வது நாளாக அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அதிலும் கடந்த சில நாள்களாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டு உள்ளது. இன்று ஆடி கருட சேவை என்பதால் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.இதனால் இன்று பிற்பகல் 12 மணிக்கு கிழக்கு கோபுர வாசல் மூடப்பட்டு … Read more

அத்திவரதர் கோவில் வளாகத்தில் பிரசவம் !

காஞ்சிபுரம்  வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இதை அடுத்து கடந்த மாதம் ஜூலை 1-ம் தேதியில் இருந்து இன்றுடன் 45 நாள்களாக  காட்சியளித்து வருகிறார். நாளை மறுநாளுடன் அத்திவரதர் தரிசனம் முடிகிறது. இதனால் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.இன்று அத்திவரதரை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர் .இந்நிலையில் இன்று விஜயா என்ற கர்ப்பணி பெண் அத்திவரதரை தரிசனம் செய்ய வந்து உள்ளார். அத்திவரதரை தரிசனம் செய்ய … Read more

“பித்தலாட்டமா பன்ற, தொலைச்சிருவேன் ஜாக்கிரதை” – இன்ஸ்பெக்டரை வெளுத்து வாங்கிய காஞ்சிபுர கலெக்டர் !

காஞ்சிபுரம் அத்திவரதர் ஆலைய தரிசனத்தில் பாஸ் இல்லாமல் பக்தர்களை அனுப்பியதாக அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஒருவரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கோபத்துடன் திட்டும் வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது. அத்திவரத்தரை நாள்தோறும் தரிசிக்க தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்கள் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தரிசிக்க வரும்  பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சுமார் 2,000 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள் தரிசிக்க வசதியாக பாஸ் மூலம் சிறப்பு … Read more